நான் நீயாததால்....
நான் முகிலாக பிறந்ததால் நீ
கடல் நீலம் ஆனாய் -
நான் நினைத்த கனம்
நீ என்னுள் புதைந்திருக்க..
நான் தென்றலாய் வீசியதால் நீ
மலர் கொடி ஆனாய்-
நான் நினைத்த கனம்
உன்னை வருடிச் செல்ல..
நான் துன்பம் ஆனதால் நீ
கண்ணீர் ஆனாய்-
நான் நினைத்த கனம்
உன் வரவை நான் காண..
நான் இதயம் ஆனதால் நீ
உயிரானாய்-
நான் நினைத்த கனம்
துடிப்போடு உன்னை அழைக்க..
நான் மௌனம் ஆனதால் நீ
நிசப்தம் ஆனாய்-
நான் நினைத்த கனம்
உன்னை சூழ்ந்திருக்க..
நான் முதுமையானதால் நீ
முடிவுரை ஆனாய்-
நான் நினைத்த கனம்
உன் வாசல் காத்திருக்க...
நான் உணர்வானதால் நீ
செயலானாய்-
நான் நினைத்த கனம்
உன் தோற்றம் ஏந்திக்கொள்ள...
நான் மலரானதால் நீ
மகரந்நமானாய்-
நான் நினைத்த கனம்
உன் உருவமாய் மாற...
நான் கவியாததால் நீ
கற்பனையானாய்-
நான் நினைத்த கனம்
உன்னுள் வாழ்ந்திருக்க...
காற்றசைவில் மனமாடும் கூட்டுக்குள்
காதலின் அசைவு பதிக்கப்பட்டிருப்பது
காதலின் புகலிடமாகும்.. தெய்வீகமாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக