இடுகைகள்

பிறை

படம்
பிறை செங்கதிர் அரசாளும் நீலத் திரையில்,  மௌனத்தின் முழக்கத்தில் துளிர்விடும் வெண்பூக்கள் மலர்ந்தும், மலராமலும் கண் சிமிட்ட- பிறை மடந்தை குலம் தழைக்க  துயில் துறக்கும் இருள் காலம். விதிக்கப்பட்ட வடிவத்திற்குள் கறை குடியேறியும் வாசல் மறுத்ததில்லை. கார் முகில் கூட்டம் மறைத்த போதும் தோய்வுற்றதில்லை. இருள் விழுங்கி  செரித்தும் சலனமில்லை. உதித்த பொழுதின் துளிகளுக்கும் சான்றில்லை. கரையும் நேரம் காற்றுக்கும் தென்படவில்லை. இல்லையின் பயணத்தில் நிலையில்லா ஆற்றல் நிறைவாய் மறைந்திருப்பது- விரிந்த சுவாசத்திற்குள் அகப்பட்டிருக்கும்  இயற்கையின் எழுதப்பட்ட இரகசியம்.  இரகசியத்தில்- பதியம் வைத்த புலண்களுக்கு பிறை சேரா  நிலமென்று எதுவுமில்லை. ஒளியோடு பயணிக்கும் மனம் மறைத்த  உயிர்களுக்கு உயரிய மரபும் பயணற்று போனதில்லை, மாறாக காரியங்களின் சுமைகளால் தோய்வடைந்து, புதுப்பிக்க ஆழ்ந்த நித்திரையில் அடைப்பட்டிருக்கின்றன. நாட்குறிப்பு கண்கள் விழித்திராத காட்சிகளும், செவிகள் நெருங்கிடாத செய்திகளும், கரங்கள் வருடா உருவங்களும் மர்மமாய்  புணரப்பட்டாலும், அதனுள் மறைந்தா...

வாழ்த்து

படம்
வாழ்த்து நான் பதித்த தடங்களுக்கும் உணர்வுகள் உண்டு நான் நுகர்ந்த சுவாசத்திற்கும் புதுமை உண்டு நான் விழித்த உதயத்திற்கும் நன்மை உண்டு நான் சூழ்ந்த இயற்கைக்கும் நிகழ்வுகள் உண்டு நான் பழித்த சொல்லுக்கும் நாட்டம் உண்டு நான் ரசித்த மலருக்கும் கற்பனை உண்டு நான் போற்றிய நல்லிசைக்கும் ஏற்றம் உண்டு நான் வகுத்த வாழ்வியலில் இலக்கணம் உண்டு நான் பகிர்ந்த உறவுக்கும் வாசம் உண்டு நான் துறந்த வாசலுக்கும் மகிமை உண்டு. இரு விழியில் இரு பார்வையின் கட்டளைகள் மறந்து, உதிர்ந்த மலரின் நறுமணத்தில் பயணம் தொடர- நெடு வானம் மேற்கூரையாய், நட்சத்திரங்கள் ஒளி வீச, புது நிலவின் திலகம் சுமந்து, கீழ் வானின் சித்திரம் கண்டு ஒன்று கலந்த பாதங்களில் வாழ்வு நகர இரு இதயங்களின்  ஒற்றை நல்வாழ்த்துக்கள்.

அணங்கு

படம்
அணங்கு உள்ளடக்கம் " அணங்கு"  என்னும் சொல் சங்க இலக்கியத்தில் பெண்ணைக்  குறிப்பதாகும். ஒரு தாயின் இதயத்தில் பிறந்த இக்கவிதை தன் மகளை  ஒளியாய், இனிமையாய், கருணையாய் காணும் உணர்வை வெளிப்படுத்துகிறது. மழலை சிரிப்பிலும், சிறு செயல்களிலும் வாழ்க்கையின் உண்மைமயான அர்த்தத்தை காணும் தாயின் பயணம் இது. கவிதை மின் மினியின் மகளாய் ஒளி பகிர்ந்து தந்தாய், தேனீக்களின் அரசியாய் சுவை உணர வைத்தாய், முத்தமிழின் மூத்தவளாய் மன்றம் ஏற்க வந்தாய், குழலின் மொழியாய் செவி சுவைக்க நின்றாய், கொடியின் இடையாய் பருவம் ஏற்று மலர்ந்தாய், மீன் வடித்த விழியாய் கருணை கற்று வளர்ந்தாய், மகிழ்ச்சியின் சாமரம் வீசி அகம் குளிர்வித்தாய், உருவமாய் எனை வளர்த்த என் உயிர் துடிப்பில்  கண் அயர்ந்து, என்  மூச்சில் குளிர் காய்ந்து, உன் தவம் கலைத்து என் பார்வையின் நிழலில், நீ அறிந்ததை மழலை மொழியில் விளக்க துடித்தாய், சுவையின் இலக்கணமாய் நாவில் தவழ்ந்த  இசையயை மெய் மறந்து ஆற்றலானேன். பிறவி ஏழும் பொய்யானது உறவின் தாகம் தணியாமல்:  முடிவுரையின்  தொடக்கமாய் உதித்தாய் கடந்த காலங்களின் சுமை விலகி முழுமையடைந...

அறியாதது

படம்
அறியாதது உள்ளடக்கம் இந்தக் கவிதை வாழ்க்கையின் பல பரிணாமங்களை ஆழமாக ஆராயும் தத்துவப் பயணமாகும். மண், மழை, விதி, காற்று, வானவில், போன்ற இயற்கை உருவகங்களின் மூலம் மனிதன் அனுபவிக்கும் உணர்வுகள், உறவுகள், உண்மை, துரோகம், நினைவுகள் ஆகியவை வெளிப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதை உணரும் தனித்தன்மை இருக்கிறது என்ற கருத்தை கவிதை வலியுறுத்துகிறது. இறுதியில் மனிதன் அறிந்ததாக நினைப்பது எல்லாம் அறியாமையின் தொடக்கமே என்றும், விழித்திருந்தாலும் முழு பார்வை இல்லாத நிலையிலேயே வாழ்கிறான் என்றும் ஒரு ஆழமான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. கவிதை மண் புழுதியின் ஏக்கம் மழை சாரல் அறியும். விண்கல் பயணம் ஆழ்துளை அறியும். விழுதுகள் படரும் நேரம் விதி அறியும். பிறப்பின் காலம் வம்சம் அறியும். எண்ணங்கள் அசைபோடும் வேகம் காற்று  அறியும். உயிர்தூறல்  எதுவரை வாழ்நாள் அறியும். நிறங்களின் ஆயுட்காலம் வானவில் அறியும். உண்மை இடறிய கணம் துரோகம் அறியும். நிலையில்லா நிலத்தின் அகந்தை கல்தூண் அறியும். கடந்த காலத்தின் சுமை வரும்காலம் அறியும். வீரத்தின் வலிமை மகுடம் அறியும். புலமை புகுந்த வரிகள் மொழி அறியும். உறவில் பதிந்...

ஒழிவு

படம்
ஒழிவு ஒரு  செயலை செய்து முடித்தபின் கிடைக்கும்  இடைவெளியை "ஒழிவு" என சங்கக்காலத்தில்  பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒழிவு ஒளி  துயிலும் நள்ளிரவில், மூடுபனி காற்றை மறித்து வெண்ணிலா நிலமாளும் பகலிரவு. மலரின் போர்வை அகற்றி, இலை உதிர்த்து, வேர் கொண்டு வான் சேரநினைக்கும் மரக்கூடு. பாதத்தின் வன்மம் கரைய, வெப்பம் தாங்கி நிற்க நிலமுறங்கும் பனிமேடு. மேன்மையின் மகுடமும் ஆற்றாமையின்  ஆயுட்காலமும் மறைந்திருக்கும் காலச்சக்கரம். நாட்கள் செழிக்க, திங்கள் உறவுசேர இரு குணங்களில்  காத்திருக்கும் ஒற்றை அனுஆற்றல். அறிவியலில் விழி அமர்த்தி மௌனமாய் கடந்து செல்லும் ஆன்மீகம். நிறங்களின்  சுதந்திரத்தில் மனமகிழும்  உணர்வுகள்: சிவப்பின் சிறைவாசத்தில் அகமகிழும் நினைவுகள். உட்பொருள் உயிர் மட்டும் ஒயாமல் கடந்து செல்ல, சில மணித் துளிகள் அசையாமல் வீற்றிருக்க,காலமாய் விரும்புவது அமைதி. அசைவில்லா ஆற்றலுக்கும் மனமுண்டு, ஏக்கமும் உண்டு. இயற்கை சாராத முன்னெடுப்புகள் அமைதியை உருக்குலைய வைக்கும் தருணம் இயற்கையும அமைதி இழந்து போராட்டம் காணும். பாரம் தாங்கும் நெல்மணிகளும் குவியலில்...

கடல்

படம்
கடல் உள்ளடக்கம் இந்தக் கவிதை காலத்தின் ஓட்டத்தை நீரின் அலைகளாக உருவகித்து, இயற்கை, மனித இனம் மற்றும் வரலாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. மறைவு, இருள், மௌனம் ஆகியவற்றுக்குள் கூட புதிய விடியல் பிறக்கிறது. மண்ணை வளர்த்தும், இனத்தை உருவாக்கியும், கலை- பண்பாட்டை வடிவமைத்தும் வர- லாற்றில் தடம் பதித்த முன்னோடிகளின் உழைப்பு, சொல்லப்படாத காவியங்களாக  உறங்குகிறது. தற்காலிகமான உடமைகளைத் தாண்டி, மண்ணின் ஆழத்தில் தவமிருக்கும் ஒளி, தடைகளை உடைத்து எதிர்காலத்தை நோக்கி எழும் நம்பிக்கையாக கவிதை நிறைவு பெறுகிறது. கவிதை காலத்தின் பதிவுகளை நீர் ஏட்டில் குறித்த அலையின் பக்கங்கள், திறக்க கரை தொடுகின்றன நட்சத்திரங்களின் மறைவில் புதிய விடியல் தோன்றும் இயற்கையின் விதியில்- மண் வளர்த்து இனம் வளர்த்து கற்சிற்பம் வடிவமைத்து வரலாற்று ஏட்டில் கால்பதித்த முன்னோடிகள் கதிரவனின் முரண்பட்ட பாகத்துக்குள் நீரை மட்டும் சுவாசித்து காரிருளில் அமைதியாய் உறங்கும் காவியங்கள்  நூறாயிரம், வரலாற்றின் பாதங்கள் நடைத்தளறாது முன்னோக்கி செல்ல அடியமைத்துக் காத்திருக்கின்றன கண் பட்ட  ...

எல்லை

படம்
எல்லை உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்க்கை இயற்கையின் சட்டங்களைப் போல எளிமையுடனும், உண்மையுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது போல தோன்றுகிறது. இயற்கை எந்தச் செயலும் எதிர்பார்ப்பின்றி தன் இயல்பின்படி நடைபெறுகிறது. மலர் நறுமணம் தருவதற்கு யாருடைய முகவரியும் தேடவில்லை.  விதை முளைக்க முன் ஆய்வு செய்வதில்லை. கதிரவன் உதித்து மறைவது அவனது கடமை. அதேபோல் மனிதனும் தன் பண்பை காத்து வாழ வேண்டும். கர்வம், சீற்றம், கண்ணியமின்மை போன்றவை இயற்கையின் சீரிய ஒழுங்கில் இடமில்லை என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது. மனித சமுதாயம் இயற்கையைப் போல் சீராக இருந்தால் அதுவே இறை உணர்வை அடையும் வழி என்னும் தத்துவப் பின்னணியில் இந்தக் கவிதை அமைந்துள்ளது. கவிதை மலரில் கரைந்த நறுமணம், காற்றின் முகவரி தேடுவதில்லை. சுவை கலந்ந கனியின் மொழி, புலமைக்கு காத்திருப்பதில்லை. விதை உண்ட செம்மண், பசுமை உமிழ ஆராய்வதில்லை. தரை பயணம் முடியும்வரை, மழை நீர் துணைசேர்வதில்லை. மீன்களின் ஆயுள் முடியும்வரை, நாரைகளின் தவம் கலைவதில்லை. இலைகள் ஆடும் நாட்டியத்தை, இடியின் தாளம் நிர்ணயிப்பதில்லை.   சுற்றம் கனித்த செவ...