நிழலும் நிஜம் தேடும்
உள்ளடக்கம்
இந்தக் கவிதை மனிதன் அனுபவிக்கும் சோர்வு, மன மறுபிறவி, அன்பின் அரவனைப்பு மற்றும் இயற்கையோடு ஒன்றும் வாழ்க்கை சுழற்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டது.
கவிதை
தரை தொட்ட கணம்
பொழுதும் சோர்ந்து போய்,
ஓய்வின் நுழைவாயில்
சேர்ந்தும்,சேராமலும்
என் கண்கள் ஒளி பெற
காத்திருந்தது.
கருவறை துறந்த மறுகணம்
மனம் உதித்த தளிர் மேனியில்
காலமும், பட்டும் படாமல்
என்னை வரவேற்கிறது என
சலனம் தழுவியது.
செவி திகட்டா சொல்லழகும்,
என் நிழலின் மறுஉருவமாய்
விரலின் வேலிக்குள்
புறம் செழித்தது
அகமும் குளிர்ந்தது.
மதி வளர்த்த கல்வியும்
உறம் சேர்த்த உறவும்
வண்ணம் போர்த்திய கனவும்
அழகாய் பாதை தொடுத்தது.
கரை சூழ்ந்த பூங்காற்று
நீரோடையின் வழி கொண்டு
மறுகரை சேர்ந்தது.
வெண் மேகம் கரை படிந்து
ஒளியும் கண் மறைத்தது.
மழைத் துளியில் மாசகன்று
வளமாய் வாழ்வதும்
காற்றில் ஈரம் கரைந்து
நிலம் தாகம் கொள்வதும்
இயற்கையின் அரவணைப்பில்..
நாட்குறிப்பு
ஒரு தளிரின் குரல்
இருளில் காலூன்றி மெய் வளர்த்த நான்,கண்கள் ஒளிர என்னை, நானே காண உடல் இருகி ஆயுத்தமானேன். உதிரம் சுமந்து வேலி கடந்த என் கண்கள், பகல் மறைந்து இரவு தோன்றும் வேளையை உணர்ந்ததும் என்னை சுமக்கும் பூமி ஆர்வமில்லாமல் என்னை வரவேற்கிறதோ ஏன சலனமானேன்.
அன்னையின் தேனினிய சொல்லும், தந்தையின் பாதுகாப்பிலும் என் உலகம் செழித்தது. அறிவு வளர்த்த கல்வியும், உறவின் அன்பும் வாழ்வை திடமாக்கியது.
நெல் விதைத்த நிலம் செழித்திருந்தாலும் வேரூன்றும் சூழலே நெல்லுக்குரியது. பசியாற குவியல்களாகி, காய்ந்த பிறகும் உருவெடுக்க தடுமாறும் பெண்ணின் இயல்பு இயற்கை சார்ந்தது. நன்மையும், தீமையும் கைக்கோர்த்தாலும் காலத்தோடு பயணிக்க நன்மையின் வெகுமானம் கொண்டது.
Beautiful
பதிலளிநீக்கு