இயற்கை

உள்ளடக்கம்

 இந்தக் கவிதை விடியற்காலையில் என் முற்றத்தில் நிகழும் சிறிய- சிறிய இயற்கை செயல்களை கவனித்ததில் இருந்து பிறந்தது. இயற்கை பேசுவதில்லை: ஆனால் நம்மை சிந்திக்க வைக்கின்றன.

கவிதை

நீலவானம் ஒற்றை 
கண் விழித்து பூமிக்கு
ஒளி தரும் தருணம்
இலை என்னும் போர்வை
நகர்த்தி விடியலை வரவேற்கும்
பறவைக் கூட்டங்கள்.

அழையாத விருந்தாளியாய்
மலரின் இருப்பிடம் சென்று
தேனை சுவைக்கும் தேனீக்கள்.

ஆங்காங்கே  சிதறிக்ககடக்கும் 
சிறகும், இலை சரகுகளும்
தனக்கென காத்திருந்ததைப் போல 
தன் கூட்டை அலங்கரிக்க
நயமாக சேகரிக்கும் சிட்டுக் குருவிகள்.

தானியங்களை பின்னங்காளில்
இளைப்பாறி பற்களின் இன்னிசையோடு உண்டு
மகிழும் அணில்கள்.

செயற்கை  ஆற்றலோடு போட்டியிட்டு
மண் சிதறாமல் ஊடுருவி
சத்துக்களை கொடிகளுக்கு பரிசளிக்கும் மண் புழுக்கள்,
தாவர நண்பன்.

தனக்கு அடைக்கலம் தந்த
தோழனின் ஆயுள் வேண்டி
இலகால் பொந்தமைத்து காவல்
நிற்கும் மரங்கொத்தி பறவைகள்.

என் இமைகள் மலர
வரம் கொடுக்க என் முன்
தோன்றும் கருங்குருவி
என் வாழ்க்கை பாதையின் 
திடமான நம்பிக்கை.

என் முற்றத்தில்
என்முன் நடந்தேரிய
இயற்கை நிகழ்வுகளை
அரங்கேற்றியதில் மகிழ்ச்சி.

நான் கவனிக்கத்தவறிய
படிப்பினைகளை என்
சுற்றத்தினர் மூலமாக
செவிவழி உணர
காத்திருக்கிறேன்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடமை

நானும் அவளும்