இடுகைகள்

# அன்பின் கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அன்பு

படம்
இலையுதிர் காலம் கண்டு துளிர்விடும் கிளையின் அன்பு புழுதி பறக்கும் தரையின்  அலறல் கண்டு நீர் சொரியும் முகிலின் அன்பு கதிரின் வெப்பம் கொழிக்கும் பாலை நிலம் கண்டு நீர் உமிழும் நிலத்தின் அன்பு காற்றளந்து இறை தேடும் பறவை கூட்டம் கண்டு நிழற்குடை வளர்க்கும் மரத்தின் அன்பு நீருறியும் வேர்கண்டு மழை கொட்டும் கார்மேகத்தின் அன்பு இடைவிடாது நீர்தூவும் மழைக்கு வண்ணத்தால் புகழ் சேர்க்கும் வானவில்லின் அன்பு கூட்டமாய் இரைத் தேடி, எல்லை வகுத்து இனம் காக்கும் விலங்கினங்களின் அன்பு ஊர்ந்து செல்லும்போதும் உறவுக் கூட்டின் விதிமாறாமல் இலக்கை எட்டும் எறும்பினத்தின் அன்பு என அன்பின் மொழியறியா உயிர்களும் உறவாய் வாழும் பசுமைக் கூட்டில் அன்பெனும் மொழி படைத்து உறவெனும் நோக்கம் தந்து புவியோடு வாழையடி வாழையாய்  இனம் வளர்க்கும்  மனிதர்களின் அன்பை மட்டும் பாகுபடுத்தும் எண்ணங்கள் இழிவானவை. பச்சிளம் பருவம் மறையுமுன் விதி நுழைந்து சீர்கெடுவதும், வயது முதிர்ந்தும் பதியாத வாழ்நாளில் வாழ்வு கசப்பதும், குளம் கண்டு தேங்கும் நீர் போல் தேக்கம் கண்டு அன்பது வெளிவரமறுப்பதனால்.... அன்பது உயிரூற்று அன்பது ...