புதல்
புதல் உள்ளடக்கம் 'புதல்' என்னும் சொல் புதுமையை குறிப்பதாகும். பழமையின் தேக்கத்தில் புதுமையின் வாசம் ஏற்புடையது. உயிர் கலந்த இயற்கையில் திரை விலகும் ஒப்பனைகள் யாவும் புதிதானவை. விடியும் பொழுதும், பொழுதின் நிறைவும், நிறையின் காட்சிகளும், காட்சிகளின் படிப்பினைகளும், படிப்பின் நெறிகளும், நெறி குன்றா விதிகளும், விதியில் கலந்த உறவுகளும், உறவில் ஒன்றினணந்த கனவுகளும், கனவின் விழும்பில் பயணங்களும், பயணத்தின் முடிவில் புதிய அத்யாயமும்,புதுமையின் வரிசையில் முதன்மையானவை. கவிதை வெண்மேக சங்கமத்தில் வானவில் புதியது. இருள் தோற்ற பௌர்ணமியில் தூறல்கள் புதியது. சுழன்றோடும் காற்றுக்கு நளினம் புதியது. நிலம் உரைந்த பருவத்தில் மொட்டவிழ்ந்த பூக்கள் புதியது. இரவு நுழையா விழித்திரையில் கனவுகளின் காட்சி புதியது. பிணி பொருத்த செம்மண் வீதியில் வாழையின் செழுமை புதியது. வண்டாடும் பூஞ்சோலையில் நிறம் விழுங்கிய மலர்கள் புதியது. கவிஞன் தொடுத்த உயிர்மெய்யில் ஆயுதம் புதியது. இடறிய மணித்துளிக்குள் காலத்தோடு எழுவது புதியது. செவித்திகட்டா வாய்மையின் அமைதி புதியது. உறவின் பாலம் கட்டவிழ்ந்தும் மனதில் இணைந்திருப்பது ...