இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூண்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை,' துணிவு' என்ற கருத்தை பல அடுக்குகளில் வெளிப்படுத்துகிறது. இரவின் அமைதியிலும்  அச்சத்திலும் உயிரை தாங்கி நிற்கும் தனிநபர் மனநிலையிலிருந்து தொடங்கி, போராட்டங்களிலும் வரலாற்றிலும் சிறு செயல்கள் பெரிய மாற்றங்களை உருவாக்கும் சக்தியாக மாறுகிறது. மனித அகந்தைக்கும் சமீக நீதிக்கும் எதிராக நிற்கும் மன வலிமை, பெண்களின் சுதந்திரக் குரல், முன்னோடிகளின் பாதையில் மீண்டும் எழும் புத்துயிர் - இவை அனைத்திலும் துணிவு ஒரு தொடர்ந்த உயிர்ப்பாகவும் படைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனிதனின்  தனிப்பட்ட தைரியம் அல்ல: மாறாக உயிரின் இயல்பாகவும், சமூக மாற்றத்தின் வேராகவும் இந்தக் கவிதை துணிவை காட்டுகிறது. கவிதை காற்றசையா வீதிகளில் இரகின் சுவாசம் நுகர்ந்து முகில் நெய்த கூரையில், இரவின் காவல் கண்களை மறைக்க உயிர் சுமப்பது துணிவு. துயிள் ஆளும் ராத்திரியில் தரைப் படையின் மௌனத்தில் இருளின் அச்சம் கடந்து சிறு பொறி நிலமாளும்  வரலாற்றின் நம்பிக்கை- துணிவு. நீர் தழையும் நிலத்தில் இனம் காக்க  எல்லை  வகுத்து,  நிலம் செரித்து படையெடுக்கும் அகந்தை மாறா மனிதர்களின் தடை வளர்ப்பது த...

முடிவுரை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்வின் ஆழமான வெற்றிடத்தையும், நிறைவேறாத ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.காலம் நகர்ந்தும் வாழ்க்கையின் அர்த்தம் தெளிவாக தெரியாமல் போகும்  ஓரு நிலையை இது காட்டுகிறது. வானம் விரிந்திருந்தாலும் அதன் எல்லை கண்களுக்கு எட்டாதது போல, மனிதன் தேடும் நிறைவு எளிதில் கிடைக்காததாகவே உள்ளது. மேகம் கரைந்து மழையாக  விழுந்தாலும் மண்ணின்  தாகம்  தீராதது போல வாழ்க்கையில் நிகழ்வுகள் பல வந்தாலும் உள்ளத்தின் பசி அடங்காமல் தொடர்கிறது. வெளிப்படையாக இயற்கை இயக்கம் நடைப்பெறுகிறது போல தோன்றினாலும் உள்ளார்ந்த வெறுமை நீங்காத ஒரு அமைதியான வேதனை இந்தக் கவிதையின் மைய உணர்வாக உள்ளது. இது தனிமை, தேடல் மற்றும் நிறைவை நாடும் மனித மனத்தின் நிலையை நுட்பமாக பிரதிபலிக்கிறது. கவிதை முடிவுற்ற காலங்கள் விழித்திருந்தும் வானின் நீளம் தென்படவில்லை. மேகம் கரைந்த நீர்துளிகள் சிந்தியும் மண்ணின் தாகம் தீர்க்கப்படவில்லை. நிலம் இருகிய பாறைகள் குடைந்தும் பூமியின் புதிர் விடுபடவில்லை. பிறவிகள் ஏழு கடந்தும் சூரியனின் கதிர்கள் குன்றியதில்லை. நொடியின்  இடையில் இமை மூடும் விழிகள் கரைந்தாலு...

உருவம்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை காற்றைப் போல கண்ணுக்குப் புலப்படாமல் உடலுக்குள் மறைந்திருந்து, படைத்தவனின் ஆனையேற்று, காலம் முடியும் வரை பயணிக்கும் உருவமில்லா உயிர் சேர்ந்தது. உயிர் உடலில் மறைந்திருக்கும் வரை நல்லாற்றலாய் செயல்பட வேண்டும் என்பதை மாசற்ற சூரியனின் ஒளியில் ஒரு துளியும் கலங்கம் சேர்க்காமலும், உப்பு கலந்த கடல் நீரிலும்  நன்னீரின் சுவை உணர்வதும், காற்று கலந்த பூமியில் என் சுவாசம் மட்டும் புதியதாய் தென்பட வேண்டும் என்னும் இயல்பையும்  ,ஐம்புலனும் உயிருக்குள் கட்டுப்பட்டு நன்மை தீமைகளை பிரித்து உணரவேண்டும் என்பதையும்,வானம் சூழ்ந்த நிலத்திற்குள் தீயவை தீண்டாத இருப்பிடத்தில்  வசிப்பதையும் கடைப்பிடிக்க, பிறப்பில்  நீர் சூழ்ந்த உடல் இறுதி காலத்திற்கு பின் மண்ணில் புதையுண்டு மறையும் வரை காற்றடைத்த உடலில் அமைதி காக்க வேண்டும் என்னும் பொருள் கொண்டு   "உருவம்"  கவிதை படைத்தது. கவிதை காற்றின் வம்சமாய், புதராடும் கூட்டுக்குள், கண்ணிருண்ட உருவமாய், சிந்தித்தவனின் சிரம் பற்றி, காலத்தின் கணக்கில் அடிபணிந்து, உயிரென உடல் சேர்ந்தாய். சுடர் விரியும் நன்பொழுதில், ஒரு த...