இடுகைகள்

# கற்பனை கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கனவு

படம்
கனவின் தூரிகையில் தீட்டப்பட்ட ஓவியம், நீரில் மிதந்து, காற்றில் வளர்ந்து இருளில் துணை சேர்ந்து, உருவமாய் வெளிச்சத்தின் வரவேற்பில் கரை கடந்து உதித்த- என் உயிரே உன் வாசம் புது மழையாய் உன் மழலை பிறை நிலவாய் உன் இடை மலர் கீற்றாய் உன் மொழி கவிதையாய் உன் பேச்சு மழைச் சாரலாய் உன் புன்னகை குழலிசையாய் உன் அழுகை நதியின் சலசலப்பாய் உன் தோற்றம் செவ்வானமாய் கனவின் எல்லைக்குள் விடுபடாத கற்பனைகள், நிஜமாகிய நினைவில் என் வாழ்வும் நிலையானது. விதையெல்லாம் வனமாகி, வேர்வையின் வெப்பம்  சோம்பல் உருக்கி, கண்ணீரில் துயர் துடைத்து, வலியிலும் வாய்மை தவறாமல், தாய்மைக்கு தலைவணங்கி, சுற்றத்தில் மகிழ்ந்தும், உறவில் நெகிழ்ந்தும், வம்சத்தின் வாயில்  கொற்றவையின் புகழிடமாய் பல்லாண்டு புவியாள புலன்களை வதைத்த விரதம் கலைத்து வாழ்த்துகின்றேன்: உன்னை சுமக்கும்  இயற்கையை வணங்குகின்றேன்.