இடுகைகள்

அக்டோபர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் நீயாததால்....

படம்
நான் முகிலாக பிறந்ததால் நீ கடல் நீலம் ஆனாய் - நான் நினைத்த கனம் நீ என்னுள் புதைந்திருக்க.. நான் தென்றலாய் வீசியதால் நீ மலர் கொடி ஆனாய்- நான் நினைத்த கனம் உன்னை வருடிச் செல்ல.. நான் துன்பம் ஆனதால் நீ கண்ணீர் ஆனாய்- நான் நினைத்த கனம் உன் வரவை நான் காண.. நான் இதயம் ஆனதால் நீ உயிரானாய்- நான் நினைத்த கனம் துடிப்போடு உன்னை அழைக்க.. நான் மௌனம் ஆனதால் நீ நிசப்தம் ஆனாய்- நான் நினைத்த கனம் உன்னை சூழ்ந்திருக்க.. நான் முதுமையானதால் நீ முடிவுரை ஆனாய்- நான் நினைத்த கனம் உன் வாசல் காத்திருக்க... நான் உணர்வானதால் நீ செயலானாய்- நான் நினைத்த கனம் உன் தோற்றம் ஏந்திக்கொள்ள... நான் மலரானதால் நீ மகரந்நமானாய்- நான் நினைத்த கனம் உன் உருவமாய் மாற... நான் கவியாததால் நீ கற்பனையானாய்- நான் நினைத்த கனம் உன்னுள் வாழ்ந்திருக்க... காற்றசைவில் மனமாடும் கூட்டுக்குள் காதலின் அசைவு பதிக்கப்பட்டிருப்பது காதலின் புகலிடமாகும்.. தெய்வீகமாகும்.

வறுமை

படம்
வறுமை  உள்ளடக்கம் இந்தக் கவிதை, வறுமையை ஒரு பொருளாதார நிலையாக அல்லாமல், மனித உடல், உயிர், சுவாசம், காலம் மற்றும் சமூக அடுக்குகள் அனைத்தையும் ஆக்கிரமிக்கும் முழுமையான அனுபவமாகப் பதிவு செய்கிறது. வாய்ப்புகள் இருந்தும் அனுமதி மறுக்கப்படும் சமூக வாசல்கள், அடிப்படை தேவைகளே அடைப்பாக மாறும் வாழ்வியல் சூழல், உயிர் காக்க வேண்டிய ஆதிமூல சக்திகள் உயிர் கெடுக்கும் பசியாக உருமாறும் நிலை ஆகியவை இதில் தீவிரமாக வெளிப்படுகின்றன. இறுதியில் மண்ணுக்குள் புதைந்திருக்கும் கம்பீரம் மேல்தளத்தை அசைக்க முனைவது மூலம், ஒடுக்கப்பட்ட வாழ்வின் அடக்கமில்லாத எதிர்ப்பும் மறைந்த வலிமையும் உணர்த்தப்படுகிறது. கவிதை முழுமை பெற்ற அடித்தளங்கள் காற்றில் பயணிக்க தேர்ந்தெடுக்கப்படாதவை- நிறைவாகிய வாசல் வரவேற்கவும் அனுமதி இல்லாதவை. வறுமையின் பிடியில்- செந்நீர் ஊற்று ஊடுருவ மறுக்கும், வெள்ளைக் கூட்டின் நகலாய் படர்ந்திருக்கும் மேலாடை சுருக்கமும் விரிவடைய மறுக்கும், ஆதி மனிதனின் உயிர் வளர்த்த நெருப்பு, பசியாய் உருவெடுத்து உயிர் கெடுக்க இசையும், உடல் சுமக்கும் பாதங்களும், தடம் காணும் கைகளும் பாரமென மண்ணில் இளைப்பாற நினைக்கும், வி...

அலைமகள்

படம்
கதிர் விழிக்க உதித்தவளடி - நான்! வாசலில் ஈரம் காண விரைந்தவளடி  -நான்! பச்சரிசிக்  கோலமாய்  வீற்றிருப்பவள் - நான்! எறும்பு பசியார மனமகிழ்பவள்- நான்! நிலவாசல் சௌந்தர்யமடி- நான்! மஞ்சள், குங்குமம், மாவிலை தோரணமும் - நான்! என் பார்வையில் ஐஸ்வர்யம் வளர துதிப்பவள்- நான்! விடியலில் கண்விழிக்கும் மங்கையடி- நான்! குளிர் நீராடி,  உடுத்திய தூய ஆடையின் வாசம்- நான்! சமையலறை சுத்தத்தின் அங்கம்- நான்! அசுத்தம் கலைத்து வாரிய நிலத்தின் முதலடி - நான்! பின்னிய கருங்கூந்தலின் நளினமடி- நான்! மொட்டவிழா மலர்களின் வசிப்பிடம்- நான்! கையில்குலுங்கும் வளையோசையடி - நான்! பூரண ஆடையின் காட்சியடி- நான்! வசீகர முகத்தின் சிரிப்பொலியும்- நான்! உடல் கசக்கிய  வியர்வையின் பயணமடி- நான்! சில்லரை சலசலப்பில் பரவியவள்- நான்! அணைக்கட்டி சேர மறுப்பவலும்- நான்! பசும் நெய் திரித்த அகல் விளக்கின் பிரகாசமடி- நான்! பண்போடு ஒளியூட்டும் தீப்பொறியும்- நான்! அழகிலக்கியத்தின் இலக்கணமடி- நான்! பொருளுணர்ந்து வாசிப்பவரின் நிழலில்- நான்! மழலை முகச்சிவப்பின் புண்ணகையடி- நான்! குலுங்கி இசைப்பாடும் தோற்றமும்- ...

கனவு

படம்
கனவின் தூரிகையில் தீட்டப்பட்ட ஓவியம், நீரில் மிதந்து, காற்றில் வளர்ந்து இருளில் துணை சேர்ந்து, உருவமாய் வெளிச்சத்தின் வரவேற்பில் கரை கடந்து உதித்த- என் உயிரே உன் வாசம் புது மழையாய் உன் மழலை பிறை நிலவாய் உன் இடை மலர் கீற்றாய் உன் மொழி கவிதையாய் உன் பேச்சு மழைச் சாரலாய் உன் புன்னகை குழலிசையாய் உன் அழுகை நதியின் சலசலப்பாய் உன் தோற்றம் செவ்வானமாய் கனவின் எல்லைக்குள் விடுபடாத கற்பனைகள், நிஜமாகிய நினைவில் என் வாழ்வும் நிலையானது. விதையெல்லாம் வனமாகி, வேர்வையின் வெப்பம்  சோம்பல் உருக்கி, கண்ணீரில் துயர் துடைத்து, வலியிலும் வாய்மை தவறாமல், தாய்மைக்கு தலைவணங்கி, சுற்றத்தில் மகிழ்ந்தும், உறவில் நெகிழ்ந்தும், வம்சத்தின் வாயில்  கொற்றவையின் புகழிடமாய் பல்லாண்டு புவியாள புலன்களை வதைத்த விரதம் கலைத்து வாழ்த்துகின்றேன்: உன்னை சுமக்கும்  இயற்கையை வணங்குகின்றேன்.