இடுகைகள்

நவம்பர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ராணுவ வீரனின் முதல் காதல்

படம்
என் தேசம், என் மொழி,  என் தாய் கொடி,என் மக்கள்   என்னும் வரையறைக்குள் கட்டுன்று,   என் நாட்டின் திருவிழாக்களில் நான் மலர்ந்து, உலக மேடையில் என் தேசியக்கொடி எழுகையில் உள்ளம் நெகிழ்ந்து, இயற்கை சீற்றத்தில் என் தாயின் அங்கம்  சிதறியதை  சகிக்காமல் தண்ணீர் துளிக்குள் நான் கரைந்து, அந்நிய தேசத்தின் எல்லை என் தாய்மடி தொட கொதித்தெழும் என் சிறங்கள் என  மண்ணை நேசிக்க கற்றுத் தந்த   என் தாய் திருநாட்டில், என் சுற்றும் செழிக்க கொடியேந்திய நன்னாளில்  என் உடையில் கொடி ஏந்தி என் பார்வைக்குள் அகப்பட்டாள்- என்னவள் என்னும்  நேசத்திற்கு உரியவள். பார்வை இணைந்ததோ   தேசம் இணைத்ததோ  தெளிந்த முகத்தில் சிதறிய முத்துக்கள் என்னை ஈர்த்தன. என் வட்டத்திற்குள் பணிகள் தொடர கம்பீர நடையில், வசீகர குரலில்,கூர் போன்ற விழியில் அடைப்பட்டவன் ஆனேன்  பெண்ணினும் நளினம் அவள் சீருடைக்குள் மங்காமல்  மிடுக்காய் காட்சி தந்தாள். என் மனதிற்குள் வசிக்க அனுமதி கோரி நாட்கள் கரைந்தன வருடங்கள் நீண்டன   மாதங்களும் வெகுவாய் மலர்ந்தன  என் மனதை திறக்க என்  உதட...

அன்பு

படம்
இலையுதிர் காலம் கண்டு துளிர்விடும் கிளையின் அன்பு புழுதி பறக்கும் தரையின்  அலறல் கண்டு நீர் சொரியும் முகிலின் அன்பு கதிரின் வெப்பம் கொழிக்கும் பாலை நிலம் கண்டு நீர் உமிழும் நிலத்தின் அன்பு காற்றளந்து இறை தேடும் பறவை கூட்டம் கண்டு நிழற்குடை வளர்க்கும் மரத்தின் அன்பு நீருறியும் வேர்கண்டு மழை கொட்டும் கார்மேகத்தின் அன்பு இடைவிடாது நீர்தூவும் மழைக்கு வண்ணத்தால் புகழ் சேர்க்கும் வானவில்லின் அன்பு கூட்டமாய் இரைத் தேடி, எல்லை வகுத்து இனம் காக்கும் விலங்கினங்களின் அன்பு ஊர்ந்து செல்லும்போதும் உறவுக் கூட்டின் விதிமாறாமல் இலக்கை எட்டும் எறும்பினத்தின் அன்பு என அன்பின் மொழியறியா உயிர்களும் உறவாய் வாழும் பசுமைக் கூட்டில் அன்பெனும் மொழி படைத்து உறவெனும் நோக்கம் தந்து புவியோடு வாழையடி வாழையாய்  இனம் வளர்க்கும்  மனிதர்களின் அன்பை மட்டும் பாகுபடுத்தும் எண்ணங்கள் இழிவானவை. பச்சிளம் பருவம் மறையுமுன் விதி நுழைந்து சீர்கெடுவதும், வயது முதிர்ந்தும் பதியாத வாழ்நாளில் வாழ்வு கசப்பதும், குளம் கண்டு தேங்கும் நீர் போல் தேக்கம் கண்டு அன்பது வெளிவரமறுப்பதனால்.... அன்பது உயிரூற்று அன்பது ...

முடிவுரை

படம்
முடிவுரை உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்வின் ஆழமான வெற்றிடத்தையும், நிறைவேறாத ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.காலம் நகர்ந்தும் வாழ்க்கையின் அர்த்தம் தெளிவாக தெரியாமல் போகும்  ஓரு நிலையை இது காட்டுகிறது. வானம் விரிந்திருந்தாலும் அதன் எல்லை கண்களுக்கு எட்டாதது போல, மனிதன் தேடும் நிறைவு எளிதில் கிடைக்காததாகவே உள்ளது. மேகம் கரைந்து மழையாக  விழுந்தாலும் மண்ணின்  தாகம்  தீராதது போல வாழ்க்கையில் நிகழ்வுகள் பல வந்தாலும் உள்ளத்தின் பசி அடங்காமல் தொடர்கிறது. வெளிப்படையாக இயற்கை இயக்கம் நடைப்பெறுகிறது போல தோன்றினாலும் உள்ளார்ந்த வெறுமை நீங்காத ஒரு அமைதியான வேதனை இந்தக் கவிதையின் மைய உணர்வாக உள்ளது. இது தனிமை, தேடல் மற்றும் நிறைவை நாடும் மனித மனத்தின் நிலையை நுட்பமாக பிரதிபலிக்கிறது. கவிதை முடிவுற்ற காலங்கள் விழித்திருந்தும் வானின் நீளம் தென்படவில்லை. மேகம் கரைந்த நீர்துளிகள் சிந்தியும், மண்ணின் தாகம் தீர்க்கப்படவில்லை. நிலம் இருகிய பாறைகள் குடைந்தும்,பூமியின் புதிர் விடுபடவில்லை. பிறவிகள் ஏழு கடந்தும்,சூரியனின்⁸ கதிர்கள் குன்றியதில்லை. நொடியின்  இடையில் இமை மூடும் விழிகள...