இடுகைகள்

களம்

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை மண், இனம், வேர், கொடி, தலைமை ஆகிய உருவகங்களின் வழியாக ஒரு சமூகத்தின் அரசியல்- பண்பாடு பயணத்தை பேசுகிறது. மண்ணின் தாகம் என்பது அடக்கப்பட்ட மக்களின் உயிர்த்தாகமாகவும், ஊற்றாய் உயிர் வளர்ப்பது கூட்டு முயற்சியையும் குறிக்கிறது. வேர் - விதை- துளிர் என்ற இயற்கை சுழற்சி இனத்தின் தொடர்ச்சியையும், காலத்தை கணிக்கும் அரசியல் விழிப்புணர்வையும் காட்டுகிறது. தனிநபர் அல்ல, கூட்டு உணர்வே தலைமை எனும் கருத்து, " தலைவனின் இலக்கணம்" பகுதியில் வலுவாக நிறுவப்படுகிறது. கவிதை மண்ணின் தாகம் ஊற்றாய் உயிர் வளர்க்க, பாதம் பதிந்த நிலமும் ஒரு குரலில் சுவாசிக்க, என் இனம் எனும் வேர் கரங்களை கட்டி மையத்தில் சின்னம் ஏற்றி, கொடியாய் சிகரம் தொட்டது. கோபுரமாய் உயர்ந்த மணல் திட்டுக்கள், காற்றின் சுழற்சியில் திசை நான்கில் பயணித்து தாய் கொடியின் நகலாய், கலம் காண பயணிக்கின்றது. இனத்தின் உயிர் புதைந்த வேர் காலத்தின் கணிதனாய், உள்ளும் புறமும் நன்கறியும்- காற்றில் அலைப்பாயும் சரகுகளை உரமாய் தன்னுள் வளர்த்து, காட்டாற்றின் நீரை நெறிப்படுத்தி, தன்னுள் ஈர்த்துக்கொண்டு பருவங்கள் எதிர்நோக்கி, துளிர் ...

கண்ணாடி

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன் தன் உணர்வுகளை  யாரிடமும் வெளிப்படுத்த முடியாத தருணங்களில் தீர்ப்பின்றி, கேள்வியின்றி, மௌனமாக உடன் நிற்கும் கண்ணாடியை  ஒரு நெருங்கிய தோழியாகப் பார்க்கிறது. கண்ணீர், இன்பம், அழகு, கண்ணியம், ரகசியம்- அனைத்தையும் அனுமதி கேட்டே ஏற்றுக்   கொள்ளும் அந்த மௌன சாட்சி தனிமையின் பாதுகாப்பையும், சுயமரியாதையின் எல்லையையும் மென்மையாக வெளிப்படுத்துகிறது. கவிதை எதிர்மறை எண்ணங்கள் மெல்லிய மனதை சலசலக்க, இமைகளை நீராட்டி வெளிவந்த நினைவு கரைசலை, கையால் துடைத்த என்னை யாரும் கவனிக்க மறுத்ததால்  அமைதியுற்றேன் - ஆனால் அவள் கவனித்தாள். உதட்டின் காவலை மீறி  வெளிவந்த முத்துக்கள்- சிதறாமல்  உள்வாங்கிய மெல்லிய உணர்வை யாரிடமும் பகிராமல் இன்புற்றேன் - அதை அவள் உணர்ந்தாள் முல்லை மொட்டுக்கள் விரிந்தும் விரியாமலும் என் கூந்தலில் வீற்றிருந்த அழகை சரிபார்க்க அவள் இசைந்தாள். ஆடைகள் தன்நெறி மாறாமல் கண்ணியத்துடன் ஒத்துழைக்க அவள் காவலானாள். இரவு பகல் பாராமல் எனக்காக விழித்திருந்து நான் கேட்டதை, நான் பார்த்ததை, நான் உணர்ந்ததை அப்பழுக்கில்லாமல் எனக்குத்...

உடமை

படம்
உள்ளடக்கம்   கவிதை "நான், " என்ற சொல்லின் ஆழமான தேடல். இது தனிப்பட்ட அகந்தை அல்ல: இயற்கை, உழைப்பு, பக்தி, தாய்மை, வயது, விதி, விடுதலை அனைத்தையும் தன்னுள் ஏற்றுக்கொள்ளும் முழுமையான மனித அடையாளம். கவிதை மழை பொய்த்த பூமியின் தாகம் எனது, நிலம் உழுத வேர்வையின் பசுமை எனது, வண்ணம் சூடிய இயற்கையின் கலை எனது, தென்றல் உரசிய கரங்களின் இசை எனது, இறை கலந்த தியானத்தின் பக்தி எனது, பயணத்தின் முடிவுறை எழுதும் முதுமை எனது, புதைமண் வடிவம் காணும் ஆற்றல் எனது, மடி தவழும் மழலையின் தாய்மை எனது, மனம் இசைந்து இமைகள் சந்திக்கும் தாலாட்டு எனது, விதி சுமந்து வையகம் வாழும் பிறப்பு எனது, துயில் கலைத்த சிறையின் சுதந்திரம் எனது, " நாம்" கலைந்து " நான்" சேரும் முயற்சி "எனதே எனது". நாட்குறிப்பு உலகின் வானமும், நிலமும், சுற்றமும், சூழலும் என்னை சார்ந்து அமைய வேண்டும் என்பது உலகத்தோரின் உரிமை கலந்த ஆசையும், எதிர்பார்ப்பும். அனைத்தும் கண்ணசைவில்  பெறும் தாகம், ஊக்கமின்மையால் தரிசாய் கிடக்கும் எண்ணங்கள் நூறாயிரம். கால் பதிந்த நிலமும், சுவாசம் கலந்த காற்றும் தனக்கென உரித்...

மௌனம்

படம்
இந்தக் கவிதை மௌனத்தின் ஆழ்ந்த இருப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பார்வைக்குள் சிக்கிய நினைவுகள், வெளிப்பட முடியாத உணர்வுகள், சொற்களாக மாற மறுக்கும் வலி- இவை் மௌனத்தின் வழியாக வெளியில் செல்லும் நிலையை கவிதை காட்டுகிறது. கவிதை பார்வைக்குள் அகப்பட்ட  நினைவுகள் மனம் ஈர்க்காமல், தன் நிலை பகிராமல் வெளியேறும் வாசல்- மௌனம். உணர்வுகள் சிதைத்த வரிகள் உதடுகளின் உரசல்கள் கடந்து,சலனமில்லாமல் வெளியேறும் மொழி- மௌனம். அலையாய் நடை பழகும் சப்தம் தடை தகர்த்தால் நிலையான நிசப்தம் உள்வாங்கிவிடும். புயல் வசிக்கும் கூட்டுக்குள்,இடராமல் இமை  தோகை விரித்து காட்சிக்கு முரண்படாமல் வசிப்பது மௌனம். வெற்றியின் சாரல் புயல் மழையாய் கடந்தாலும் தனிமையின் தேடலில் புலன்கள் ஒன்றிணைய நிழலாய் தொடர்ந்து என்னுள் புதைந்திருப்பது- மௌனம்.

நிழலும் நிஜம் தேடும்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன்  அனுபவிக்கும் சோர்வு, மன மறுபிறவி, அன்பின் அரவனைப்பு மற்றும் இயற்கையோடு ஒன்றும் வாழ்க்கை சுழற்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டது. கவிதை தரை தொட்ட கணம் பொழுதும் சோர்ந்து போய், ஓய்வின் நுழைவாயில் சேர்ந்தும்,சேராமலும் என் கண்கள் ஒளி பெற காத்திருந்தது. கருவறை துறந்த மறுகணம் மனம் உதித்த தளிர் மேனியில் காலமும், பட்டும் படாமல் என்னை வரவேற்கிறது என சலனம் தழுவியது. செவி திகட்டா சொல்லழகும், தோய்வறியா அறவனைப்பும் என் நிழலின் மறுஉருவமாய் விரலின் வேலிக்குள் புறம் செழித்தது அகமும் குளிர்ந்தது. மதி வளர்த்த கல்வியும் உறம் சேர்த்த உறவும் வண்ணம் போர்த்திய கனவும் அழகாய் பாதை தொடுத்தது. கரை சூழ்ந்த பூங்காற்று நீரோடையின் வழி கொண்டு மறுகரை சேர்ந்தது. வெண் மேகம் கரை படிந்து ஒளியும் கண் மறைத்தது.  மழைத் துளியில் மாசகன்று வளமாய் வாழ்வதும் காற்றில் ஈரம் கரைந்து நிலம் தாகம் கொள்வதும் இயற்கையின் அரவணைப்பில்.. நாட்குறிப்பு ஒரு தளிரின் குரல் இருளில் காலூன்றி மெய் வளர்த்த நான்,கண்கள் ஒளிர என்னை, நானே  காண உடல் இருகி ஆயுத்தமானேன். உதிரம் சுமந்து வேலி கடந்த என் கண்கள...

இயற்கை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை விடியற்காலையில் என் முற்றத்தில் நிகழும் சிறிய- சிறிய இயற்கை செயல்களை கவனித்ததில் இருந்து பிறந்தது. இயற்கை பேசுவதில்லை: ஆனால் நம்மை சிந்திக்க வைக்கின்றன. கவிதை நீலவானம் ஒற்றை  கண் விழித்து பூமிக்கு ஒளி தரும் தருணம் இலை என்னும் போர்வை நகர்த்தி விடியலை வரவேற்கும் பறவைக் கூட்டங்கள். அழையாத விருந்தாளியாய் மலரின் இருப்பிடம் சென்று தேனை சுவைக்கும் தேனீக்கள். ஆங்காங்கே  சிதறிக்ககடக்கும்  சிறகும், இலை சரகுகளும் தனக்கென காத்திருந்ததைப் போல  தன் கூட்டை அலங்கரிக்க நயமாக சேகரிக்கும் சிட்டுக் குருவிகள். தானியங்களை பின்னங்காளில் இளைப்பாறி பற்களின் இன்னிசையோடு உண்டு மகிழும் அணில்கள். செயற்கை  ஆற்றலோடு போட்டியிட்டு மண் சிதறாமல் ஊடுருவி சத்துக்களை கொடிகளுக்கு பரிசளிக்கும் மண் புழுக்கள், தாவர நண்பன். தனக்கு அடைக்கலம் தந்த தோழனின் ஆயுள் வேண்டி இலகால் பொந்தமைத்து காவல் நிற்கும் மரங்கொத்தி பறவைகள். என் இமைகள் மலர வரம் கொடுக்க என் முன் தோன்றும் கருங்குருவி என் வாழ்க்கை பாதையின்  திடமான நம்பிக்கை. என் முற்றத்தில் என்முன் நடந்தேரிய இயற்கை நிகழ்வு...

நீர் குமிழி

படம்
நீர் குமிழி உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித மனத்தின் நிலையற்ற தன்மையையும், உணர்வுகள் தோன்றி மறையும் விதத்தையும் நீர் குமிழி போலவே கனமான இதயத்திலிருந்து பிறக்கும் எண்ணங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்து, புன்முருவலாய் மிதந்து, இறுதியில் எதார்த்தம் எனும் காற்றில் கரைந்து போகின்றன. மனத்தின் ஆசை, அதன் ஆயுள், மற்றும் வாழ்க்கையின் கடுமையான உண்மை இவைகளின் மோதலை நுணுக்கமாக பதிவு செய்யும் கவிதை இது. கவிதை திடமான பூமி பந்து வெப்பம் தாளாமல் தன்னை குளிர்விக்க வெளியேறும் வெள்ளருவி தன் மகிழ்ச்சியை நீர் குமிழியாய் உருமாற்றி காற்றில் மறையும். கனமான இதயத்தில் தோன்றி மறையும், எண்ண ஓட்டங்கள் பாரம் தாங்காமல் மனம் என்னும் கூட்டில் இளைப்பாறி, அவ்வப்போது இதமான புன்முருவலோடு காற்றில் பறக்கும். மனம் என்னும் நீர்குமிழி,ஆயுள் வேண்டி மெம்மேல் பறந்தாலும், எதார்த்தம் என்னும் காற்றின் வேகத்தால் நொருங்தி, இடமறியாமல் கரைந்து போகும். எத்தனை நீர்குமுழிகள் காற்றில் கரைந்தனவோ.... காற்றணுக்களின் எண்ணிக்கையில் மறைந்திருக்கின்றன.