நீர் குமிழி

நீர் குமிழி

உள்ளடக்கம்

இந்தக் கவிதை மனித மனத்தின் நிலையற்ற தன்மையையும், உணர்வுகள் தோன்றி மறையும் விதத்தையும் நீர் குமிழி போலவே கனமான இதயத்திலிருந்து பிறக்கும் எண்ணங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்து, புன்முருவலாய் மிதந்து, இறுதியில் எதார்த்தம் எனும் காற்றில் கரைந்து போகின்றன.
மனத்தின் ஆசை, அதன் ஆயுள், மற்றும் வாழ்க்கையின் கடுமையான உண்மை இவைகளின் மோதலை நுணுக்கமாக பதிவு செய்யும் கவிதை இது.

கவிதை

திடமான பூமி பந்து
வெப்பம் தாளாமல்
தன்னை குளிர்விக்க
வெளியேறும் வெள்ளருவி
தன் மகிழ்ச்சியை
நீர் குமிழியாய் உருமாற்றி
காற்றில் மறையும்.

கனமான இதயத்தில்
தோன்றி மறையும்,
எண்ண ஓட்டங்கள்
பாரம் தாங்காமல்
மனம் என்னும்
கூட்டில் இளைப்பாறி,
அவ்வப்போது இதமான
புன்முருவலோடு
காற்றில் பறக்கும்.

மனம் என்னும்
நீர்குமிழி,ஆயுள் வேண்டி
மெம்மேல் பறந்தாலும்,
எதார்த்தம் என்னும்
காற்றின் வேகத்தால்
நொருங்தி, இடமறியாமல்
கரைந்து போகும்.

எத்தனை நீர்குமுழிகள்
காற்றில் கரைந்தனவோ....
காற்றணுக்களின் எண்ணிக்கையில்
மறைந்திருக்கின்றன.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடமை

இயற்கை

நானும் அவளும்