தூண்
உள்ளடக்கம்
இந்தக் கவிதை,' துணிவு' என்ற கருத்தை பல அடுக்குகளில் வெளிப்படுத்துகிறது. இரவின் அமைதியிலும் அச்சத்திலும் உயிரை தாங்கி நிற்கும் தனிநபர் மனநிலையிலிருந்து தொடங்கி, போராட்டங்களிலும் வரலாற்றிலும் சிறு செயல்கள் பெரிய மாற்றங்களை உருவாக்கும் சக்தியாக மாறுகிறது. மனித அகந்தைக்கும் சமீக நீதிக்கும் எதிராக நிற்கும் மன வலிமை, பெண்களின் சுதந்திரக் குரல், முன்னோடிகளின் பாதையில் மீண்டும் எழும் புத்துயிர் - இவை அனைத்திலும் துணிவு ஒரு தொடர்ந்த உயிர்ப்பாகவும் படைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனிதனின் தனிப்பட்ட தைரியம் அல்ல: மாறாக உயிரின் இயல்பாகவும், சமூக மாற்றத்தின் வேராகவும் இந்தக் கவிதை துணிவை காட்டுகிறது.
கவிதை
காற்றசையா வீதிகளில்
இரகின் சுவாசம் நுகர்ந்து
முகில் நெய்த கூரையில்,
இரவின் காவல்
கண்களை மறைக்க
உயிர் சுமப்பது துணிவு.
துயிள் ஆளும் ராத்திரியில்
தரைப் படையின் மௌனத்தில்
இருளின் அச்சம் கடந்து
சிறு பொறி நிலமாளும்
வரலாற்றின் நம்பிக்கை- துணிவு.
நீர் தழையும் நிலத்தில்
இனம் காக்க எல்லை வகுத்து,
நிலம் செரித்து படையெடுக்கும்
அகந்தை மாறா மனிதர்களின்
தடை வளர்ப்பது துணிவு.
பெண்ணியம் வருடா சமூகத்தில்
மௌனம் கலைத்த சுதந்திரம்
பாதை கோணாமல்
உள்ளுணர்வின் துணைகொண்டு
வடிவம் போற்றுவது துணிவு.
இயக்கம் மறைந்தாலும்
இலக்கணமாய் புவி வாழும்
முன்னோடிகளின் தவம் பற்றி
சோர்வின் விழும்பில்
கருத்துகள்
கருத்துரையிடுக