அலைமகள்
கதிர் விழிக்க உதித்தவளடி - நான்! வாசலில் ஈரம் காண விரைந்தவளடி -நான்! பச்சரிசிக் கோலமாய் வீற்றிருப்பவள் - நான்! எறும்பு பசியார மனமகிழ்பவள்- நான்! நிலவாசல் சௌந்தர்யமடி- நான்! மஞ்சள், குங்குமம், மாவிலை தோரணமும் - நான்! என் பார்வையில் ஐஸ்வர்யம் வளர துதிப்பவள்- நான்! விடியலில் கண்விழிக்கும் மங்கையடி- நான்! குளிர் நீராடி, உடுத்திய தூய ஆடையின் வாசம்- நான்! சமையலறை சுத்தத்தின் அங்கம்- நான்! அசுத்தம் கலைத்து வாரிய நிலத்தின் முதலடி - நான்! பின்னிய கருங்கூந்தலின் நளினமடி- நான்! மொட்டவிழா மலர்களின் வசிப்பிடம்- நான்! கையில்குலுங்கும் வளையோசையடி - நான்! பூரண ஆடையின் காட்சியடி- நான்! வசீகர முகத்தின் சிரிப்பொலியும்- நான்! உடல் கசக்கிய வியர்வையின் பயணமடி- நான்! சில்லரை சலசலப்பில் பரவியவள்- நான்! அணைக்கட்டி சேர மறுப்பவலும்- நான்! பசும் நெய் திரித்த அகல் விளக்கின் பிரகாசமடி- நான்! பண்போடு ஒளியூட்டும் தீப்பொறியும்- நான்! அழகிலக்கியத்தின் இலக்கணமடி- நான்! பொருளுணர்ந்து வாசிப்பவரின் நிழலில்- நான்! மழலை முகச்சிவப்பின் புண்ணகையடி- நான்! குலுங்கி இசைப்பாடும் தோற்றமும்- ...