ராணுவ வீரனின் முதல் காதல்
என் தேசம், என் மொழி,
என் தாய் கொடி,என் மக்கள் என்னும் வரையறைக்குள் கட்டுன்று,
என் நாட்டின் திருவிழாக்களில் நான் மலர்ந்து,
உலக மேடையில் என் தேசியக்கொடி எழுகையில் உள்ளம் நெகிழ்ந்து, இயற்கை சீற்றத்தில் என் தாயின் அங்கம் சிதறியதை சகிக்காமல் தண்ணீர் துளிக்குள் நான் கரைந்து, அந்நிய தேசத்தின் எல்லை என் தாய்மடி தொட கொதித்தெழும் என் சிறங்கள் என
மண்ணை நேசிக்க கற்றுத் தந்த
என் தாய் திருநாட்டில்,
என் சுற்றும் செழிக்க
கொடியேந்திய நன்னாளில்
என் உடையில் கொடி ஏந்தி
என் பார்வைக்குள் அகப்பட்டாள்-
என்னவள் என்னும்
நேசத்திற்கு உரியவள்.
பார்வை இணைந்ததோ
தேசம் இணைத்ததோ
தெளிந்த முகத்தில் சிதறிய முத்துக்கள் என்னை ஈர்த்தன.
என் வட்டத்திற்குள் பணிகள் தொடர கம்பீர நடையில்,
வசீகர குரலில்,கூர் போன்ற விழியில் அடைப்பட்டவன் ஆனேன்
பெண்ணினும் நளினம் அவள் சீருடைக்குள் மங்காமல்
மிடுக்காய் காட்சி தந்தாள்.
என் மனதிற்குள் வசிக்க அனுமதி கோரி நாட்கள் கரைந்தன
வருடங்கள் நீண்டன
மாதங்களும் வெகுவாய் மலர்ந்தன
என் மனதை திறக்க என்
உதடுகள் ஒத்துழைக்கவில்லை
மனதின் குரல் வெளிப்படவுமில்லை. மனம் என் ஆசையை நிராகரித்தாலும் விழிகள் விழித்திருக்க தயங்கியதில்லை.
என் உறக்கம் களைத்த
காலை கதிர் என்றும் போல்
அன்றும் என் அறை நுழைந்தது
என்றும் இல்லாத நிசப்தத்துடன்.
மலர் சுமந்த வாகனம்
வீரர்கள் ஒன்று சேர
ஊர்வலமாய் என் முன் வைக்கப்பட்டிருந்தது.
நொடி பொழுதில் புலப்பட்டது நிகழ்ந்தேறிய சம்பவம்.
நாளைய தலைமுறையின் உயிர் காக்க இன்று தன் தலைமுறையை
நாட்டுக்கு அர்ப்பணித்த
என் முதலும், முடிவுமான
காதல் உருவம்
செந்நிற விழிகளில் உதிர்ந்த தீயில் என் உள்ளம் என்னும் மேடையில் உருவம் அழியாமல்
என்னையும் எரித்தது.
மௌனத்தின் மொழியில்
வளர்த்த என் நேசம்
காற்றோடு மொழியில்லாமல்
என் காதல் களைந்தது
என் தேசமே என் காதல் ஆனது.
கருத்துகள்
கருத்துரையிடுக