தேடல்

உள்ளடக்கம்

இந்தக் கவிதை " தேடல்" என்பதை இயற்கையின் அடிப்படைத் தன்மையாகவும், உயிரின் அடையாளமாகவும் முன்வைக்கிறது. கதிரவன் முதல் உயிர் வரை அனைத்தும் தமக்கான நிறைவை, எல்லையை அல்லது விடுதலையை நோக்கி இடையறாது பயணிக்கின்றன. அந்த தேடல் வெளிப்படையான இலக்கை அடைவதற்கல்ல: கரைதல், இளைப்பாறு, அனுமதி போன்ற உள்ளார்ந்த நிலைகளை அடைவதற்கானது. கவிதையின் முடிவில் கூறப்படும்" காட்சிக்கு தென்படாதவை" என்பது தேடலின் உண்மையான நீளம் கண்களால் அளக்க முடியாதது: அது உணர்விலும் அனுபவத்திலும் மட்டுமே அறியப்படுவதாகும். இதன் முலம் மனித வாழ்க்கையின் அஸ்தித்வப் பயணமும் இயற்கையின் ஓட்டத்தோடு ஒப்பிடப்படுகிறது.

கவிதை

கதிரவனின்  தேடல்-
நீலம் படிந்த கூரை தாழ்ந்து 
மண்ணில் புதையும் வரை,

காற்றின் தேடல்-
சுவாசம் மறந்த நாடி
இளைப்பாறும் வரை,

கடலின் தேடல் -
ஆழம் தடைப்படும்
மண்குவியல் தோன்றும் வரை,

பனியின் தேடல் -
வெப்பம் சிதைக்கும்
வெண்பாறை ஓடை காணும் வரை,

நெருப்பின் தேடல் -
செந்நிறம் மறைத்த
காரிருள் வானில் படியும் வரை,

வெப்பத்தின் தேடல் -
உமிழ் தொலைத்த தாகம்
நன்னீர் சேரும் வரை,

அமைதியின் தேடல் -
கலவரத்தின் நிழல் பதியாத பாதங்கள்
எல்லை காணும் வரை,

உயிரின் தேடல் -
உடல் கரையும் மண்புழுதி
அனுமதி தரும் வரை.

தேடல் கணித்த புவியின் நீளம்
காட்சிக்கு தென்படாதவை......

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடமை

இயற்கை

நானும் அவளும்