பெண்ணெனும் நான்........
இந்தக் கவிதை கருவறையில் உருவாகும் உயிரின் பயணத்தை அதன் உணர்வுகளுடன் விவரிக்கிறது. வடிவமில்லா சிறுதுகளாகத் தொடங்கி இயற்கையின் அருளால் வடிவம் பெற்று தாயின் வெதுவெதுப்பான பாதுகாப்பிலும், தாலாட்டிலும் வளர்ந்து, இறுதியில் பெண்ணாக உருவெடுக்கும் ஆன்மிக- உடல் பயணமே இதன் மையம்.
தாய்- குழந்தை உறவு, உயிரின் தோற்றம், பெண்ணின் பிறப்பு மற்றும் அவளுக்குள் புதைந்துள்ள உயிர்சக்தி ஆகியவை கவிதையின் ஆதார உணர்வுகள்.
கவிதை
கருவறை எனும் கோப்பைக்குள்
உயிரெனும் ஆற்றலோடு,
வடிவமிலா சிறுதுகலாய்
அங்கும், இங்கும் அலைந்து
ஓரிடத்தில் இளைப்பாறினேன்.
இயற்கை வரமளித்த
இரு இனங்களின் ஓரினமாய்,
காற்றும் செந்நீரும்
ஒரு சேர கலந்து,
கருவண்ணம் ஆட்கொண்ட
அறையில் சலனமில்லாமல்
வீற்றிருந்தேன்.
தனிமையில் நான் உறங்க
இருக்கரங்கள் பற்றிக்கொண்ட
வெதுவெதுப்பில்,
ஓரு குரலின் தாலாட்டில்
ஒவ்வொரு திங்களாய்
பொலிவு பெற்றேன்.
என் அறையின்
நீலம் அகலம் குறைய,
உயிர் நீர் சுவாசம் தர,
என் வாசல் எதுவென்று
கொடியசைத்து வினவினேன்.
என் பாதம் தரைதொட,
என் அறையின் நினைவுகள்
காலத்தோடு பயணிக்க,
என் அடி உடல் கனக்க
என் தாய் எனக்கு
பரிசளித்தாள்-
உயிர் கோப்பை என்னுள்
புதைத்திருந்தாள்,
பெண்ணென உருவெடுத்தேன்,
பெண்ணெனும் நான்..........
Delighful poem
பதிலளிநீக்குFantastic
பதிலளிநீக்கு