இணைப்பு
மனம் அறியா மலருக்குள்
கதிரவன் கண்சிமிட்டும்
பந்நிற குவியல்கள்.
திசை அறியா காற்றுக்கு
நிலம் ஆளும் பூமியில்
எதிர்வினையற்ற அதிகாரம்.
வரையரையில்லா கடலுக்கு
வான் உதிர்த்த நன்னீரில்
அலைகளின் அரங்கேற்றம்.
காற்றில் மிதக்கும் பறவைக்கு
நிலம் மூழ்கும் பேரலையின்
இரகசிய விண்ணப்பம்.
மீன் வடித்த விழித்தோகைக்குள்
அகன்ற பூமியின்
காட்சி கூடாரம்.
சிதறிய வண்ணங்களின் தொகுப்பில்
வானுயர மகுடம் சூடும்
வானவில்.
உறைவிடம் இல்லா உடலுக்குள்,
உயிர் சாய்க்கும் சுமைகள் தாங்கும்
மெல்லிய மனது.
நிலையில்லா உறவுக்குள்
நிழல் தேடி, வேரூன்ற நினைக்கும்
வாழ்க்கை பயணம்.
பயணங்கள் தொடர,
முன்னுரை வரையும்
காலச் சக்கரம்,
முடிவுரை தேடி, இரவு பகல்
கருத்துகள்
கருத்துரையிடுக