காதல்
காதல் மனம் சார்ந்ததல்ல
மண் சார்ந்தது..
மனம் சார்ந்ததென்றால்
மனிதற்கு மட்டும்
மகுடம் சூடியதாகிவிடும்.
மனிதர்க்குள் துளிர்விடும் காதல்,.
நிலம் சேர்ந்ததோடு
பறந்தும், விரிந்தும், சுழன்றும்
இயங்கிக்கொண்டிருக்கின்றன.
ஆகாயம் மண்மீது
கொண்ட தீராத காதல்-
வரட்சியால் தேகம் துவண்டாலும்
பெறுமழையால் பசுமை
பெற்றுத் தருவது
காதலில் முதன்மையானது.
தன்னை மகிழ்வித்த காதலனுக்கு
பல வண்ண மலர்களால்
புன்னகையுடன் வரவேற்கும்
நிலமங்கை....
ஐம்புலங்களுக்குள்
கட்டுண்ட காதல்- இயற்கையுடனும்
தஞ்சம் புகுந்ததை
புலன்களைக் கடந்து வாழும்
காதல் உணரச்செய்யும்.
வெண்மேகம் பூட்டிய பந்தலில்
மறைந்திருக்கும் நட்சத்திரங்கள்,
மழைச்சாரலின் வருகைக்காக
தாகத்தோடு காத்திருக்கும்
மணல் மேடைகள்,
கதிர்கள் வருடியதால்
மனமகிழ்ந்து துயிலுரியும்
பனிக்குவியல்கள்...
எண்ணில் அகப்படாத நிகழ்வுகள்
காலனையும் கடந்து ஒளிரும்
இயற்கை பரிமாற்றங்கள்..
நிழலின் அசைவுக்கும்
கைக்கோர்த்து,
மண்ணில் சிதரிய போதும்
சிதறாமல்-
கருத்துகள்
கருத்துரையிடுக