இடுகைகள்

ஆகஸ்ட், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல்

படம்
காதல் மனம் சார்ந்ததல்ல மண் சார்ந்தது.. மனம் சார்ந்ததென்றால் மனிதற்கு மட்டும் மகுடம் சூடியதாகிவிடும். மனிதர்க்குள் துளிர்விடும் காதல்,. நிலம் சேர்ந்ததோடு பறந்தும், விரிந்தும், சுழன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆகாயம் மண்மீது கொண்ட தீராத காதல்- வரட்சியால் தேகம் துவண்டாலும் பெறுமழையால் பசுமை  பெற்றுத் தருவது காதலில் முதன்மையானது. தன்னை மகிழ்வித்த காதலனுக்கு பல வண்ண மலர்களால் புன்னகையுடன் வரவேற்கும் நிலமங்கை.... ஐம்புலங்களுக்குள்  கட்டுண்ட காதல்- இயற்கையுடனும் தஞ்சம் புகுந்ததை புலன்களைக் கடந்து வாழும் காதல் உணரச்செய்யும். வெண்மேகம் பூட்டிய பந்தலில் மறைந்திருக்கும் நட்சத்திரங்கள், மழைச்சாரலின் வருகைக்காக தாகத்தோடு காத்திருக்கும் மணல் மேடைகள், கதிர்கள் வருடியதால் மனமகிழ்ந்து துயிலுரியும் பனிக்குவியல்கள்... எண்ணில் அகப்படாத நிகழ்வுகள் காலனையும் கடந்து ஒளிரும் இயற்கை பரிமாற்றங்கள்.. நிழலின் அசைவுக்கும் கைக்கோர்த்து, மண்ணில் சிதரிய போதும் சிதறாமல்- நினைவில் வாழ்வது- காதல்

இந்தியா

படம்
மீன் வடித்த  விழியில் கூர் வாளின் வீரம் கண்டேன், புகழோடு, அறனும், செல்வமும் சேர்த்து கடல் தாண்டி கோலோச்சிய  மூவேந்தர் கண்டேன், பட்டின் பகட்டும், நெற்கலஞ்சியத்தின்  செழிப்பும் மண்ணில் இறுகிய ஆபரணங்களும், ஒன்றாய்  மெருகேறிய பாரதம் கண்டேன், உருவங்கள் மாறினாலும் உள்ளம் ஓன்றான பன்முக வழிப்பாட்டும், இறையும் கண்டேன், செருக்கோடு புவியில் வாழ்ந்த நான் வெண்தோல் அணிந்த கயவனின் கூட்டம் எக்குதிக்கும் பரவக் கண்டேன், நிழல் தேடிய அயலான், வேர் தகர்த்து மண்ணிற்குரிய அடையாளங்களை புதைக்கக் கண்டேன், விடுபடும் வேட்கையும், கலவரமும், பற்றும் கலந்து ஆண்டு முன்னூறு கடந்ததைக் கண்டேன், நள்ளிரவில் சுதந்திரம் வானுயரக் கண்டேன், நெடுங்கால விளங்குகள் அவிழ்க்கப்பட்டிருப்பதை மைந்தர்கள் கூத்தாடியதைக் கண்டேன், என் மக்கள், என் நிலம் என காலம் கடந்து செல்வதை உற்று நோக்கிய ஆகாயத்தின் மின்னல் நிலத்தில் பிளவுப்படுவதைக் கண்டேன் பெண்ணின் கண்ணியம் தூற்றப்படுவதைக் கண்டேன், கோபுரங்கள் உயர்ந்தாலும் சாமானியனின் கதவுகள் அடைப்பட்டிருப்பதைக் கண்டேன், நாகரீக மோகத்தில் நானென்ற சுய அடையாளம் இழப்பதைக் கண்டேன், மாற்றங்களின்...

நாழிகை

படம்
இருள் உறங்கும் செந்நிற மேடையில் தனியொரு விதையாய், உயிர்மட்டும் வேகம் கொள்ள இடையும் உணர்வும்- விழித்தோன்றுமுன் எனைவளர்க்க, உருவம் சேர்ந்த பின்னும் காட்சி மறையவில்லை முகவரியும் தென்படவில்லை. விரல்தோகை சாமரம் வீச இதமான சொற்றொடர்களில், அன்பெனும் மொழியை கற்றலானேன். எந்நிலம் அதிர வெப்பம் எனை சூழ்ந்ததால் எதிர்மறை ஆற்றல் எதுவென உணர்தலானேன். எனை சூழ்ந்த அனுக்கள் உரைந்து போக கனவிலும் கலையாத ஓவியம் காற்றில் நிலைக்குலைந்ததை ஏற்கலானேன். நானெனும் உருவம் முழுமதியின் வட்டத்திற்குள் கரை சூழ்ந்து வளர்ந்ததில்- முழுமையான எப்படைப்பும் கலங்கமின்றி ஒளி சேர்வதில்லை என அறியலானேன். பகல் வளர்க்கும் உயிர்கள் பகல் நுழையா கூட்டுக்குள் முழுமையாவதில்- இயற்கையின் ஆற்றல் சொல்லிலடங்காதவை என தீர்கமானேன். உன் அம்சமாய் அனைத்தும் அறிந்த எனக்கு உமையல்லாது யாவரும் போற்றப்படுபவர் என விழித்திறந்ததும் போற்றலானேன். செம்மேக ஓடையில் கலைந்திடாத என் தேகம் கலைந்திருக்கும் உன் வாழ்வில் கவங்கரையாய் வீற்றிருப்பேன் உன் விழியோரமாய் காவலனின் மறுப்பிறப்பாய்...... நாட்குறிப்பு எழுத்துக்களின் பறிமாற்றத்தில் உணர்வுகள் புதிதல்ல, எழுத...

மௌனம்

படம்
இந்தக் கவிதை மௌனத்தின் ஆழ்ந்த இருப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பார்வைக்குள் சிக்கிய நினைவுகள், வெளிப்பட முடியாத உணர்வுகள், சொற்களாக மாற மறுக்கும் வலி- இவை் மௌனத்தின் வழியாக வெளியில் செல்லும் நிலையை கவிதை காட்டுகிறது. கவிதை பார்வைக்குள் அகப்பட்ட  நினைவுகள் மனம் ஈர்க்காமல், தன் நிலை பகிராமல் வெளியேறும் வாசல்- மௌனம். உணர்வுகள் சிதைத்த வரிகள் உதடுகளின் உரசல்கள் கடந்து,சலனமில்லாமல் வெளியேறும் மொழி- மௌனம். அலையாய் நடை பழகும் சப்தம் தடை தகர்த்தால் நிலையான நிசப்தம் உள்வாங்கிவிடும். புயல் வசிக்கும் கூட்டுக்குள்,இடராமல் இமை  தோகை விரித்து காட்சிக்கு முரண்படாமல் வசிப்பது மௌனம். வெற்றியின் சாரல் புயல் மழையாய் கடந்தாலும் தனிமையின் தேடலில் புலன்கள் ஒன்றிணைய நிழலாய் தொடர்ந்து அமைதிக்கொள்வது மௌனம். இருள் உறங்கும் செந்நிற மேடையில் தனியொரு விதையாய், உயிர்மட்டும் வேகம் கொள்ள இடையும் உணர்வும்- விழித்தோன்றுமுன் எனைவளர்க்க, உருவம் சேர்ந்த பின்னும் காட்சி மறையவில்லை முகவரியும் தென்படவில்லை. விரல்தோகை சாமரம் வீச இதமான சொற்றொடர்களில், அன்பெனும் மொழியை கற்றலானேன். எந்நிலம் அதிர வெப...