கற்றவை
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்வின் பயணத்தைப் பிறப்பிலிருந்து முதிர்ச்சிவரை எடுத்துச் சொல்கிறது. அழுகை எனும் பலவீனத்தில் தொடங்கி மகிழ்ச்சி என உயர்ந்து இறுதியில் சிரிப்பு என்ற விடுதலையில் வந்து முடிகிறது. கவிதை பிறப்பு அழுகை கற்றுத்தந்தது, அழுகை வலிமை தந்தது, வலிமை போராட கற்றுத்தந்தது, போராட்டம் துணிவை தந்தது, துணிவு முயற்சியை கற்றுத்தந்தது, முயற்சி ஆற்றல் தந்தது, ஆற்றல் தன்னம்பிக்கை கற்றுத்தந்தது, தன்னம்பிக்கை ஆள கற்றுத்தந்தது, ஆளுமை பொறுப்பை கற்றுத்தந்தது, பொறுப்பு உயரம் தந்தது, உயரம் அடக்கம் கற்றுத்தந்தது, அடக்கம் அமைதி தந்தது, அமைதி சிந்திக்க கற்றுத்தந்தது, சிந்தனை வடிவம் தந்தது, வடிவம் ஆராய கற்றுத்தந்தது, ஆராய்ச்சி புதுமை கற்றுத்தந்தது, புதுமை வளர்ச்சி தந்தது, வளர்ச்சி முன்னேற்றத்தை கற்றுத்தந்தது, முன்னேற்றம் அரவணைக்க கற்றுத்தந்தது, அரவணைப்பு அன்பை தந்தது, அன்பு ஒற்றுமை கற்றுத்தந்தது, ஒற்றுமை மகிழ்ச்சி தந்தது, மகிழ்ச்சி சிரிக்க கற்றுத்தந்தது, சிரிப்பு அழுகையை மறக்க கற்றுத்தந்தது.