இலக்கு
உள்ளடக்கம்
இந்தக் கவிதை இருள்- ஒளி, வறுமை- அதிகாரம், அமைதி- அதிக சப்தம், இயற்கை- மனித அறிவு ஆகிய எதிர்மறை நிலைகளுக்கிடையே மனித மனம் மேற்கொள்ளும் அமைதியான தேடல் பயணத்தை பேசுகிறது.
கவிதை
இரவின் மணித்துளிக்குள்
ஒளியின் நொடி தேடும் விழிகள்.
குடைந்த பாறைக்குள்
தாகம் தீர்க்க நினைக்கும் மனம்.
நிலவு சேர்த்த பகலில்
ஈரம் காயும் புல்வெளி.
வறுமை புதைந்த நிலத்தில்
பகட்டின் கனி சுவைக்கும் அதிகாரம்.
அடர்ந்த கானகத்துள்
விதை தேடும் விலங்கினம்.
பறவையின் இறகில்
உலகம் அளக்கும் விஞ்ஞானம்.
ஆழ்கடலின் அலையோசையில்
மௌன மொழி பேசும் மீன்கள்.
செம்மொழியின் நிலப்பரப்பில்
புதியதோர் அத்யாயம்.
மண் புதைத்த உறைவிடத்தில்
காற்று தீண்டா தீபச்சுடர்.
இனம் தோற்ற வைகரையில்
மாசில்லா வெண்மலர் கூட்டம்
அமைதியின் பயணம் நோக்கி
Glorious
பதிலளிநீக்குTriumphant.
பதிலளிநீக்கு