இடுகைகள்

# வலிமையின்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கனம்

படம்
ஈரம் மறுத்த வளம் சுவாசத்தின் சுமை, கனி விரும்பா கொடியினம் நாவிற்கு சுமை, இதழ் சுருங்கிய மலர்கள் அழகிற்கு சுமை, இருள் அணைத்த மின்விளக்கு விழிப்பதற்கு சுமை, கிளைகளின் குடியிருப்பில் புயலின் வரவேற்பு சுமை, நீர்  பருகிய நிலம் வறட்சியின் சுமை, முகில் ஊடுருவும் பயணத்தில் நிலம் தாங்கும் உயிர்கள் சுமை, பண்பட்ட இதயம் ஊடலில் சுமை, மௌனம் கலைத்த விழிநீர் இரகசியத்தின் சுமை, இரவில் விழித்திருக்கும் நினைவுகள் நிம்மதியின் சுமை, கற்பனையின் அலைவரிசையில் மெய் வருடும் நுனிவிரல் சுமை, நிசப்தம் உறங்கும் நிலத்தில் முகவரி தேடும் காற்றொரு சுமை, கைவலையின் கலகலப்பில் மழலையின் நித்திரை சுமை, முகம் மலர திரையிட்ட காலங்களால் பிறவியும் சுமை. ஆற்றாமையின் துணையில் நிழல் சாய்வதும் சுமை- அழைத்துச் செல்ல  வலிமையில்லை பின்தள்ள புரிதலுமில்லை..