நான் உணர்ந்த தலைவன்
உள்ளடக்கம்
இந்தக் கவிதை தியாகம், தவம் நேர்மை ஆகியவற்றின் வழியே உருவாகும் ஒரு நவீன தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. அதிகாரம் அல்ல பொறுப்பு என்பதே உண்மையான தலைமை எனக் கூறும் கவிதை.
கவிதை
தவம் கலைத்த
இந்தியத் தாயின் தலைமகனுக்கு...
வாய்மை வழித்துணையானதால்
வறுமை பிழையில்லை என
திலகம் தொலைத்த நெற்றியில்
தன் விருப்பம் சுருங்கி
தியாகம் விழியில் ஒளிவீச -
மூன்று புறமும் நீர்சூழ்ந்த
நிலமாளும் சுடர் தென்பட்டதால்
உடல் வருத்தி, பாதை வகுத்தாய்
மனை துறந்து மானுடம் காக்க.
வடக்கில் தடம் வலுத்த பாதம்
தென்தேசத்தில்
கம்பன் நிலம் படர்ந்ததால்,
காலம் சுமந்த பாரதம்
மீண்டும் புத்துயிர் பெற,
சுதந்திரத்தின் நூற்றாண்டில்
வாகை சூடி, உலகம் புகழும்
உத்தம தலைவனாய்,
யோகம் வளர்த்த உடல் மெருகேறி
வையகம் போற்றும் எங்களுள்
ஒருவனாய் வாழும்
ஆரவாரத்திற்கு குறைவில்லை,
தலைமையில் மாற்றமில்லை.
உன் நேர் பார்வையில்
கண்டமும் கதைசொல்லும்
மனிதத்தின் புகழ் ஓங்கும்.
பெண்ணின் துயரம்
உன் தோல் சேர்ந்ததால்
கருணையையே காரியமாக்கி
தாயானாய்.
தேசத்தின் பாதுகாப்பிலும்,
நிதி பகிர்விலும்
பெண்கரம் வலுத்ததால்
தந்தையுமானாய்.
சைவமும் வைணவமும்
இறைவனைக் காணும்
இரு கண்கள்
என்னும் மெய்யுணர்வு
இதயம் சேரும் வரை,
கண்களின் வழிக்காட்டியாததால்
காவி கரையல்ல
செங்கோல் உயர்த்திய அரசனின்
பாதையில் பிழையுமல்ல.
திங்கள் தவறா
சொல்லாற்றலால்
தடைகள் மீறினாய்
முற்றம் கலந்தாய்.
என் மண்ணின் உரம்
என் தலைமுறை தழைக்க-
அயலான் பிடிதகர்த்து
கோடிகரம் சேர்த்தாய்
மூவர்ணம் உயர்த்தினாய்.
நதிநீர் எல்லை கடக்க
காத்திருக்கிறது
உன் எல்லை இதுவல்ல
வியக்கத்தக்க, அற்புதமான படைப்பாற்றல்.
பதிலளிநீக்கு