ஒழிவு

ஒரு  செயலை செய்து முடித்தபின் கிடைக்கும்  இடைவெளியை "ஒழிவு" என சங்கக்காலத்தில்  பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒழிவு

ஒளி  துயிலும் நள்ளிரவில்,
மூடுபனி காற்றை மறித்து
வெண்ணிலா நிலமாளும்
பகலிரவு.

மலரின் போர்வை அகற்றி,
இலை உதிர்த்து,
வேர் கொண்டு வான் சேரநினைக்கும்
மரக்கூடு.

பாதத்தின் வன்மம் கரைய,
வெப்பம் தாங்கி நிற்க
நிலமுறங்கும் பனிமேடு.

மேன்மையின் மகுடமும்
ஆற்றாமையின்  ஆயுட்காலமும்
மறைந்திருக்கும் காலச்சக்கரம்.

நாட்கள் செழிக்க, திங்கள் உறவுசேர
இரு குணங்களில்  காத்திருக்கும்
ஒற்றை அனுஆற்றல்.

அறிவியலில் விழி அமர்த்தி
மௌனமாய் கடந்து செல்லும்
ஆன்மீகம்.

நிறங்களின்  சுதந்திரத்தில்
மனமகிழும்  உணர்வுகள்:
சிவப்பின் சிறைவாசத்தில்
அகமகிழும் நினைவுகள்.

உட்பொருள்

உயிர் மட்டும் ஒயாமல் கடந்து செல்ல, சில மணித் துளிகள் அசையாமல் வீற்றிருக்க,காலமாய் விரும்புவது அமைதி. அசைவில்லா ஆற்றலுக்கும் மனமுண்டு, ஏக்கமும் உண்டு.
இயற்கை சாராத முன்னெடுப்புகள் அமைதியை உருக்குலைய வைக்கும் தருணம் இயற்கையும அமைதி இழந்து போராட்டம் காணும்.
பாரம் தாங்கும் நெல்மணிகளும் குவியலில் ஒய்வு தேடும். பறவைகளின் இரகுகளும் காற்றை விடுத்து உடல்சேர்ந்து நிலம் அமர காத்திருக்கும்.
நம்மை சுழற்றும்  பசுமை தேக்கம் ஒய்வு காணும் வரை, ஓய்வு கொண்டு சுழலும்  தேக்கம் சுழன்று கொண்டேயிருக்கும்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடமை

இயற்கை

நானும் அவளும்