நினைவுகள்
உள்ளடக்கம்
இந்தக் கவிதை மனத்தின் அனுமதி- மறுப்பு, உணர்வுகளின் நுழைவாயில், நினைவுகளின் சுழற்சி, மற்றும் மனிதன் உலகில் பதிக்கும் தடத்தின் தத்துவத்தை பேசுகிறது.
முகவரி இல்லாத எண்ணங்கள், அனுமதி பெறாத உணர்ச்சிகள் கோபமாக மாறும் விதம், மென்மையை உணரத் தெரிந்த பாதங்களுக்கும், காலச் செருக்கில் கரடுமுரடாகிய பாதங்களுக்கும் இடையிலான வேறுபாடு இங்கு வெளிப்படுகிறது. இயற்கையின் வடிவமைப்பில் மனிதன் பதிக்கும் கால் சுவடுகள் உலகின் சமநிலையைச் சிதைக்காமல், மாறாக இரு துருவங்களையும் இணைத்து கேட்க முடியாத இன்னிசையோடு அண்டம் நடனமாடும் என்ற தத்துவ உணர்வை கவிதை எடுத்துரைக்கிறது.
கவிதை
முகவரி இல்லாத
வரிகளின் தொகுப்பு-
மனதிற்கு மட்டும் புலப்படும்
சம்பவங்களின் அணிவகுப்பு.
மனதின் அனுமதி பெற்று,
இதய வாசலில் நுழைய
காத்திருக்கும் பயணச்சீட்டு,
அனுமதி இல்லாததால்
கோபத்தணலில்
வெளியேறும் வன்மங்கள்.
இதழின் மென்மையை
உணரும் பாதங்கள்,
இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட
செயலின் வெளிப்பாடு.,
காலச்செருக்கில்
முட்களை பதம்பார்த்த பாதங்கள்,
நினைவெனும் காலச்சுழற்சியை
அனுபவிக்க தகுதியற்றவை.
உலகின் வடிவம்
இயற்கை சார்ந்தது என்றாலும்
உயிராய், உணர்வாய்
தடம் பதித்த மனிதர்களின்
கால் சுவடால், உயிர் பந்து
உருக்குலையாமல்
இரு துருவங்களையும்
கண் இமைக்கும் தூரத்தில்
இனைத்ததால், செவிக்கும்
எட்டாத இன்னிசையோடு
Beautiful
பதிலளிநீக்குBeautiful
பதிலளிநீக்கு