இடுகைகள்

செப்டம்பர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனுவல்

படம்
பனுவல்-  கருத்துக்களை   வெளிப்படுத்தும் சொற்றொடருக்கு பனுவல் எனப் பொருள். கவிதை மனதின் அசைவுகளை சிதறாமல் ஓரணியாய் வெளிக்காட்டும்  மொழி- மௌனம் மௌனம் அழகானதுதான்- நிசப்தத்தின் இடையில் மெல்லிய ஓசையும், ஓசையின் கோர்வையில்  எட்டிப்பார்க்கும் உணர்வுகளும், உணர்வுகளுக்கு மகுடம் சூட்டும் சொற்றொடர்களும், தொடர்களின் ஆதாரமான  வரிகளும் தனித்துவம் பெறுபவை. தத்தித் தவழும் மழலைக்கு மனம் சேர்க்கும் தாலாட்டில் உதிர்க்கப்படும் வரிகள், துயில் கொள்ளும் காலம் கடந்து துவண்டுவிடாமல், துடிப்போடு வாழ்வதற்கான வரித்தூண்கள். இளங்கால கனவுகள் வலிமை பெற சோர்வில் சுகம் காணாமல், நிமிர்ந்து நடைப்போட வலுசேர்க்கும் வரிகள் போற்றப்படுபவை. தள்ளாடும் முதுமையிலும் வெங்கதிர் கூந்தல் வருடும் விரல் அசைக்கும் காதல் பரிமாற்றம் அர்த்தமுள்ள  வாழ்க்கை வரிகள். பனியின் இருக்கத்திலும், குளிர் உறங்கும் வெண்போர்வையிலும், கதகதப்புடன் புத்துயிர் சேர்க்கும் தேசியம் தாங்கிய வரிகள், எல்லை வீரனின் எல்லையற்ற வீரத்தை தாங்கி நிற்கும் சொற்கேடையம். வாழ்த்தும் வரிகள் மனதோடு சேரட்டும் வசைப்பாடும் வரிகள் செவிசேர்ந்தும் ...