கடல்
உள்ளடக்கம் இந்தக் கவிதை காலத்தின் ஓட்டத்தை நீரின் அலைகளாக உருவகித்து, இயற்கை, மனித இனம் மற்றும் வரலாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. மறைவு, இருள், மௌனம் ஆகியவற்றுக்குள் கூட புதிய விடியல் பிறக்கிறது. மண்ணை வளர்த்தும், இனத்தை உருவாக்கியும், கலை- பண்பாட்டை வடிவமைத்தும் வர- லாற்றில் தடம் பதித்த முன்னோடிகளின் உழைப்பு, சொல்லப்படாத காவியங்களாக உறங்குகிறது. தற்காலி கமான உடமைகளைத் தாண்டி, மண்ணின் ஆழத்தில் தவமிருக்கும் ஒளி, தடைகளை உடைத்து எதிர்காலத்தை நோக்கி எழும் நம்பிக்கையாக கவிதை நிறைவு பெறுகிறது. கவிதை காலத்தின் பதிவுகளை நீர் ஏட்டில் குறித்த அலையின் பக்கங்கள், திறக்க கரை தொடுகின்றன நட்சத்திரங்களின் மறைவில் புதிய விடியல் தோன்றும் இயற்கையின் விதியில்- மண் வளர்த்து இனம் வளர்த்து கற்சிற்பம் வடிவமைத்து வரலாற்று ஏட்டில் கால்பதித்த முன்னோடிகள் கதிரவனின் முரண்பட்ட பாகத்துக்குள் நீரை மட்டும் சுவாசித்து காரிருளில் அமைதியாய் உறங்கும் காவியங்கள் நூறாயிரம், வரலாற்றின் பாதங்கள் நடைத்தளறாது முன்னோக்கி செல்ல அடியமைத்துக் காத்திருக்கின்றன கண் பட்ட உடமைகள் கைப...