பிறை
செங்கதிர் அரசாளும் நீலத் திரையில், மௌனத்தின் முழக்கத்தில் துளிர்விடும் வெண்பூக்கள் மலர்ந்தும், மலராமலும் கண் சிமிட்ட- பிறை மடந்தை குலம் தழைக்க துயில் துறக்கும் இருள் காலம். விதிக்கப்பட்ட வடிவத்திற்குள் கறை குடியேறியும் வாசல் மறுத்ததில்லை. கார் முகில் கூட்டம் மறைத்த போதும் தோய்வுற்றதில்லை. இருள் விழுங்கி செரித்தும் சலனமில்லை. உதித்த பொழுதின் துளிகளுக்கும் சான்றில்லை. கரையும் நேரம் காற்றுக்கும் தென்படவில்லை. இல்லையின் பயணத்தில் நிலையில்லா ஆற்றல் நிறைவாய் மறைந்திருப்பது- விரிந்த சுவாசத்திற்குள் அகப்பட்டிருக்கும் இயற்கையின் எழுதப்பட்ட இரகசியம். இரகசியத்தில்- பதியம் வைத்த புலண்களுக்கு பிறை சேரா நிலமென்று எதுவுமில்லை. ஒளியோடு பயணிக்கும் மனம் மறைத்த உயிர்களுக்கு உயரிய மரபும் பயணற்று போனதில்லை, மாறாக காரியங்களின் சுமைகளால் தோய்வடைந்து, புதுப்பிக்க ஆழ்ந்த நித்திரையில் அடைப்பட்டிருக்கின்றன. நாட்குறிப்பு கண்கள் விழித்திராத காட்சிகளும், செவிகள் நெருங்கிடாத செய்திகளும், கரங்கள் வருடா உருவங்களும் மர்மமாய் புணரப்பட்டாலும், அதனுள் மறைந்தாருக்க...