வாழ்த்து

வாழ்த்து

நான் பதித்த தடங்களுக்கும்
உணர்வுகள் உண்டு

நான் நுகர்ந்த சுவாசத்திற்கும்
புதுமை உண்டு

நான் விழித்த உதயத்திற்கும்
நன்மை உண்டு

நான் சூழ்ந்த இயற்கைக்கும்
நிகழ்வுகள் உண்டு

நான் பழித்த சொல்லுக்கும்
நாட்டம் உண்டு

நான் ரசித்த மலருக்கும்
கற்பனை உண்டு

நான் போற்றிய நல்லிசைக்கும்
ஏற்றம் உண்டு

நான் வகுத்த வாழ்வியலில்
இலக்கணம் உண்டு

நான் பகிர்ந்த உறவுக்கும்
வாசம் உண்டு

நான் துறந்த வாசலுக்கும்
மகிமை உண்டு.

இரு விழியில்
இரு பார்வையின்
கட்டளைகள் மறந்து,
உதிர்ந்த மலரின் நறுமணத்தில்
பயணம் தொடர-
நெடு வானம் மேற்கூரையாய்,
நட்சத்திரங்கள் ஒளி வீச,
புது நிலவின் திலகம் சுமந்து,
கீழ் வானின் சித்திரம் கண்டு
ஒன்று கலந்த பாதங்களில்
வாழ்வு நகர
இரு இதயங்களின் 
ஒற்றை நல்வாழ்த்துக்கள்.


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடமை

நானும் அவளும்

உருவம்