இரண்டெழுத்து
உள்ளடக்கம் வாழ்க்கை பயணத்தில் திசை மாறும் தருணங்கள், உறவுகளில் ஏற்படும் இடர்பாடுகள், நம்பிக்கை இருந்தும் ஒளி மறையும் நிலைகள்- இவை அனைத்துக்கும் காரணமாக வெளிப்படையாக விதி தோன்றினாலும், உண்மையில் அது மனித நன்னடத்தை தவறும் இடங்களில் உருவாகும் விளைவு என்பதை இக்கவிதை வெளிப்படுத்துகிறது. இயற்கையும் வாழ்க்கையும் ஒரே சிந்தனைப் பாதையில் இணையும் தத்துவப் பின்னணியே இதன் சூழல். கவிதை பொருள் உணரா பயணத்தில்- இருள் எதிர்த்த விடிவெள்ளி திசை உணர்த்த நினைத்தாலும், கரை படிந்த வெண்முகில் மதி மறுத்தும், இடை வலுத்தும், இமை தூரிகை இதமாய் சம்மதித்தாலும், தடையும் தரமற்றதாகும் நன்னடத்தை தவறிய விதியால்.. தென்றல் அசையும் மாடத்தில், வெண்மலர்கள் தரை தவழ்ந்து நறுமணம் சூழும் தருணத்தில், வேரறுத்த சூறைக்காற்று இடர் ஏற்று, நிலை குலைத்தது நன்னடத்தை தவறாய விதியால்.. உறவு பாலம் தழைத்து வாழையின் வரிசை தொடர்ந்தாலும், வசை பாடும் கரையான் கூட்டம் அரிக்க நினைத்தது: பாதை தகர்ந்தது நன்னடத்தை தவறிய விதியால்.. மேற்கில் திசை மறைத்தாலும், கிழக்கில் உதயமாகும், எனும் தருணத்தில் காற்றழுத்தம் மேலோங்கி, ஒளியும் முடங்கி போனது, நன்னடத்த...