அகராதி
காற்றின் மொழி தென்றல்,
பூவின் மொழி வாசம்,
மழையின் மொழி சாரல்,
பறவையின் மொழி சிறகுகள்,
மகிழ்ச்சியின் மொழி ஆரவாரம்,
வானின் மொழி நீலம்,
நிலவின் மொழி ஒளிவட்டம்,
ஏழையின் மொழி வறுமை,
மழலையின் மொழி அழுகை,
பெண்ணின் மொழி நாணம்,
போரின் மொழி வெற்றி,
கடலின் மொழி அலைகள்,
பிறப்பின் மொழி எதிர்ப்பார்ப்பு,
அன்பின் மொழி இரகசியம்,
உறவின் மொழி பிணைப்பு,
வாழ்க்கையின் மொழி சரணடைதல்,
மரணத்தின் மொழி தன்னிறைவு.
வாழ்வின் மொழி சுதந்திரம்,
சிகரத்தின் மொழி உழைப்பு,
தேசத்தின் மொழி ஒற்றுமை,
கல்வியின் மொழி சமநிலை,
நாவின் மொழி அறுஞ்சுவை,
பசியின் மொழி வறட்சி,
மனதின் மொழி சலனம்,
கேள்வியின் மொழி சிந்தனை,
புதுமையின் மொழி ஆராய்ச்சி,
பக்தியின் மொழி மௌனம்,
பிளவின் மொழி உரிமை,
பண்பாட்டின் மொழி பழமை,
வாசகர்களின் மொழி புதுமை..
நாட்குறிப்பு
மொழியது, வார்த்தையின் கோர்வைகள் நாவின் வாசல் கடந்து செவி துளைக்கும் ஓசை என ஆராய்வதற்கு காலங்கள் சான்றிருந்தன.
அசைவுகள், வண்ணங்கள், ஓவியங்கள், உணர்வுகள், அனைத்தும் மொழியின் அம்சங்கள். உயிரற்ற நகர்வுகளும் மொழி கொண்டிருக்கும்,
வளைவில்லா தேக்கங்களும் மொழி பகிர்ந்திருக்கும்.
உயிர்களின் பார்வையில் எண்ணற்ற மொழிகள் ஓசையின்றி கடந்து செல்லும், இதயத்தின் வாசலில் உணர்வுகள் ஒன்றினணயும்.
நான் வரைந்த சொற்றொடர்கள் என் வட்டத்திற்குள் உட்பட்டவையல்ல. தேர்ந்தெடுத்த எழுதுகோல் மொழி கடந்த பிணைப்பை உருவங்களுக்குள் மறைத்திருக்கும் பெருமை உங்களைச் சார்ந்தது.... நம்மைச் சேர்ந்தது.
Beautiful
பதிலளிநீக்கு