நாழிகை

இருள் உறங்கும் செந்நிற மேடையில்
தனியொரு விதையாய்,
உயிர்மட்டும் வேகம் கொள்ள
இடையும் உணர்வும்-
விழித்தோன்றுமுன்
எனைவளர்க்க,
உருவம் சேர்ந்த பின்னும்
காட்சி மறையவில்லை
முகவரியும் தென்படவில்லை.

விரல்தோகை சாமரம் வீச
இதமான சொற்றொடர்களில்,
அன்பெனும் மொழியை
கற்றலானேன்.

எந்நிலம் அதிர
வெப்பம் எனை சூழ்ந்ததால்
எதிர்மறை ஆற்றல்
எதுவென உணர்தலானேன்.

எனை சூழ்ந்த அனுக்கள்
உரைந்து போக
கனவிலும் கலையாத ஓவியம்
காற்றில் நிலைக்குலைந்ததை
ஏற்கலானேன்.

நானெனும் உருவம்
முழுமதியின் வட்டத்திற்குள்
கரை சூழ்ந்து வளர்ந்ததில்-
முழுமையான எப்படைப்பும்
கலங்கமின்றி ஒளி சேர்வதில்லை
என அறியலானேன்.

பகல் வளர்க்கும் உயிர்கள்
பகல் நுழையா கூட்டுக்குள்
முழுமையாவதில்-
இயற்கையின் ஆற்றல்
சொல்லிலடங்காதவை
என தீர்கமானேன்.

உன் அம்சமாய்
அனைத்தும் அறிந்த எனக்கு
உமையல்லாது யாவரும்
போற்றப்படுபவர் என
விழித்திறந்ததும் போற்றலானேன்.

செம்மேக ஓடையில்
கலைந்திடாத என் தேகம்
கலைந்திருக்கும் உன் வாழ்வில்
கவங்கரையாய் வீற்றிருப்பேன்
உன் விழியோரமாய்
காவலனின் மறுப்பிறப்பாய்......
நாட்குறிப்பு

எழுத்துக்களின் பறிமாற்றத்தில் உணர்வுகள் புதிதல்ல,
எழுது கோளின் வரைந்த வரிகளின் வரிசையில் அர்த்தங்கள் புதிதல்ல,
திசைகள் பிரிந்தாலும்
சுவாசம் புதிதல்ல,
ஓடையின் சலசலப்பில் நிறம் மங்கிடாத வெண்பூக்கள் புதிதல்ல,
நாட்குறிப்பின் நிதர்சனங்கள் 
சிந்தனையின் சிறைவாசத்தில் புதிதல்ல,
கலையாத கூட்டுக்குள் கலைந்த கற்பனைகள்....



கருத்துகள்