எதிர்முனை
உள்ளடக்கம்
இந்தக் கவிதை உலகத்தில் காணப்படும் சக்தி, கட்டுப்பாடு, அதிகாரம் ஆகியவை எதனால் நார்ணயக்கப்படுகின்றன என்பதைக் குறித்து சிந்திக்கிறது. இயற்கை நிகழ்வுகள், காலம், மனித உழைப்பு, சமூக அமைப்புகள், மனநிலை மற்றும் அகந்தை ஆகிய
வை தத்தம் காரணிகளின் வசப்படுத்தலுக்குள் இயங்குகின்றன என்பதை வரிசையாகக் காட்டுகிறது. ஆனால் இறுதியில், உண்மை, நேர்மை மற்றும் ஆழ்ந்த புரிதல் ஆகியவை எந்தக் கட்டுப்பாட்டுக்கும் முழுமையாக உட்படாதவை என்பதை உணர்த்துகிறது. இது மனிதன் எல்லாவற்றையும் அளக்கவும், ஆளவும் முடியும் என்ற அகந்தைக்கு எதிரான ஒரு தத்துவக் கேள்வியாக நிற்கிறது.கவிதை
இருளின் கர்வம்
மின்மினி வசப்படும்,
வெண்மேக நிறம்
காரிருள் வசப்படும்,
நீரின் வேகம்
கூழாங்கல் வசப்படும்,
மலை முகடின் உயரம்
உளியின் வசப்படும்,
வெண்பஞ்சு காலம்
திரியின் வசப்படும்,
சுட்டெரிக்கும் அனல்காற்று
பருவமழை வசப்படும்,
குளிர்பனி காலம்
கதிரவன் வசப்படும்,
கனமான இதயம்
இறையருள் வசப்படும்,
செல்வச்செருக்கு
வள்ளல் வசப்படும்,
வறுமையின் துயரம்
உழைப்பின் வசப்படும்,
போர்க்கால பதற்றம்
தூதுவர் வசப்படும்,
நான் என்னும் அகந்தை
உயிர் அணைய வசப்படும்,
மனதின் இருக்கம்
காட்சி கோணத்தின் வசப்படும்,
மகிழ்ச்சியின் அளவு கோல்
பிரித்தாய்வதில் வசப்படும்,
எதிர்முனை கூடாரத்தில்
வளைவில்லா நேர் பாதை,
காட்சிக்கு முரணானவை
ஆராய்வதில் வசப்படாதவை..
Amazing
பதிலளிநீக்கு