இடுகைகள்

2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கனம்

படம்
ஈரம் மறுத்த வளம் சுவாசத்தின் சுமை, கனி விரும்பா கொடியினம் நாவிற்கு சுமை, இதழ் சுருங்கிய மலர்கள் அழகிற்கு சுமை, இருள் அணைத்த மின்விளக்கு விழிப்பதற்கு சுமை, கிளைகளின் குடியிருப்பில் புயலின் வரவேற்பு சுமை, நீர்  பருகிய நிலம் வறட்சியின் சுமை, முகில் ஊடுருவும் பயணத்தில் நிலம் தாங்கும் உயிர்கள் சுமை, பண்பட்ட இதயம் ஊடலில் சுமை, மௌனம் கலைத்த விழிநீர் இரகசியத்தின் சுமை, இரவில் விழித்திருக்கும் நினைவுகள் நிம்மதியின் சுமை, கற்பனையின் அலைவரிசையில் மெய் வருடும் நுனிவிரல் சுமை, நிசப்தம் உறங்கும் நிலத்தில் முகவரி தேடும் காற்றொரு சுமை, கைவலையின் கலகலப்பில் மழலையின் நித்திரை சுமை, முகம் மலர திரையிட்ட காலங்களால் பிறவியும் சுமை. ஆற்றாமையின் துணையில் நிழல் சாய்வதும் சுமை- அழைத்துச் செல்ல  வலிமையில்லை பின்தள்ள புரிதலுமில்லை..

அணங்கு

படம்
உள்ளடக்கம் " அணங்கு"  என்னும் சொல் சங்க இலக்கியத்தில் பெண்ணைக்  குறிப்பதாகும். ஒரு தாயின் இதயத்தில் பிறந்த இக்கவிதை தன் மகளை  ஒளியாய், இனிமையாய், கருணையாய் காணும் உணர்வை வெளிப்படுத்துகிறது. மழலை சிரிப்பிலும், சிறு செயல்களிலும் வாழ்க்கையின் உண்மைமயான அர்த்தத்தை காணும் தாயின் பயணம் இது. கவிதை மின் மினியின் மகளாய் ஒளி பகிர்ந்து தந்தாய், தேனீக்களின் அரசியாய் சுவை உணர வைத்தாய், முத்தமிழின் மூத்தவளாய் மன்றம் ஏற்க வந்தாய், குழலின் மொழியாய் செவி சுவைக்க நின்றாய், கொடியின் இடையாய் பருவம் ஏற்று மலர்ந்தாய், மீன் வடித்த விழியாய் கருணை கற்று வளர்ந்தாய், மகிழ்ச்சியின் சாமரம் வீசி அகம் குளிர்வித்தாய், உருவமாய் எனை வளர்த்த என் உயிர் துடிப்பில்  கண் அயர்ந்து, என்  மூச்சில் குளிர் காய்ந்து, உன் தவம் கலைத்து என் பார்வையின் நிழலில், நீ அறிந்ததை மழலை மொழியில் விளக்க துடித்தாய், சுவையின் இலக்கணமாய் நாவில் தவழ்ந்த  இசையயை மெய் மறந்து ஆற்றலானேன். பிறவி ஏழும் பொய்யானது உறவின் தாகம் தணியாமல்:  முடிவுரையின்  தொடக்கமாய் உதித்தாய் கடந்த காலங்களின் சுமை விலகி முழுமையடைந்தேன். ...

பெண்ணெனும் நான்........

படம்
நாட்குறிப்பு பெண் என்னும் அகராதி சாபத்திற்குள் அகப்பட்ட வரம். பிறந்ந பாதையில் வரங்கள் பின்தொடர்வதுமில்லை, சாபங்கள் வழி மறுப்பபதுமில்லை. நிழலை உற்று நோக்கும் கனம், தனிமை முழுவதுமாய் ஆட்கொண்டிருக்கும். தனிமையில் இரவுக்கும், வெளிச்சத்திற்கும் வேறுபாடில்லை. உணர்வுகளின் துணைக்கொண்ட ஆற்றலின் வடிவம் சிகரம் கடந்து செல்லும். வழித்துணையின் பல்லக்கு அயராமல் சுமந்தாலும் இளைப்பாற ஒரு அடியேனும் தனக்கென பகிர்ந்திருக்க வேண்டும். உபயம் சேர்க்கும் கற்சிலையாய் ஊர்வதை கடந்து, உளி செதுக்கிய பெண் உருவமாய் நகர்வது சிறப்பு. எண்ணங்களின் அலைவரிசை மனதின் இசையாய் வெளிப்பட, பாதங்கள் வண்ணத்தில் நனைந்திருக்க வேண்டும். இருளில் நிறம் மறைந்தாலும் செவிகள் இன்புற்று கடந்து செல்லும். நான் படைத்த " பெண்ணெனும் நான்" உணரவிருக்கும் காலத்தின் பரிணாமங்கள்... கவிதை கருவறை கோப்பைக்குள் உயிரெனும் ஆற்றலோடு வடிவமில்லா சிறுதுகளாய் அங்கும், இங்கும் அலைந்து ஓரிடத்தில் இளைப்பாறினேன். இயற்கை வரமளித்த இரு இனங்களின் ஒரு இனமாய், காற்றும், செந்நீரும் ஒரு சேர கலந்து கருவண்ணம் ஆட் கொண்ட  அறையில்,சலனமில்லாமல் வீற்றிருந்தேன...

அறியாதது

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை வாழ்க்கையின் பல பரிணாமங்களை ஆழமாக ஆராயும் தத்துவப் பயணமாகும். மண், மழை, விதி, காற்று, வானவில், போன்ற இயற்கை உருவகங்களின் மூலம் மனிதன் அனுபவிக்கும் உணர்வுகள், உறவுகள், உண்மை, துரோகம், நினைவுகள் ஆகியவை வெளிப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதை உணரும் தனித்தன்மை இருக்கிறது என்ற கருத்தை கவிதை வலியுறுத்துகிறது. இறுதியில் மனிதன் அறிந்ததாக நினைப்பது எல்லாம் அறியாமையின் தொடக்கமே என்றும், விழித்திருந்தாலும் முழு பார்வை இல்லாத நிலையிலேயே வாழ்கிறான் என்றும் ஒரு ஆழமான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. கவிதை மண் புழுதியின் ஏக்கம் மழை சாரல் அறியும். விண்கல் பயணம் ஆழ்துளை அறியும். விழுதுகள் படரும் நேரம் விதி அறியும். பிறப்பின் காலம் வம்சம் அறியும். எண்ணங்கள் அசைபோடும் வேகம் காற்று  அறியும். உயிர்தூறல்  எதுவரை வாழ்நாள் அறியும். நிறங்களின் ஆயுட்காலம் வானவில் அறியும். உண்மை இடறிய கணம் துரோகம் அறியும். நிலையில்லா நிலத்தின் அகந்தை கல்தூண் அறியும். கடந்த காலத்தின் சுமை வரும்காலம் அறியும். வீரத்தின் வலிமை மகுடம் அறியும். புலமை புகுந்த வரிகள் மொழி அறியும். உறவில் பதிந்த கீறல்கள...

தூண்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை,' துணிவு' என்ற கருத்தை பல அடுக்குகளில் வெளிப்படுத்துகிறது. இரவின் அமைதியிலும்  அச்சத்திலும் உயிரை தாங்கி நிற்கும் தனிநபர் மனநிலையிலிருந்து தொடங்கி, போராட்டங்களிலும் வரலாற்றிலும் சிறு செயல்கள் பெரிய மாற்றங்களை உருவாக்கும் சக்தியாக மாறுகிறது. மனித அகந்தைக்கும் சமீக நீதிக்கும் எதிராக நிற்கும் மன வலிமை, பெண்களின் சுதந்திரக் குரல், முன்னோடிகளின் பாதையில் மீண்டும் எழும் புத்துயிர் - இவை அனைத்திலும் துணிவு ஒரு தொடர்ந்த உயிர்ப்பாகவும் படைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனிதனின்  தனிப்பட்ட தைரியம் அல்ல: மாறாக உயிரின் இயல்பாகவும், சமூக மாற்றத்தின் வேராகவும் இந்தக் கவிதை துணிவை காட்டுகிறது. கவிதை காற்றசையா வீதிகளில் இறகின் சுவாசம் நுகர்ந்து முகில் நெய்த கூரையில், இரவின் காவல் கண்களை மறைக்க உயிர் சுமப்பது துணிவு. துயில் ஆளும் ராத்திரியில் தரைப் படையின் மௌனத்தில் இருளின் அச்சம் கடந்து சிறு பொறி நிலமாளும்  வரலாற்றின் நம்பிக்கை- துணிவு. நீர் தழையும் நிலத்தில் இனம் காக்க  எல்லை  வகுத்து,  நிலம் செரித்து படையெடுக்கும் அகந்தை மாறா மனிதர்களின் தடை வளர்ப்பது த...

முடிவுரை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்வின் ஆழமான வெற்றிடத்தையும், நிறைவேறாத ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.காலம் நகர்ந்தும் வாழ்க்கையின் அர்த்தம் தெளிவாக தெரியாமல் போகும்  ஓரு நிலையை இது காட்டுகிறது. வானம் விரிந்திருந்தாலும் அதன் எல்லை கண்களுக்கு எட்டாதது போல, மனிதன் தேடும் நிறைவு எளிதில் கிடைக்காததாகவே உள்ளது. மேகம் கரைந்து மழையாக  விழுந்தாலும் மண்ணின்  தாகம்  தீராதது போல வாழ்க்கையில் நிகழ்வுகள் பல வந்தாலும் உள்ளத்தின் பசி அடங்காமல் தொடர்கிறது. வெளிப்படையாக இயற்கை இயக்கம் நடைப்பெறுகிறது போல தோன்றினாலும் உள்ளார்ந்த வெறுமை நீங்காத ஒரு அமைதியான வேதனை இந்தக் கவிதையின் மைய உணர்வாக உள்ளது. இது தனிமை, தேடல் மற்றும் நிறைவை நாடும் மனித மனத்தின் நிலையை நுட்பமாக பிரதிபலிக்கிறது. கவிதை முடிவுற்ற காலங்கள் விழித்திருந்தும் வானின் நீளம் தென்படவில்லை. மேகம் கரைந்த நீர்துளிகள் சிந்தியும் மண்ணின் தாகம் தீர்க்கப்படவில்லை. நிலம் இருகிய பாறைகள் குடைந்தும் பூமியின் புதிர் விடுபடவில்லை. பிறவிகள் ஏழு கடந்தும் சூரியனின் கதிர்கள் குன்றியதில்லை. நொடியின்  இடையில் இமை மூடும் விழிகள் கரைந்தாலு...

உருவம்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை காற்றைப் போல கண்ணுக்குப் புலப்படாமல் உடலுக்குள் மறைந்திருந்து, படைத்தவனின் ஆனையேற்று, காலம் முடியும் வரை பயணிக்கும் உருவமில்லா உயிர் சேர்ந்தது. உயிர் உடலில் மறைந்திருக்கும் வரை நல்லாற்றலாய் செயல்பட வேண்டும் என்பதை மாசற்ற சூரியனின் ஒளியில் ஒரு துளியும் கலங்கம் சேர்க்காமலும், உப்பு கலந்த கடல் நீரிலும்  நன்னீரின் சுவை உணர்வதும், காற்று கலந்த பூமியில் என் சுவாசம் மட்டும் புதியதாய் தென்பட வேண்டும் என்னும் இயல்பையும்  ,ஐம்புலனும் உயிருக்குள் கட்டுப்பட்டு நன்மை தீமைகளை பிரித்து உணரவேண்டும் என்பதையும்,வானம் சூழ்ந்த நிலத்திற்குள் தீயவை தீண்டாத இருப்பிடத்தில்  வசிப்பதையும் கடைப்பிடிக்க, பிறப்பில்  நீர் சூழ்ந்த உடல் இறுதி காலத்திற்கு பின் மண்ணில் புதையுண்டு மறையும் வரை காற்றடைத்த உடலில் அமைதி காக்க வேண்டும் என்னும் பொருள் கொண்டு   "உருவம்"  கவிதை படைத்தது. கவிதை காற்றின் வம்சமாய், புதராடும் கூட்டுக்குள், கண்ணிருண்ட உருவமாய், சிந்தித்தவனின் சிரம் பற்றி, காலத்தின் கணக்கில் அடிபணிந்து, உயிரென உடல் சேர்ந்தாய். சுடர் விரியும் நன்பொழுதில், ஒரு த...

எல்லை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்க்கை இயற்கையின் சட்டங்களைப் போல எளிமையுடனும், உண்மையுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது போல தோன்றுகிறது. இயற்கை எந்தச் செயலும் எதிர்பார்ப்பின்றி தன் இயல்பின்படி நடைபெறுகிறது. மலர் நறுமணம் தருவதற்கு யாருடைய முகவரியும் தேடவில்லை.  விதை முளைக்க முன் ஆய்வு செய்வதில்லை. கதிரவன் உதித்து மறைவது அவனது கடமை. அதேபோல் மனிதனும் தன் பண்பை காத்து வாழ வேண்டும். கர்வம், சீற்றம், கண்ணியமின்மை போன்றவை இயற்கையின் சீரிய ஒழுங்கில் இடமில்லை என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது. மனித சமுதாயம் இயற்கையைப் போல் சீராக இருந்தால் அதுவே இறை உணர்வை அடையும் வழி என்னும் தத்துவப் பின்னணியில் இந்தக் கவிதை அமைந்துள்ளது. கவிதை மலரில் கரைந்த நறுமணம், காற்றின் முகவரி தேடுவதில்லை. சுவை கலந்ந கனியின் மொழி, புலமைக்கு காத்திருப்பதில்லை. விதை உண்ட செம்மண், பசுமை உமிழ ஆராய்வதில்லை. தரை பயணம் முடியும்வரை, மழை நீர் துணைசேர்வதில்லை. மீன்களின் ஆயுள் முடியும்வரை, நாரைகளின் தவம் கலைவதில்லை. இலைகள் ஆடும் நாட்டியத்தை, இடியின் தாளம் நிர்ணயிப்பதில்லை. நாணம் புதைத்த பெண்ணின் உருவம், கர்வம் சேர்க...

அலைகள்

படம்
உள்ளடக்கம் " அலைகள்" - வாழ்க்கையை ஒரு தொடர்ச்சியான உள் மற்றும் வெளிப்புற பயணமாகப் பார்க்கும் கவிதை. இங்கு நிழல்கள்  என்பது கடந்த கால ஆனுபவங்கள், நினைவுகள், வேதனைகள், தோரணம் என்பது அவற்றை அலங்கரித்து ஏற்றுக்கொள்ளும் மனநிலை- உண்மை( நிஜம்) என்பது வெற்றிடத்தையும், வேகத்தையும் தன் வசப்படுத்தும் சக்தியாக வர்ணிக்கப்படுகிறது- அது அழகிய நிறங்களைக் கூட கரைத்து விடும் ஒரு துல்லியமான அனுபவமாக. பிரிவு, வறுமை, தோல்வி போன்ற வாழ்க்கையின் கட்டங்கள் இங்கு சோகமாக அல்ல, பரிணாம நிலைகளாக பார்க்கப்படுகின்றன. பின் நோக்கிய நினைவுகள் குவிந்தாலும், முன்நோக்கிய பயணம் நிற்கவில்லை. வறுமை தடையாக இருந்தாலும், கானலில் கூட  பசுமை முளைக்கும் என்பது போல் நம்பிக்கை மறையவில்லை.' இரு துணையின் ஒற்றை பல்லக்கு' என்பது காலத்தின் சுமையையும் உறவின் நிலைத்தன்மையையும் ஒரே உருவகத்தில் இணைக்கிறது. கவிதையின் இறுதியில் தன்னுயர்வு முக்கியமாகிறது. வெளிப்புற உலகின் குழப்பம், தர்க்கம், சிதைவு ஆகியவற்றை கடந்து, தனி மனிதன் தனது உள்ளார்ந்த மகுடத்தை அடையும் நிலை வெளிப்படுகிறது. வாழ்க்கை ( கதம்பம்), ஆனால்  ஒரு விதை போல் மனிதன்...

வறுமை

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை, வறுமையை ஒரு பொருளாதார நிலையாக அல்லாமல், மனித உடல், உயிர், சுவாசம், காலம் மற்றும் சமூக அடுக்குகள் அனைத்தையும் ஆக்கிரமிக்கும் முழுமையான அனுபவமாகப் பதிவு செய்கிறது. வாய்ப்புகள் இருந்தும் அனுமதி மறுக்கப்படும் சமூக வாசல்கள், அடிப்படை தேவைகளே அடைப்பாக மாறும் வாழ்வியல் சூழல், உயிர் காக்க வேண்டிய ஆதிமூல சக்திகள் உயிர் கெடுக்கும் பசியாக உருமாறும் நிலை ஆகியவை இதில் தீவிரமாக வெளிப்படுகின்றன. இறுதியில் மண்ணுக்குள் புதைந்திருக்கும் கம்பீரம் மேல்தளத்தை அசைக்க முனைவது மூலம், ஒடுக்கப்பட்ட வாழ்வின் அடக்கமில்லாத எதிர்ப்பும் மறைந்த வலிமையும் உணர்த்தப்படுகிறது. கவிதை முழுமை பெற்ற அடித்தளங்கள் காற்றில் பயணிக்க தேர்ந்தெடுக்கப்படாதவை- நிறைவாகிய வாசல் வரவேற்கவும் அனுமதி இல்லாதவை. வறுமையின் பிடியில்- செந்நீர் ஊற்று ஊடுருவ மறுக்கும், வெள்ளைக் கூட்டின் நகலாய் படர்ந்திருக்கும் மேலாடை சுருக்கமும் விரிவடைய மறுக்கும், ஆதி மனிதனின் உயிர் வளர்த்த நெருப்பு, பசியாய் உருவெடுத்து உயிர் கெடுக்க இசையும், உடல் சுமக்கும் பாதங்களும், தடம் காணும் கைகளும் பாரமென மண்ணில் இளைப்பாற நினைக்கும், விழித்தி...

நானும் அவளும்

படம்
உள்ளடக்கம் இயற்கையின் மடியில் மலர் ஒரு உயிராகப் பிறந்து, மொட்டாகி, மலர்ந்து வண்ணத்துப் பூச்சிகளுடன் உறவாடி தன் வாழ்வை நிறைவு செய்து உதிரும் தருணம் வரை நிகழும் வாழ்க்கைச் சுழற்சியை இந்தக் கவிதை சித்தரிக்கிறது. உதிர்வு இங்கு இழப்பாக அல்ல: தொடர்ச்சிக்கான அமைதியான பிரியாவிடையாக வெளிப்படுகிறது கவிதை இலை  தாங்கிய  மொட்டுக்கள் இரவின்  காவலில் இதழ்  விரித்து, பனித்துளியில்  நீராடி, வெண்கதிரில்  இதழ்  உலர்த்தி, வண்டிசையின்  வரவேற்பில் தேவதைகள்  கைப்பட ஒற்றை  நாற்காலியில் வீற்றிருக்கின்றன. முட்கள்  பதித்த திரைமறைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட  வண்ணங்களை, ஓவியமாய்  தீட்டப்பட்ட  இறகுகள், காற்றினும்  மெல்லிய  இடை  விரிந்து, இயற்கை  பகிர்ந்த  பருவ கால இரகசியத்தை கொண்டு  சேர்க்கும் வண்ணத்து  பூச்சி மலரின்  உற்ற தோழன். எண்களின்  முதன்மையாய் வரிசைகள்  பின்தொடரும் ஒற்றை  பொழுதின், விதி சுமந்து இயற்கையுடன் ஒன்றென கலந்த உயிரின்  இழப்பை, மலர் பொழிந்து, பிரியாவிட...

களம்

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை மண், இனம், வேர், கொடி, தலைமை ஆகிய உருவகங்களின் வழியாக ஒரு சமூகத்தின் அரசியல்- பண்பாடு பயணத்தை பேசுகிறது. மண்ணின் தாகம் என்பது அடக்கப்பட்ட மக்களின் உயிர்த்தாகமாகவும், ஊற்றாய் உயிர் வளர்ப்பது கூட்டு முயற்சியையும் குறிக்கிறது. வேர் - விதை- துளிர் என்ற இயற்கை சுழற்சி இனத்தின் தொடர்ச்சியையும், காலத்தை கணிக்கும் அரசியல் விழிப்புணர்வையும் காட்டுகிறது. தனிநபர் அல்ல, கூட்டு உணர்வே தலைமை எனும் கருத்து, " தலைவனின் இலக்கணம்" பகுதியில் வலுவாக நிறுவப்படுகிறது. கவிதை மண்ணின் தாகம் ஊற்றாய் உயிர் வளர்க்க, பாதம் பதிந்த நிலமும் ஒரு குரலில் சுவாசிக்க, என் இனம் எனும் வேர் கரங்களை கட்டி மையத்தில் சின்னம் ஏற்றி, கொடியாய் சிகரம் தொட்டது. கோபுரமாய் உயர்ந்த மணல் திட்டுக்கள், காற்றின் சுழற்சியில் திசை நான்கில் பயணித்து தாய் கொடியின் நகலாய், கலம் காண பயணிக்கின்றது. இனத்தின் உயிர் புதைந்த வேர் காலத்தின் கணிதனாய், உள்ளும் புறமும் நன்கறியும்- காற்றில் அலைப்பாயும் சரகுகளை உரமாய் தன்னுள் வளர்த்து, காட்டாற்றின் நீரை நெறிப்படுத்தி, தன்னுள் ஈர்த்துக்கொண்டு பருவங்கள் எதிர்நோக்கி, துளிர் ...

முரண்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன் தனது உடல், உணர்வு, காலம் மற்றும் உறவுகளுடன் எதிர்கொள்ளும் மாற்றங்களை அச்சமின்றி ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வெளிப்படுத்துகிறது. உயர்வு- தாழ்வு, இளமை- முதுமை, தனிமை- துணை போன்ற இருமைகளின் நடுவில் நின்றும், அகந்தை அல்லது தளர்வு இன்றி தொடரும் சுயநிலையே இதன் மைய சூழலாக அமைகிறது. ஒவ்வொரு செயல்பாடும் பயத்தின் மறுப்பாகவும், விழிப்புணர்வின் உறுதியாகவும் பதிவு செய்யப்படுகிறது. கவிதை தலைக்கனம்  மதிகெடுக்கும்  என உச்சி நிமிர ஆராய்வதில்லை, இமைகள்  விடைப்பெறும் என விழிகள்   விழித்திருக்க  தயங்குவதில்லை, சுவாசத்தின்  பரிமாற்றம்  அழற்சி  தருமென கண்களின்  நேர்கோடு  விலகுவதில்லை, நாவின்  உரசல்கள்  பிளவுபடும் என உதடுகள்  பிரிந்திருக்க  அஞ்சுவதில்லை, ஒலியின்  நீளம் மிகினும், குறையினும் துருவங்கள்  ஒன்றினைவதில்லை, கரங்களின் நேர்த்தியை முதுமை பின்தள்ளும்  என விரல்கள் நடுங்குவதில்லை, பாதங்களின்  அழுத்தத்தை கைத்துணை பகிர்ந்துகொள்ளும்  என நடை தளர்வதில்லை, ஒரு நொடி  ...

தேடல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை " தேடல்" என்பதை இயற்கையின் அடிப்படைத் தன்மையாகவும், உயிரின் அடையாளமாகவும் முன்வைக்கிறது. கதிரவன் முதல் உயிர் வரை அனைத்தும் தமக்கான நிறைவை, எல்லையை அல்லது விடுதலையை நோக்கி இடையறாது பயணிக்கின்றன. அந்த தேடல் வெளிப்படையான இலக்கை அடைவதற்கல்ல: கரைதல், இளைப்பாறு, அனுமதி போன்ற உள்ளார்ந்த நிலைகளை அடைவதற்கானது. கவிதையின் முடிவில் கூறப்படும்" காட்சிக்கு தென்படாதவை" என்பது தேடலின் உண்மையான நீளம் கண்களால் அளக்க முடியாதது: அது உணர்விலும் அனுபவத்திலும் மட்டுமே அறியப்படுவதாகும். இதன் முலம் மனித வாழ்க்கையின் அஸ்தித்வப் பயணமும் இயற்கையின் ஓட்டத்தோடு ஒப்பிடப்படுகிறது. கவிதை கதிரவனின்  தேடல்- நீலம் படிந்த கூரை தாழ்ந்து  மண்ணில் புதையும் வரை, காற்றின் தேடல்- சுவாசம் மறந்த நாடி இளைப்பாறும் வரை, கடலின் தேடல் - ஆழம் தடைப்படும் மண்குவியல் தோன்றும் வரை, பனியின் தேடல் - வெப்பம் சிதைக்கும் வெண்பாறை ஓடை காணும் வரை, நெருப்பின் தேடல் - செந்நிறம் மறைத்த காரிருள் வானில் படியும் வரை, வெப்பத்தின் தேடல் - உமிழ் தொலைத்த தாகம் நன்னீர் சேரும் வரை, அமைதியின் தேடல் - கலவரத்தின் நிழல...

கடல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை காலத்தின் ஓட்டத்தை நீரின் அலைகளாக உருவகித்து, இயற்கை, மனித இனம் மற்றும் வரலாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. மறைவு, இருள், மௌனம் ஆகியவற்றுக்குள் கூட புதிய விடியல் பிறக்கிறது. மண்ணை வளர்த்தும், இனத்தை உருவாக்கியும், கலை- பண்பாட்டை வடிவமைத்தும் வர- லாற்றில் தடம் பதித்த முன்னோடிகளின் உழைப்பு, சொல்லப்படாத காவியங்களாக உறங்குகிறது. தற்காலி கமான உடமைகளைத் தாண்டி, மண்ணின் ஆழத்தில் தவமிருக்கும் ஒளி, தடைகளை உடைத்து எதிர்காலத்தை நோக்கி எழும் நம்பிக்கையாக கவிதை நிறைவு பெறுகிறது. கவிதை காலத்தின் பதிவுகளை நீர் ஏட்டில் குறித்த அலையின் பக்கங்கள், திறக்க கரை தொடுகின்றன நட்சத்திரங்களின் மறைவில் புதிய விடியல் தோன்றும் இயற்கையின் விதியில்- மண் வளர்த்து இனம் வளர்த்து கற்சிற்பம் வடிவமைத்து வரலாற்று ஏட்டில் கால்பதித்த முன்னோடிகள் கதிரவனின் முரண்பட்ட பாகத்துக்குள் நீரை மட்டும் சுவாசித்து காரிருளில் அமைதியாய் உறங்கும் காவியங்கள்  நூறாயிரம், வரலாற்றின் பாதங்கள் நடைத்தளறாது முன்னோக்கி செல்ல அடியமைத்துக் காத்திருக்கின்றன கண் பட்ட  உடமைகள் கைப...

எதிர்முனை

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை உலகத்தில் காணப்படும் சக்தி, கட்டுப்பாடு, அதிகாரம் ஆகியவை எதனால் நார்ணயக்கப்படுகின்றன என்பதைக் குறித்து சிந்திக்கிறது. இயற்கை நிகழ்வுகள், காலம், மனித உழைப்பு, சமூக அமைப்புகள், மனநிலை மற்றும் அகந்தை ஆகிய வை தத்தம் காரணிகளின் வசப்படுத்தலுக்குள் இயங்குகின்றன என்பதை வரிசையாகக் காட்டுகிறது. ஆனால் இறுதியில், உண்மை, நேர்மை மற்றும் ஆழ்ந்த புரிதல் ஆகியவை எந்தக் கட்டுப்பாட்டுக்கும் முழுமையாக உட்படாதவை என்பதை உணர்த்துகிறது. இது மனிதன் எல்லாவற்றையும் அளக்கவும், ஆளவும் முடியும் என்ற அகந்தைக்கு எதிரான ஒரு தத்துவக்  கேள்வியாக நிற்கிறது. கவிதை இருளின் கர்வம் மின்மினி  வசப்படும், வெண்மேக நிறம் காரிருள்  வசப்படும், நீரின்  வேகம் கூழாங்கல்  வசப்படும், மலை முகடின் உயரம் உளியின்  வசப்படும், வெண்பஞ்சு  காலம் திரியின்  வசப்படும், சுட்டெரிக்கும்  அனல்காற்று பருவமழை  வசப்படும், குளிர்பனி காலம் கதிரவன்  வசப்படும், கனமான இதயம் இறையருள்  வசப்படும், செல்வச்செருக்கு வள்ளல்  வசப்படும், வறுமையின்  துயரம் உழைப...

இரண்டெழுத்து

படம்
உள்ளடக்கம் வாழ்க்கை பயணத்தில் திசை மாறும் தருணங்கள், உறவுகளில் ஏற்படும் இடர்பாடுகள், நம்பிக்கை இருந்தும் ஒளி மறையும் நிலைகள்- இவை அனைத்துக்கும் காரணமாக வெளிப்படையாக விதி தோன்றினாலும், உண்மையில் அது மனித நன்னடத்தை தவறும் இடங்களில் உருவாகும் விளைவு என்பதை இக்கவிதை வெளிப்படுத்துகிறது. இயற்கையும் வாழ்க்கையும் ஒரே சிந்தனைப் பாதையில் இணையும் தத்துவப் பின்னணியே இதன் சூழல். கவிதை பொருள் உணரா பயணத்தில்- இருள் எதிர்த்த விடிவெள்ளி திசை உணர்த்த நினைத்தாலும், கரை படிந்த வெண்முகில் மதி மறுத்தும், இடை வலுத்தும், இமை தூரிகை இதமாய் சம்மதித்தாலும், தடையும் தரமற்றதாகும் நன்னடத்தை தவறிய விதியால்.. தென்றல் அசையும் மாடத்தில், வெண்மலர்கள் தரை தவழ்ந்து நறுமணம் சூழும் தருணத்தில், வேரறுத்த சூறைக்காற்று இடர் ஏற்று, நிலை குலைத்தது நன்னடத்தை தவறாய விதியால்.. உறவு பாலம் தழைத்து வாழையின் வரிசை தொடர்ந்தாலும், வசை பாடும் கரையான் கூட்டம் அரிக்க நினைத்தது: பாதை தகர்ந்தது நன்னடத்தை தவறிய விதியால்.. மேற்கில் திசை மறைத்தாலும், கிழக்கில் உதயமாகும்,  எனும் தருணத்தில் காற்றழுத்தம் மேலோங்கி, ஒளியும் முடங்கி போனது, நன்னடத்த...

கானல் நீர்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இல்லாமையின் மூலம் சொல்லப்படும் இருப்பை பேசுகிறது. இயற்கை, கலை, மரபு, உணர்வு, பெண்ணியம் - எல்லாவற்றிலும் இருக்க வேண்டிய அடிப்படை பண்புகள் மறுக்கப்பட்டுள்ள ஒரு உலகம் வரிசையாக உருவாக்கப்பட்டுள்ளது. கவிதை முகில்  இடறிய  வானம், பனி படறா புல்வெளி, அலை  உறங்கும் கடல், இலை வருடா பூங்காற்று, பெண்மை மறைத்த நளினம், வாழை மறுத்த விருந்தோம்பல், திசைகள் கலைந்த பூலோகம், கார் முகில் பழித்த மயில்தோகை, தூரிகை துறந்த அழகோவியம், தளபதி முன்மொழியா போர்முழக்கம், ஜதி இணையா நாட்டியம், மழை நனையாத மலையருவி, மழலை உணரா தாலாட்டு, தேரடி காணா தேரோட்டம், இரவு விழித்திராத விடி வெள்ளி, மலர்கள் நுகராத தேனீக்கள், வெயில் வடித்த வானவில், வரலாறு பதியாத செப்பேடு, சுமை விழுங்கிய பெண்ணாற்றல் கண்டும், காணாமலும் அசைப்போடும் சிலை வடித்த முகபாவம் கானல் நீரில் கரையும் உயர்வு பெற்றது.

இரு

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இயற்கை, மனித சமூகம், மனம், காலம் ஆகிய அனைத்திலும் இயல்பாக இனைந்து வாழும் இரட்டைத்தன்மைகளை(  இருள்- ஒளி, நன்மை- தீமை, அன்பு- பகை, பிறப்பு- இறப்பு) தத்துவ  ரீதியாக ஆராய்கிறது. எதிர்மறைகள் ஒன்றுக்கொன்று எதிராக அல்ல: ஒரே பயணத்தின் இணைநடப்பாளர்கள் என்ற பார்வையை முன் வைக்கிறது. நொடிகள் ஓடிக்கொண்டே இருந்தாலும், அந்த ஓட்டத்திற்குள் மனிதன் தேடும் ஓய்வு, அர்த்தம், சமநிலை ஆகியவற்றை கவிதை சுட்டிக்காட்டுகிறது. கவிதை இயற்கையின் வசிப்பிடத்தில் இரவும் பகலும், முகம்காட்டா விருந்தினர்கள். கதிரவனின் தாகம் தீர்க்கும் அடர்ந்த கோப்பைக்குள் இருளும் வெளிச்சமும், விண்வெளி சாயல்கள். இறைவன் காணும் நடைப்பாதையில் நன்மையும் தீமையும், கைகோர்க்கும் வழிபோக்கர்கள். மனிதன் ஆளும் சமூகத்திற்குள் அன்பும் பகையும், ஓயாமல் அசையும் ஊஞ்சல்கள். மதி வளர்த்த கணிதத்தில் ஒன்றும் நூறும், துணை விரும்பா ஆற்றல்கள். வெளிச்சத்தில் கண்விழித்தும், இரவில் கண்ணசரும் பயணத்தில் பிறப்பும் இறப்பும், சலிப்பில்லா மரபு சூழற்சிகள். மனம் புதைந்த உயிர் வட்டத்திற்குள் இன்பமும் துன்பமும், வெற்றிடம் கண்காணிக்கும் உளவாளிகள்...

நினைவுகள்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனத்தின் அனுமதி- மறுப்பு, உணர்வுகளின் நுழைவாயில், நினைவுகளின் சுழற்சி, மற்றும் மனிதன் உலகில் பதிக்கும் தடத்தின் தத்துவத்தை பேசுகிறது.  முகவரி இல்லாத எண்ணங்கள், அனுமதி பெறாத உணர்ச்சிகள் கோபமாக மாறும் விதம், மென்மையை உணரத் தெரிந்த பாதங்களுக்கும், காலச் செருக்கில் கரடுமுரடாகிய பாதங்களுக்கும் இடையிலான வேறுபாடு இங்கு வெளிப்படுகிறது. இயற்கையின் வடிவமைப்பில் மனிதன் பதிக்கும் கால் சுவடுகள் உலகின் சமநிலையைச் சிதைக்காமல், மாறாக இரு துருவங்களையும் இணைத்து கேட்க முடியாத இன்னிசையோடு அண்டம் நடனமாடும் என்ற தத்துவ உணர்வை கவிதை எடுத்துரைக்கிறது. கவிதை முகவரி இல்லாத வரிகளின் தொகுப்பு- மனதிற்கு மட்டும் புலப்படும் சம்பவங்களின் அணிவகுப்பு. மனதின் அனுமதி பெற்று, இதய வாசலில் நுழைய காத்திருக்கும் பயணச்சீட்டு, அனுமதி இல்லாததால் கோபத்தணலில் வெளியேறும் வன்மங்கள். இதழின் மென்மையை உணரும் பாதங்கள், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலின் வெளிப்பாடு., காலச்செருக்கில் முட்களை பதம்பார்த்த பாதங்கள், நினைவெனும் காலச்சுழற்சியை அனுபவிக்க தகுதியற்றவை. உலகின் வடிவம் இயற்கை சார்ந்தது என்றாலும் உயிராய...

நிறம்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை " நிறம்" என்பதை வெறும் கண்ணுக்குப் புலப்படும் தோற்றமாக அல்லாமல், இயற்கை, உயிர், காலம்,  இளமை, முதுமை ஆகிய அனைத்தையும் இணைக்கும் ஒரு மௌன சக்தியாகப் பார்க்கிறது. மலர்கள், பசுமை, இரத்த ஒட்டம், கூந்தல், சூரியன் போன்ற  உவமைகள் மூலம் நிறம் வாழ்க்கையின் தொடர்ச்சி, பாதுகாப்பு, உயிர்ப்பாடு மற்றும் அமைதியான பயணம் என்பவற்றிறன் அடையாளமாக வெளிப்படுகிறது. கவிதை நிறம் என்னும் மாயை, காற்றில் கரைந்திருக்க, இரகசியம் அறிந்த மலர்கள்  காற்றோடு உறவாடி, நிறமெனும் இயற்கை ஆபரணம் அணிந்து, வழிவழியாய் அழகின் மகுடம் சாயாமல் வீற்றிருக்கின்றன. பூமியின் கட்டுடல் தளறாமல் இருகப்பற்றி, சேவகனாய் கற்காலம் தொட்டு இன்று வரை கவசமாய், பசுமையாய் விழித்திருக்கும் வண்ணம் நிறத்தின்  தளபதி. உயிரின் தாகம்  தீர்க்க வற்றாது பாய்ந்தோடும் செந்நீர், செவ்வானம் நிறம் தொட்டு உடலெனும் கூட்டுக்குள் வளைந்து நெளிந்து வற்றாது சப்தமின்றி பயனிக்கும். இளமை என்னும கருங்கூந்தல் வெந்நிற  முதுமைக்குள் ஒளிந்திருப்பதைப் போல, நிறத்தின் உவமைகள் கைக்குள் அடங்காதவை- கதிரவனின் ஒற்றைக் குடைக்குள...

புதுமை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை, இயற்கையின் முரண்களில் மறைந்திருக்கும் அற்புதங்களை வெளிப்படுத்துகிறது. ஆழ்கடல்- அமைதி, பாலைவனம்- பசுமரம், மௌனம்- முழக்கம் போன்ற எதிர்மறை நிலைகளின் சங்கமம் மூலம் உயிர், உணர்வு, சுவாசம், தாகம் ஆகியவை ஒரே மேடையில் நிகழும் புதுமைகளாகக் காட்சியளிக்கின்றன. மனிதன் மொழியால் வரையறுக்க முடியாத அழகுகள், இயற்கையின் அரங்கில் இயல்பாகவே அரங்கேறுகின்றன என்பதே கவிதையின் மைய உணர்வு. கவிதை ஆழ்கடல்    மிதக்கும் அமைதி, முழு நிலவில் தும்பையின் பிரவேசம், ஓலையின் வரிசையில் கண்சிமிட்டும் கதிர்கள், மௌனத்தின் துணைசேரும் வெண்சங்கு முழக்கம், நீர் சுரக்கும் கருவறையில் காற்றின் வெற்றிடம், பட்டின் இழை தாங்கிய மேலாடை, பாலையில் நீர்சுரக்கும் பசுமரம், பனிகாட்டில் தத்தி நடக்கும் உயிரோவியம், காற்றருவியில் சுவாசம் பதித்த  மூலிகைகள், நேர்திசை மறவா மழைத்துளி பயணம், மலர்கள் சுவைத்திடாத தேன் விருந்து, துகள் வென்ற வெப்பத்தின் பெண் ஆபரணம், கடல் தணிக்காத நன்னீர் தாகம், இலக்கில்லா வட்டத்துக்குள் இரைதேடும் தீச்சுடர், நடுநிசையில்  துயிலுரியும் மலரினம், எழுத்துக்களின் வரையரைக்குள் தென்படாத அ...

நான் உணர்ந்த தலைவன்

படம்
  உள்ளடக்கம் இந்தக் கவிதை தியாகம், தவம் நேர்மை ஆகியவற்றின் வழியே உருவாகும் ஒரு நவீன தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. அதிகாரம் அல்ல பொறுப்பு என்பதே உண்மையான  தலைமை எனக் கூறும் கவிதை. கவிதை தவம் கலைத்த இந்தியத் தாயின் தலைமகனுக்கு... வாய்மை வழித்துணையானதால் வறுமை பிழையில்லை என திலகம் தொலைத்த  நெற்றியில் தன் விருப்பம் சுருங்கி தியாகம் விழியில் ஒளிவீச - மூன்று புறமும் நீர்சூழ்ந்த நிலமாளும் சுடர் தென்பட்டதால் உடல் வருத்தி, பாதை வகுத்தாய் மனை துறந்து மானுடம் காக்க. வடக்கில் தடம் வலுத்த பாதம் தென்தேசத்தில் கம்பன் நிலம் படர்ந்ததால், காலம் சுமந்த பாரதம் மீண்டும் புத்துயிர் பெற, சுதந்திரத்தின் நூற்றாண்டில் வாகை சூடி, உலகம் புகழும் உத்தம தலைவனாய், யோகம் வளர்த்த உடல் மெருகேறி வையகம் போற்றும் எங்களுள் ஒருவனாய் வாழும் ஆரவாரத்திற்கு குறைவில்லை, தலைமையில் மாற்றமில்லை. உன் நேர் பார்வையில் கண்டமும் கதைசொல்லும் மனிதத்தின் புகழ் ஓங்கும். பெண்ணின் துயரம் உன் தோல் சேர்ந்ததால் கருணையையே காரியமாக்கி தாயானாய். தேசத்தின் பாதுகாப்பிலும், நிதி பகிர்விலும் பெண்கரம் வலுத்ததால் தந்தையுமானாய். சைவமும் வ...

நிழலும் நிஜம் தேடும்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன்  அனுபவிக்கும் சோர்வு, மன மறுபிறவி, அன்பின் அரவனைப்பு மற்றும் இயற்கையோடு ஒன்றும் வாழ்க்கை சுழற்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டது. கவிதை தரை தொட்ட கணம் பொழுதும் சோர்ந்து போய், ஓய்வின் நுழைவாயில் சேர்ந்தும்,சேராமலும் என் கண்கள் ஒளி பெற காத்திருந்தது. கருவறை துறந்த மறுகணம் மனம் உதித்த தளிர் மேனியில் காலமும், பட்டும் படாமல் என்னை வரவேற்கிறது என சலனம் தழுவியது. செவி திகட்டா சொல்லழகும், தோய்வரியா அரவனைப்பும், என் நிழலின் மறுஉருவமாய் விரலின் வேலிக்குள் புறம் செழித்தது அகமும் குளிர்ந்தது. மதி வளர்த்த கல்வியும் உறம் சேர்த்த உறவும் வண்ணம் போர்த்திய கனவும் அழகாய் பாதை தொடுத்தது. கரை சூழ்ந்த பூங்காற்று நீரோடையின் வழி கொண்டு மறுகரை சேர்ந்தது. வெண் மேகம் கரை படிந்து ஒளியும் கண் மறைத்தது.  மழைத் துளியில் மாசகன்று வளமாய் வாழ்வதும் காற்றில் ஈரம் கரைந்து நிலம் தாகம் கொள்வதும் இயற்கையின் அரவணைப்பில்..

இலக்கு

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இருள்- ஒளி, வறுமை- அதிகாரம், அமைதி- அதிக சப்தம், இயற்கை- மனித அறிவு ஆகிய எதிர்மறை நிலைகளுக்கிடையே மனித மனம் மேற்கொள்ளும் அமைதியான தேடல் பயணத்தை  பேசுகிறது. கவிதை இரவின் மணித்துளிக்குள் ஒளியின் நொடி தேடும் விழிகள். குடைந்த பாறைக்குள் தாகம் தீர்க்க நினைக்கும் மனம். நிலவு சேர்த்த பகலில் ஈரம் காயும் புல்வெளி. வறுமை புதைந்த நிலத்தில் பகட்டின் கனி சுவைக்கும்  அதிகாரம். அடர்ந்த கானகத்துள் விதை தேடும் விலங்கினம். பறவையின் இறகில் உலகம் அளக்கும் விஞ்ஞானம். ஆழ்கடலின் அலையோசையில் மௌன மொழி பேசும் மீன்கள். செம்மொழியின் நிலப்பரப்பில் புதியதோர் அத்யாயம். மண் புதைத்த உறைவிடத்தில் காற்று தீண்டா தீபச்சுடர். இனம் தோற்ற வைகரையில் மாசில்லா வெண்மலர் கூட்டம் அமைதியின் பயணம் நோக்கி இதழ்விரித்து புன்னகைக்கிறது.

நோக்கம்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இயற்கை, மனிதன், காலம் மற்றும் வாழ்க்கை ஆகிய அனைத்தும் எதை நோக்கி நகர்கின்றன என்ற அடிப்படை தத்துவக் கேள்வியை முன்வைக்கிறது. கவிதை வானம் போர்த்திய நிலமும் போர்வை துளைத்த நட்சத்திரங்களும் எதை நோக்கி.. மண் கலந்த வாசமும் மழையறியா விரிசல் நிலமும் எதை நோக்கி.. வெப்பம்  ஈன்ற தீப்பொறியும் தாவரம் தழைக்காத வெண்ணிற பூமியும் எதை நோக்கி.. பிறப்பு சுமக்கும் இரகசியமும் முடிவரியா பயணத்தின் தொடர்கதையும் எதை நோக்கி.. சூரியன் மறைந்த நல்லிரவும் வெளிச்சம் பரிமாறும் நில வொளியும் எதை நோக்கி.. பற்றில்லா புறம் காணும் துறவும் ஆசையின் பொதி சுமக்கும் மானிடமும் எதை நோக்கி.. சமூகம் வரைந்திடாத ஓவியமும் வண்ணம் தீட்ட பாயும் கரங்களும் எதை நோக்கி.. இரு விழிகளின் காட்சியும் ஆயுள் மறந்த பூமி சுழள்வதை நோக்கி..

பயணம்

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன் இயற்கையுடன் மேற்கொள்ளும் பயணத்தைச் சொல்லும் ஒரு உணர்வுப் பதிவு. பூமி மனிதனுக்குச் சொல்வது ஒன்று மட்டுமே- நாம் உரிமையாளர்கள் அல்ல: விருந்தினர்கள். கவிதை பாதங்கள் இளைப்பாற விழிகள் மட்டும் விழித்திருக்க கிழக்கும்,மேற்கும் ஒரு சேர வரவேற்க, மேகங்கள் வெண் கம்பளம் விரிக்க காற்றும் இலை தழைகளும் சாமரம் வீச, யுகங்களாய் முதுமை தழுவாத பூமி பெண்ணின்  இருப்பிடம் காணும் முனைப்புடன் ஒரு பயணம். பச்சை நிலப்பரப்பில் நிறங்கள் ஏழு வண்ணம் தீட்ட, சாரல் மழை  சந்ததி வளர்க்க, செழுத்திருக்கும் பசுமை கூட்டுக்குள் அனுமதியின்றி கால் பதித்ததால் செந்நிற சீற்றத்துடன், தலைவிரிக் கோலமாய் நில மகள் தன்னைத் தானே அழித்த சுவடுகள், அச்சுருத்தும் நிஜங்கள். விண்கற்களின் உயிர் நடுங்கும் ஒலி பூமியின் சமநிலை குன்றியதால் இயற்கையின் சுற்றத்தார் விடுக்கும் எச்சரிக்கை. நிலத்தின்  மூதாதையர் வாழும் நீல போர்வைக்குள் புதைந்திருக்கும் மர்மங்களை கட்டவிழ்க்க முற்பட்டதால் பேரலை என்னும் பேரிடரால் மனித கூட்டம் வாழ்வை இழந்தது. விதிக்கப்பட்ட எல்லைக்குள் விருந்தினராய் அகம் மகிழ்ந்து வா...

இயற்கை

படம்
உள்ளடக்கம்  இந்தக் கவிதை விடியற்காலையில் என் முற்றத்தில் நிகழும் சிறிய- சிறிய இயற்கை செயல்களை கவனித்ததில் இருந்து பிறந்தது. இயற்கை பேசுவதில்லை: ஆனால் நம்மை சிந்திக்க வைக்கின்றன. கவிதை நீலவானம் ஒற்றை  கண் விழித்து பூமிக்கு ஒளி தரும் தருணம் இலை என்னும் போர்வை நகர்த்தி விடியலை வரவேற்கும் பறவைக் கூட்டங்கள். அழையாத விருந்தாளியாய் மலரின் இருப்பிடம் சென்று தேனை சுவைக்கும் தேனீக்கள். ஆங்காங்கே  சிதறிக்ககடக்கும்  சிறகும், இலை சரகுகளும் தனக்கென காத்திருந்ததைப் போல  தன் கூட்டை அலங்கரிக்க நயமாக சேகரிக்கும் சிட்டுக் குருவிகள். தானியங்களை பின்னங்காளில் இளைப்பாறி பற்களின் இன்னிசையோடு உண்டு மகிழும் அணில்கள். செயற்கை  ஆற்றலோடு போட்டியிட்டு மண் சிதறாமல் ஊடுருவி சத்துக்களை கொடிகளுக்கு பரிசளிக்கும் மண் புழுக்கள், தாவர நண்பன். தனக்கு அடைக்கலம் தந்த தோழனின் ஆயுள் வேண்டி இலகால் பொந்தமைத்து காவல் நிற்கும் மரங்கொத்தி பறவைகள். என் இமைகள் மலர வரம் கொடுக்க என் முன் தோன்றும் கருங்குருவி என் வாழ்க்கை பாதையின்  திடமான நம்பிக்கை. என் முற்றத்தில் என்முன் நடந்தேரிய இயற்கை ந...

நிழல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும் உள் நிழலைப் பற்றி பேசுகிறது. தடுமாற்றம், பிழை, இருள், மனக்குழப்பம் ஆகிய தருணங்களில் அது காவலாய், வேலியாய் கைகொடுக்கும் சக்தியாக செயல்படுகிறது. நினைவுகள் இருளை சூழ்ந்தாலும், அவை நிலைத்தவை அல்ல: நொடி பொழுதில் கரைந்து போகும் நிலையற்ற உண்மையென கவிதை நம்பிக்கையுடன் முடிகிறது. கவிதை நிழல் தாங்கும் பாரம் நிஜங்களின் எல்லைக்குள் பயணிக்கும் வரை எட்டி நின்று காவல்காக்கும் பிழை பொறுத்து கண்களின் காட்சி தடுமாறும் வேகத்தில் பாதை சீர் பெறும்வரை வேலியாய் பின் தொடரும் மனம் தடுமாறி நடை தடம் மாறி வெறுமையான காட்சிகளின் எதிரில் நின்று கைகொடுக்கும் நிலம் சூழ்ந்த இருள் நினைவிலும் தொடர்ந்து வர நொடி பொழுதும் தாமதமில்லாமல் கரைந்தே போய்விடும்.

மௌனம்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மௌனத்தின் ஆழ்ந்த இருப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பார்வைக்குள் சிக்கிய நினைவுகள், வெளிப்பட முடியாத உணர்வுகள், சொற்களாக மாற மறுக்கும் வலி- இவை் மௌனத்தின் வழியாக வெளியில் செல்லும் நிலையை கவிதை காட்டுகிறது. கவிதை பார்வைக்குள் அகப்பட்ட  நினைவுகள் மனம் ஈர்க்காமல், தன் நிலை பகிராமல் வெளியேறும் வாசல்- மௌனம். உணர்வுகள் சிதைத்த வரிகள் உதடுகளின் உரசல்கள் கடந்து,சலனமில்லாமல் வெளியேறும் மொழி- மௌனம். அலையாய் நடை பழகும் சப்தம் தடை தகர்த்தால் நிலையான நிசப்தம் உள்வாங்கிவிடும். புயல் வசிக்கும் கூட்டுக்குள்,இடராமல் இமை  தோகை விரித்து காட்சிக்கு முரண்படாமல் வசிப்பது மௌனம். வெற்றியின் சாரல் புயல் மழையாய் கடந்தாலும் தனிமையின் தேடலில் புலன்கள் ஒன்றிணைய நிழலாய் தொடர்ந்து என்னுள் புதைந்திருப்பது- மௌனம்.

கற்றவை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்வின் பயணத்தைப் பிறப்பிலிருந்து முதிர்ச்சிவரை எடுத்துச் சொல்கிறது. அழுகை எனும் பலவீனத்தில் தொடங்கி மகிழ்ச்சி என உயர்ந்து இறுதியில் சிரிப்பு என்ற விடுதலையில் வந்து முடிகிறது. கவிதை பிறப்பு அழுகை கற்றுத்தந்தது, அழுகை வலிமை தந்தது, வலிமை போராட கற்றுத்தந்தது, போராட்டம் துணிவை தந்தது, துணிவு முயற்சியை கற்றுத்தந்தது, முயற்சி ஆற்றல் தந்தது, ஆற்றல் தன்னம்பிக்கை கற்றுத்தந்தது, தன்னம்பிக்கை ஆள கற்றுத்தந்தது, ஆளுமை பொறுப்பை கற்றுத்தந்தது, பொறுப்பு உயரம்  தந்தது, உயரம் அடக்கம் கற்றுத்தந்தது, அடக்கம் அமைதி தந்தது, அமைதி சிந்திக்க கற்றுத்தந்தது, சிந்தனை வடிவம் தந்தது, வடிவம் ஆராய கற்றுத்தந்தது, ஆராய்ச்சி புதுமை கற்றுத்தந்தது, புதுமை வளர்ச்சி தந்தது, வளர்ச்சி முன்னேற்றத்தை கற்றுத்தந்தது, முன்னேற்றம் அரவணைக்க கற்றுத்தந்தது, அரவணைப்பு அன்பை  தந்தது, அன்பு ஒற்றுமை கற்றுத்தந்தது, ஒற்றுமை மகிழ்ச்சி தந்தது, மகிழ்ச்சி சிரிக்க கற்றுத்தந்தது, சிரிப்பு அழுகையை மறக்க கற்றுத்தந்தது.

நீர் குமிழி

படம்
நீர் குமிழி உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித மனத்தின் நிலையற்ற தன்மையையும், உணர்வுகள் தோன்றி மறையும் விதத்தையும் நீர் குமிழி போலவே கனமான இதயத்திலிருந்து பிறக்கும் எண்ணங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்து, புன்முருவலாய் மிதந்து, இறுதியில் எதார்த்தம் எனும் காற்றில் கரைந்து போகின்றன. மனத்தின் ஆசை, அதன் ஆயுள், மற்றும் வாழ்க்கையின் கடுமையான உண்மை இவைகளின் மோதலை நுணுக்கமாக பதிவு செய்யும் கவிதை இது. கவிதை திடமான பூமி பந்து வெப்பம் தாளாமல் தன்னை குளிர்விக்க வெளியேறும் வெள்ளருவி தன் மகிழ்ச்சியை நீர் குமிழியாய் உருமாற்றி காற்றில் மறையும். கனமான இதயத்தில் தோன்றி மறையும், எண்ண ஓட்டங்கள் பாரம் தாங்காமல் மனம் என்னும் கூட்டில் இளைப்பாறி, அவ்வப்போது இதமான புன்முருவலோடு காற்றில் பறக்கும். மனம் என்னும் நீர்குமிழி,ஆயுள் வேண்டி மெம்மேல் பறந்தாலும், எதார்த்தம் என்னும் காற்றின் வேகத்தால் நொருங்தி, இடமறியாமல் கரைந்து போகும். எத்தனை நீர்குமுழிகள் காற்றில் கரைந்தனவோ.... காற்றணுக்களின் எண்ணிக்கையில் மறைந்திருக்கின்றன.

உடமை

படம்
உள்ளடக்கம்   கவிதை "நான், " என்ற சொல்லின் ஆழமான தேடல். இது தனிப்பட்ட அகந்தை அல்ல: இயற்கை, உழைப்பு, பக்தி, தாய்மை, வயது, விதி, விடுதலை அனைத்தையும் தன்னுள் ஏற்றுக்கொள்ளும் முழுமையான மனித அடையாளம். கவிதை மழை பொய்த்த பூமியின் தாகம் எனது, நிலம் உழுத வேர்வையின் பசுமை எனது, வண்ணம் சூடிய இயற்கையின் கலை எனது, தென்றல் உரசிய கரங்களின் இசை எனது, இறை கலந்த தியானத்தின் பக்தி எனது, பயணத்தின் முடிவுறை எழுதும் முதுமை எனது, புதைமண் வடிவம் காணும் ஆற்றல் எனது, மடி தவழும் மழலையின் தாய்மை எனது, மனம் இசைந்து இமைகள் சந்திக்கும் தாலாட்டு எனது, விதி சுமந்து வையகம் வாழும் பிறப்பு எனது, துயில் கலைத்த சிறையின் சுதந்திரம் எனது, " நாம்" கலைந்து " நான்" சேரும் முயற்சி எனதே எனது..........

கண்ணாடி

படம்
 கண்ணாடி உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன் தன் உணர்வுகளை  யாரிடமும் வெளிப்படுத்த முடியாத தருணங்களில் தீர்ப்பின்றி, கேள்வியின்றி, மௌனமாக உடன் நிற்கும் கண்ணாடியை  ஒரு நெருங்கிய தோழியாகப் பார்க்கிறது. கண்ணீர், இன்பம், அழகு, கண்ணியம், ரகசியம்- அனைத்தையும் அனுமதி கேட்டே ஏற்றுக் கோள்ளும் அந்த மௌன சாட்சி தனிமையின் பாதுகாப்பையும், சுயமரியாதையின் எல்லையையும் மென்மையாக வெளிப்படுத்துகிறது. கவிதை எதிர்மறை எண்ணங்கள் மெல்லிய மனதை சலசலக்க  இமைகளை நீராட்டி வெளிவந்த நினைவு கரைசலை கையால் துடைத்த என்னை யாரும் கவனிக்க மறுத்ததால்  அமைதியுற்றேன் - ஆனால் அவள் கவனித்தாள். உதட்டின் காவலை மீறி  வெளிவந்த முத்துக்கள் சிதறாமல் உள்வாங்கிய மெல்லிய உணர்வை யாரிடமும் பகிராமல் இன்புற்றேன் - அதை அவள் உணர்ந்தாள் முல்லை மொட்டுக்கள் விரிந்தும் விரியாமலும் என் கூந்தலில் வீற்றிருந்த அழகை சரிபார்க்க அவள் இசைந்தாள் ஆடைகள் தன்றெறி மாறாமல் கண்ணியத்துடன் ஒத்துழைக்க அவள் காவலானாள் இரவு பகல் பாராமல் எனக்காக விழித்திருந்து நான் கேட்டதை  நான் பார்த்ததை  நான் உணர்ந்ததை அப்பழுக்கிலலாமல் என...

அழகியல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை, அழகு என்பதைக் காட்சியழகாக மட்டும் அல்லாமல், இயற்கை, மனித உணர்வு, பண்பு, மொழி, சமூகநிஜம் ஆகிய அனைத்திலும் பரவியிருக்கும் ஒரு ஆழ்ந்த அனுபவமாக வெளிப்படுத்துகிறது. வானிலிருந்து விதை வரை, மழையிலிருந்து முதுமை வரை, வறுமையிலிருந்து கருணை வரை- எதிர்மறை, நேர்மறை இரண்டிலும் ஒளிந்திருக்கும் அழகை கவிதை நுணுக்கமாகச் சுட்டிக்காட்டுகிறது. இறுதியில், தமிழ் மொழியே அந்த அழகின் உச்சமாக உயர்கிறது. கவிதை வெண்கதிர் மறைத்த வானின் பிறை அழகு, முகில் பாய்ந்தோடும் நீலத்திரையில் நட்சத்திரம் அழகு, இறகு தொடுத்த பறவைக் கூட்டத்தின் வரிசை அழகு, கனி உதிர்த்த விதையின் முளைகள் அழகு, காற்று துளைத்த மூங்கிலின் இன்னிசை அழகு, முதுமை பின்நோக்கி அசைப்போடும் மழலை அழகு, பனி உறையும் வெங்காட்டின் தீப்பொறி அழகு, புதுமை தழுவிய நுற்றாண்டின் பழங்கதை அழகு, இமை சுமக்கும் விழியின் கருணை அழகு, நிலம் சுமக்கும் கோபுர பல்லக்கின் கற்சிலை அழகு, கண்டம் கடந்து தேசம் வளர்க்கும்  பண்பாடு அழகு, வேர்வை குளித்த நெல்மணியின் குவியல்  அழகு, பெண் மறைத்த உளவியல் கண்டறிந்த கவி அழகு, இடை மெலிந்த பெண்ணின் வறுமை அழகு, அழகில் ...