இடுகைகள்

கானல் நீர்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இல்லாமையின் மூலம் சொல்லப்படும் இருப்பை பேசுகிறது. இயற்கை, கலை, மரபு, உணர்வு, பெண்ணியம் - எல்லாவற்றிலும் இருக்க வேண்டிய அடிப்படை பண்புகள் மறுக்கப்பட்டுள்ள ஒரு உலகம் வரிசையாக உருவாக்கப்பட்டுள்ளது. கவிதை முகில்  இடறிய  வானம், பனி படறா புல்வெளி, அலை  உறங்கும் கடல், இலை வருடா பூங்காற்று, பெண்மை மறைத்த நளினம், வாழை மறுத்த விருந்தோம்பல், திசைகள் கலைந்த பூலோகம். கார் முகில் பழித்த மயில்தோகை, தூரிகை துறந்த அழகோவியம், தளபதி முன்மொழியா போர்முழக்கம், ஜதி இணையா நாட்டியம், மழை நனையாத மலையருவி, மழலை உணரா தாலாட்டு, தேரடி காணா தேரோட்டம். இரவு விழித்திராத விடி வெள்ளி, மலர்கள் நுகராத தேனீக்கள், வெயில் வடித்த வானவில், வரலாறு பதியாத செப்பேடு, சுமை விழுங்கிய பெண்ணாற்றல் கண்டும், காணாமலும் அசைப்போடும் சிலை வடித்த முகபாவம் கானல் நீரில் கரையும் உயர்வு பெற்றது.

நானும் அவளும்

படம்
உள்ளடக்கம் இயற்கையின் மடியில் மலர் ஒரு உயிராகப் பிறந்து, மொட்டாகி, மலர்ந்து வண்ணத்துப் பூச்சிகளுடன் உறவாடி தன் வாழ்வை நிறைவு செய்து உதிரும் தருணம் வரை நிகழும் வாழ்க்கைச் சுழற்சியை இந்தக் கவிதை சித்தரிக்கிறது. உதிர்வு இங்கு இழப்பாக அல்ல: தொடர்ச்சிக்கான அமைதியான பிரியாவிடையாக வெளிப்படுகிறது கவிதை இலை  தாங்கிய  மொட்டுக்கள் இரவின்  காவலில் இதழ்  விரித்து, பனித்துளியில்  நீராடி, வெண்கதிரில்  இதழ்  உலர்த்தி, வண்டிசையின்  வரவேற்பில் தேவதைகள்  கைப்பட ஒற்றை  நாற்காலியில் வீற்றிருக்கின்றன. முட்கள்  பதித்த திரைமறைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட  வண்ணங்களை, ஓவியமாய்  தீட்டப்பட்ட  இறகுகள், காற்றினும்  மெல்லிய  இடை  விரிந்து, இயற்கை  பகிர்ந்த  பருவ கால இரகசியத்தை கொண்டு  சேர்க்கும் வண்ணத்து  பூச்சி மலரின்  உற்ற தோழன். எண்களின்  முதன்மையாய் வரிசைகள்  பின்தொடரும், ஒற்றைப் பொழுதின் விதி சுமந்து இயற்கையுடன் ஒன்றென கலந்த உயிரின்  இழப்பை, மலர் பொழிந்து, பிரியாவிடை  அளிக்கும...

இரண்டெழுத்து

படம்
உள்ளடக்கம் வாழ்க்கை பயணத்தில் திசை மாறும் தருணங்கள், உறவுகளில் ஏற்படும் இடர்பாடுகள், நம்பிக்கை இருந்தும் ஒளி மறையும் நிலைகள்- இவை அனைத்துக்கும் காரணமாக வெளிப்படையாக விதி தோன்றினாலும், உண்மையில் அது மனித நன்னடத்தை தவறும் இடங்களில் உருவாகும் விளைவு என்பதை இக்கவிதை வெளிப்படுத்துகிறது. இயற்கையும் வாழ்க்கையும் ஒரே சிந்தனைப் பாதையில் இணையும் தத்துவப் பின்னணியே இதன் சூழல். கவிதை பொருள் உணரா பயணத்தில்- இருள் எதிர்த்த விடிவெள்ளி திசை உணர்த்த நினைத்தாலும், கரை படிந்த வெண்முகில் மதி மறுத்தும், இடை வலுத்தும், இமை தூரிகை இதமாய் சம்மதித்தாலும், தடையும் தரமற்றதாகும் நன்னடத்தை தவறிய விதியால்.. தென்றல் அசையும் மாடத்தில், வெண்மலர்கள் தரை தவழ்ந்து நறுமணம் சூழும் தருணத்தில், வேரறுத்த சூறைக்காற்று இடர் ஏற்று, நிலை குலைத்தது நன்னடத்தை தவறாய விதியால்.. உறவு பாலம் தழைத்து வாழையின் வரிசை தொடர்ந்தாலும், வசை பாடும் கரையான் கூட்டம் அரிக்க நினைத்தது: பாதை தகர்ந்தது நன்னடத்தை தவறிய விதியால்.. மேற்கில் திசை மறைத்தாலும், கிழக்கில் உதயமாகும்,  எனும் தருணத்தில் காற்றழுத்தம் மேலோங்கி, ஒளியும் முடங்கி போனது, நன்னடத்த...

எதிர்முனை

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை உலகத்தில் காணப்படும் சக்தி, கட்டுப்பாடு, அதிகாரம் ஆகியவை எதனால் நார்ணயக்கப்படுகின்றன என்பதைக் குறித்து சிந்திக்கிறது. இயற்கை நிகழ்வுகள், காலம், மனித உழைப்பு, சமூக அமைப்புகள், மனநிலை மற்றும் அகந்தை ஆகியவை தத்தம் காரணிகளின் வசப்படுத்தலுக்குள் இயங்குகின்றன என்பதை வரிசையாகக் காட்டுகிறது. ஆனால் இறுதியில், உண்மை, நேர்மை மற்றும் ஆழ்ந்த புரிதல் ஆகியவை எந்தக் கட்டுப்பாட்டுக்கும் முழுமையாக உட்படாதவை என்பதை உணர்த்துகிறது. இது மனிதன் எல்லாவற்றையும் அளக்கவும், ஆளவும் முடியும் என்ற அகந்தைக்கு எதிரான ஒரு தத்துவக்  கேள்வியாக நிற்கிறது. கவிதை இருளின் கர்வம் மின்மினி  வசப்படும் ,வெண்மேக நிறம்காரிருள்  வசப்படும், நீரின்  வேகம்  கூழாங்கல்  வசப்படும், மலை முகடின் உயரம் உளியின்  வசப்படும், வெண்பஞ்சு  காலம்  திரியின்  வசப்படும், சுட்டெரிக்கும்  அனல்காற்று  பருவமழை  வசப்படும், குளிர்பனி காலம்  கதிரவன்  வசப்படும், கனமான இதயம்  இறையருள்  வசப்படும், செல்வச்செருக்கு வள்ளல்  வசப்படும்,...

தேடல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை " தேடல்" என்பதை இயற்கையின் அடிப்படைத் தன்மையாகவும், உயிரின் அடையாளமாகவும் முன்வைக்கிறது. கதிரவன் முதல் உயிர் வரை அனைத்தும் தமக்கான நிறைவை, எல்லையை அல்லது விடுதலையை நோக்கி இடையறாது பயணிக்கின்றன. அந்த தேடல் வெளிப்படையான இலக்கை அடைவதற்கல்ல: கரைதல், இளைப்பாறு, அனுமதி போன்ற உள்ளார்ந்த நிலைகளை அடைவதற்கானது. கவிதையின் முடிவில் கூறப்படும்" காட்சிக்கு தென்படாதவை" என்பது தேடலின் உண்மையான நீளம் கண்களால் அளக்க முடியாதது: அது உணர்விலும் அனுபவத்திலும் மட்டுமே அறியப்படுவதாகும். இதன் முலம் மனித வாழ்க்கையின் அஸ்தித்வப் பயணமும் இயற்கையின் ஓட்டத்தோடு ஒப்பிடப்படுகிறது. கவிதை கதிரவனின்  தேடல்- நீலம் படிந்த கூரை தாழ்ந்து  மண்ணில் புதையும் வரை, காற்றின் தேடல்- சுவாசம் மறந்த நாடி இளைப்பாறும் வரை, கடலின் தேடல் - ஆழம் தடைப்படும் மண்குவியல் தோன்றும் வரை, பனியின் தேடல் - வெப்பம் சிதைக்கும் வெண்பாறை ஓடை காணும் வரை, நெருப்பின் தேடல் - செந்நிறம் மறைத்த காரிருள் வானில் படியும் வரை, வெப்பத்தின் தேடல் - உமிழ் தொலைத்த தாகம் நன்னீர் சேரும் வரை, அமைதியின் தேடல் - கலவரத்தின் நிழல...

முரண்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன் தனது உடல், உணர்வு, காலம் மற்றும் உறவுகளுடன் எதிர்கொள்ளும் மாற்றங்களை அச்சமின்றி ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வெளிப்படுத்துகிறது. உயர்வு- தாழ்வு, இளமை- முதுமை, தனிமை- துணை போன்ற இருமைகளின் நடுவில் நின்றும், அகந்தை அல்லது தளர்வு இன்றி தொடரும் சுயநிலையே இதன் மைய சூழலாக அமைகிறது. ஒவ்வொரு செயல்பாடும் பயத்தின் மறுப்பாகவும், விழிப்புணர்வின் உறுதியாகவும் பதிவு செய்யப்படுகிறது. கவிதை தலைக்கனம்  மதிகெடுக்கும்  என   உச்சி நிமிர ஆராய்வதில்லை. இமைகள்  விடைப்பெறும் என     விழிகள் விழித்திருக்க  தயங்குவதில்லை. சுவாசத்தின்  பரிமாற்றம்  அழற்சி  தருமென , கண்களின்  நேர்கோடு  விலகுவதில்லை, நாவின்  உரசல்கள்  பிளவுபடும் என  உதடுகள்  பிரிந்திருக்க  அஞ்சுவதில்லை, ஒலியின்  நீளம் மிகினும், குறையினும்  துருவங்கள்  ஒன்றினைவதில்லை, கரங்களின் நேர்த்தியை முதுமை பின்தள்ளும்  என, விரல்கள்   நடுங்குவதில்லை, பாதங்களின்  அழுத்தத்தை கைத்துணை பகிர்ந்துகொள்ளு...

நிறம்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை " நிறம்" என்பதை வெறும் கண்ணுக்குப் புலப்படும் தோற்றமாக அல்லாமல், இயற்கை, உயிர், காலம்,  இளமை, முதுமை ஆகிய அனைத்தையும் இணைக்கும் ஒரு மௌன சக்தியாகப் பார்க்கிறது. மலர்கள், பசுமை, இரத்த ஒட்டம், கூந்தல், சூரியன் போன்ற  உவமைகள் மூலம் நிறம் வாழ்க்கையின் தொடர்ச்சி, பாதுகாப்பு, உயிர்ப்பாடு மற்றும் அமைதியான பயணம் என்பவற்றிறன்  ஆடையாளமாக வேளிப்படுகிறது. கவிதை நிறம் என்னும் மாயை, காற்றில் கரைந்திருக்க, இரகசியம் அறிந்த மலர்கள்  காற்றோடு உறவாடி, நிறமெனும் இயற்கை ஆபரணம் அணிந்து, வழிவழியாய் அழகின் மகுடம் சாயாமல் வீற்றிருக்கின்றன. பூமியின் கட்டுடல் தளறாமல் இருகப்பற்றி, சேவகனாய் கற்காலம் தொட்டு இன்று வரை கவசமாய், பசுமையாய் விழித்திருக்கும் வண்ணம் நிறத்தின்  தளபதி. உயிரின் தாகம்  தீர்க்க வற்றாது பாய்ந்தோடும் செந்நீர், செவ்வானம் நிறம் தொட்டு உடலெனும் கூட்டுக்குள் வளைந்து நெளிந்து வற்றாது சப்தமின்றி பயனிக்கும். இளமை என்னும கருங்கூந்தல் வெந்நிற  முதுமைக்குள் ஒளிந்திருப்பதைப் போல, நிறத்தின் உவமைகள் கைக்குள் அடங்காதவை- கதிரவனின் ஒற்றைக் குட...

அகராதி

படம்
காற்றின் மொழி தென்றல், பூவின் மொழி வாசம், மழையின் மொழி சாரல், பறவையின் மொழி சிறகுகள், மகிழ்ச்சியின் மொழி ஆரவாரம், வானின் மொழி நீலம், நிலவின் மொழி ஒளிவட்டம், ஏழையின் மொழி வறுமை, மழலையின் மொழி அழுகை, பெண்ணின் மொழி நாணம், போரின் மொழி வெற்றி, கடலின் மொழி அலைகள், பிறப்பின் மொழி எதிர்ப்பார்ப்பு, அன்பின் மொழி இரகசியம், உறவின் மொழி பிணைப்பு, வாழ்க்கையின் மொழி சரணடைதல், மரணத்தின் மொழி தன்னிறைவு. வாழ்வின் மொழி சுதந்திரம், சிகரத்தின் மொழி  உழைப்பு, தேசத்தின் மொழி ஒற்றுமை,  கல்வியின் மொழி சமநிலை, நாவின் மொழி அறுஞ்சுவை, பசியின் மொழி வறட்சி, மனதின் மொழி சலனம், கேள்வியின் மொழி சிந்தனை, புதுமையின் மொழி ஆராய்ச்சி, பக்தியின் மொழி மௌனம், பிளவின் மொழி உரிமை, பண்பாட்டின் மொழி  பழமை, வாசகர்களின் மொழி புதுமை.. புதியவை வாசகர்களுக்காக.... நாட்குறிப்பு மொழியது, வார்த்தையின் கோர்வைகள் நாவின் வாசல் கடந்து செவி துளைக்கும் ஓசை என ஆராய்வதற்கு காலங்கள் சான்றிருந்தன.  அசைவுகள், வண்ணங்கள், ஓவியங்கள், உணர்வுகள், அனைத்தும் மொழியின் அம்சங்கள். உயிரற்ற நகர்வுகளும்  மொழி கொண்டிருக்கும், வ...

அழகியல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை, அழகு என்பதைக் காட்சியழகாக மட்டும் அல்லாமல், இயற்கை, மனித உணர்வு, பண்பு, மொழி, சமூகநிஜம் ஆகிய அனைத்திலும் பரவியிருக்கும் ஒரு ஆழ்ந்த அனுபவமாக வெளிப்படுத்துகிறது. வானிலிருந்து விதை வரை, மழையிலிருந்து முதுமை வரை, வறுமையிலிருந்து கருணை வரை- எதிர்மறை, நேர்மறை இரண்டிலும் ஒளிந்திருக்கும் அழகை கவிதை நுணுக்கமாகச் சுட்டிக்காட்டுகிறது. இறுதியில், தமிழ் மொழியே அந்த அழகின் உச்சமாக உயர்கிறது. நாட்குறிப்பு அழகு உருவம் சார்ந்ததன்றி, உணர்வு சார்ந்தது. உணர்வுகள் வெளிப்படுத்தும் பிம்பங்கள் அனைத்தும் அழகானவை. விழி காணும் நிஜங்கள் மனம் சென்றடைவதில்லை. மனம் உணர்ந்த நிஜங்கள் விழி சேரும்போது அனைத்தும் அழகானவை. வான் விரிந்த உலகில் வேரூன்றும் பசுமை குவியல்கள், அதனுள் அமர்ந்திருக்கும் வண்ண மலர்கள், கடல் பருகிய நீலம், என எண்ணற்றவை பூமியின் அழகோவியங்கள்.  " அழகு"  தமிழ் அகராதியின் முதல் உயிரும், முதல் மெய்யும் காவல் நின்று நாவில் " ழகரம்" சுழல்வதும் அழகு. கண்களின் திரை அகன்று உற்று நோக்கிய நிகழ்வுகள் அழகியலாய் உங்கள் பார்வைக்கு....... கவிதை வெண்கதிர் மறைத்த வானின் பிறை அ...

முடிவுரை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்வின் ஆழமான வெற்றிடத்தையும், நிறைவேறாத ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.காலம் நகர்ந்தும் வாழ்க்கையின் அர்த்தம் தெளிவாக தெரியாமல் போகும்  ஓரு நிலையை இது காட்டுகிறது. வானம் விரிந்திருந்தாலும் அதன் எல்லை கண்களுக்கு எட்டாதது போல, மனிதன் தேடும் நிறைவு எளிதில் கிடைக்காததாகவே உள்ளது. மேகம் கரைந்து மழையாக  விழுந்தாலும் மண்ணின்  தாகம்  தீராதது போல வாழ்க்கையில் நிகழ்வுகள் பல வந்தாலும் உள்ளத்தின் பசி அடங்காமல் தொடர்கிறது. வெளிப்படையாக இயற்கை இயக்கம் நடைப்பெறுகிறது போல தோன்றினாலும் உள்ளார்ந்த வெறுமை நீங்காத ஒரு அமைதியான வேதனை இந்தக் கவிதையின் மைய உணர்வாக உள்ளது. இது தனிமை, தேடல் மற்றும் நிறைவை நாடும் மனித மனத்தின் நிலையை நுட்பமாக பிரதிபலிக்கிறது. கவிதை முடிவுற்ற காலங்கள் விழித்திருந்தும் வானின் நீளம் தென்படவில்லை. மேகம் கரைந்த நீர்துளிகள் சிந்தியும், மண்ணின் தாகம் தீர்க்கப்படவில்லை. நிலம் இருகிய பாறைகள் குடைந்தும்,பூமியின் புதிர் விடுபடவில்லை. பிறவிகள் ஏழு கடந்தும்,சூரியனின் கதிர்கள் குன்றியதில்லை. நொடியின்  இடையில் இமை மூடும் விழிகள் கரைந்தால...

பெண்ணெனும் நான்........

படம்
நாட்குறிப்பு பெண் என்னும் அகராதி சாபத்திற்குள் அகப்பட்ட வரம். பிறந்ந பாதையில் வரங்கள் பின்தொடர்வதுமில்லை, சாபங்கள் வழி மறுப்பதுமில்லை. நிழலை உற்று நோக்கும் கனம், தனிமை முழுவதுமாய் ஆட்கொண்டிருக்கும். தனிமையில் இரவுக்கும், வெளிச்சத்திற்கும் வேறுபாடில்லை. உணர்வுகளின் துணைக்கொண்ட ஆற்றலின் வடிவம் சிகரம் கடந்து செல்லும். வழித்துணையின் பல்லக்கு அயராமல் சுமந்தாலும் இளைப்பாற ஒரு அடியேனும் தனக்கென பகிர்ந்திருக்க வேண்டும். உபயம் சேர்க்கும் கற்சிலையாய் ஊர்வதை கடந்து, உளி செதுக்கிய பெண் உருவமாய் நகர்வது சிறப்பு. எண்ணங்களின் அலைவரிசை மனதின் இசையாய் வெளிப்பட, பாதங்கள் வண்ணத்தில் நனைந்திருக்க வேண்டும். இருளில் நிறம் மறைந்தாலும் செவிகள் இன்புற்று கடந்து செல்லும். நான் படைத்த " பெண்ணெனும் நான்" உணரவிருக்கும் காலத்தின்  பரிணாமங்கள். கவிதை கருவறை கோப்பைக்குள் உயிரெனும் ஆற்றலோடு வடிவமில்லா சிறுதுகளாய் அங்கும், இங்கும் அலைந்து ஓரிடத்தில் இளைப்பாறினேன். இயற்கை வரமளித்த இரு இனங்களின் ஒரு இனமாய், காற்றும், செந்நீரும் ஒரு சேர கலந்து கருவண்ணம் ஆட் கொண்ட  அறையில்,சலனமில்லாமல் வீற்றிர...

எல்லை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்க்கை இயற்கையின் சட்டங்களைப் போல எளிமையுடனும், உண்மையுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது போல தோன்றுகிறது. இயற்கை எந்தச் செயலும் எதிர்பார்ப்பின்றி தன் இயல்பின்படி நடைபெறுகிறது. மலர் நறுமணம் தருவதற்கு யாருடைய முகவரியும் தேடவில்லை.  விதை முளைக்க முன் ஆய்வு செய்வதில்லை. கதிரவன் உதித்து மறைவது அவனது கடமை. அதேபோல் மனிதனும் தன் பண்பை காத்து வாழ வேண்டும். கர்வம், சீற்றம், கண்ணியமின்மை போன்றவை இயற்கையின் சீரிய ஒழுங்கில் இடமில்லை என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது. மனித சமுதாயம் இயற்கையைப் போல் சீராக இருந்தால் அதுவே இறை உணர்வை அடையும் வழி என்னும் தத்துவப் பின்னணியில் இந்தக் கவிதை அமைந்துள்ளது. கவிதை மலரில் கரைந்த நறுமணம், காற்றின் முகவரி தேடுவதில்லை. சுவை கலந்ந கனியின் மொழி, புலமைக்கு காத்திருப்பதில்லை. விதை உண்ட செம்மண், பசுமை உமிழ ஆராய்வதில்லை. தரை பயணம் முடியும்வரை, மழை நீர் துணைசேர்வதில்லை. மீன்களின் ஆயுள் முடியும்வரை, நாரைகளின் தவம் கலைவதில்லை. இலைகள் ஆடும் நாட்டியத்தை, இடியின் தாளம் நிர்ணயிப்பதில்லை.   சுற்றம் கனித்த செவியின் ...

கடல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை காலத்தின் ஓட்டத்தை நீரின் அலைகளாக உருவகித்து, இயற்கை, மனித இனம் மற்றும் வரலாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. மறைவு, இருள், மௌனம் ஆகியவற்றுக்குள் கூட புதிய விடியல் பிறக்கிறது. மண்ணை வளர்த்தும், இனத்தை உருவாக்கியும், கலை- பண்பாட்டை வடிவமைத்தும் வர- லாற்றில் தடம் பதித்த முன்னோடிகளின் உழைப்பு, சொல்லப்படாத காவியங்களாக  உறங்குகிறது. தற்காலிகமான உடமைகளைத் தாண்டி, மண்ணின் ஆழத்தில் தவமிருக்கும் ஒளி, தடைகளை உடைத்து எதிர்காலத்தை நோக்கி எழும் நம்பிக்கையாக கவிதை நிறைவு பெறுகிறது. கவிதை காலத்தின் பதிவுகளை நீர் ஏட்டில் குறித்த அலையின் பக்கங்கள், திறக்க கரை தொடுகின்றன நட்சத்திரங்களின் மறைவில் புதிய விடியல் தோன்றும் இயற்கையின் விதியில்- மண் வளர்த்து இனம் வளர்த்து கற்சிற்பம் வடிவமைத்து வரலாற்று ஏட்டில் கால்பதித்த முன்னோடிகள் கதிரவனின் முரண்பட்ட பாகத்துக்குள் நீரை மட்டும் சுவாசித்து காரிருளில் அமைதியாய் உறங்கும் காவியங்கள்  நூறாயிரம், வரலாற்றின் பாதங்கள் நடைத்தளறாது முன்னோக்கி செல்ல அடியமைத்துக் காத்திருக்கின்றன கண் பட்ட  உடமைக...

ஒழிவு

படம்
ஒரு  செயலை செய்து முடித்தபின் கிடைக்கும்  இடைவெளியை "ஒழிவு" என சங்கக்காலத்தில்  பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒழிவு ஒளி  துயிலும் நள்ளிரவில், மூடுபனி காற்றை மறித்து வெண்ணிலா நிலமாளும் பகலிரவு. மலரின் போர்வை அகற்றி, இலை உதிர்த்து, வேர் கொண்டு வான் சேரநினைக்கும் மரக்கூடு. பாதத்தின் வன்மம் கரைய, வெப்பம் தாங்கி நிற்க நிலமுறங்கும் பனிமேடு. மேன்மையின் மகுடமும் ஆற்றாமையின்  ஆயுட்காலமும் மறைந்திருக்கும் காலச்சக்கரம். நாட்கள் செழிக்க, திங்கள் உறவுசேர இரு குணங்களில்  காத்திருக்கும் ஒற்றை அனுஆற்றல். அறிவியலில் விழி அமர்த்தி மௌனமாய் கடந்து செல்லும் ஆன்மீகம். நிறங்களின்  சுதந்திரத்தில் மனமகிழும்  உணர்வுகள்: சிவப்பின் சிறைவாசத்தில் அகமகிழும் நினைவுகள். உட்பொருள் உயிர் மட்டும் ஒயாமல் கடந்து செல்ல, சில மணித் துளிகள் அசையாமல் வீற்றிருக்க,காலமாய் விரும்புவது அமைதி. அசைவில்லா ஆற்றலுக்கும் மனமுண்டு, ஏக்கமும் உண்டு. இயற்கை சாராத முன்னெடுப்புகள் அமைதியை உருக்குலைய வைக்கும் தருணம் இயற்கையும அமைதி இழந்து போராட்டம் காணும். பாரம் தாங்கும் நெல்மணிகளும் குவியலில் ஒய்வு...

அறியாதது

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை வாழ்க்கையின் பல பரிணாமங்களை ஆழமாக ஆராயும் தத்துவப் பயணமாகும். மண், மழை, விதி, காற்று, வானவில், போன்ற இயற்கை உருவகங்களின் மூலம் மனிதன் அனுபவிக்கும் உணர்வுகள், உறவுகள், உண்மை, துரோகம், நினைவுகள் ஆகியவை வெளிப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதை உணரும் தனித்தன்மை இருக்கிறது என்ற கருத்தை கவிதை வலியுறுத்துகிறது. இறுதியில் மனிதன் அறிந்ததாக நினைப்பது எல்லாம் அறியாமையின் தொடக்கமே என்றும், விழித்திருந்தாலும் முழு பார்வை இல்லாத நிலையிலேயே வாழ்கிறான் என்றும் ஒரு ஆழமான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. கவிதை மண் புழுதியின் ஏக்கம் மழை சாரல் அறியும். விண்கல் பயணம் ஆழ்துளை அறியும். விழுதுகள் படரும் நேரம் விதி அறியும். பிறப்பின் காலம் வம்சம் அறியும். எண்ணங்கள் அசைபோடும் வேகம் காற்று  அறியும். உயிர்தூறல்  எதுவரை வாழ்நாள் அறியும். நிறங்களின் ஆயுட்காலம் வானவில் அறியும். உண்மை இடறிய கணம் துரோகம் அறியும். நிலையில்லா நிலத்தின் அகந்தை கல்தூண் அறியும். கடந்த காலத்தின் சுமை வரும்காலம் அறியும். வீரத்தின் வலிமை மகுடம் அறியும். புலமை புகுந்த வரிகள் மொழி அறியும். உறவில் பதிந்த கீறல்கள...

அணங்கு

படம்
உள்ளடக்கம் " அணங்கு"  என்னும் சொல் சங்க இலக்கியத்தில் பெண்ணைக்  குறிப்பதாகும். ஒரு தாயின் இதயத்தில் பிறந்த இக்கவிதை தன் மகளை  ஒளியாய், இனிமையாய், கருணையாய் காணும் உணர்வை வெளிப்படுத்துகிறது. மழலை சிரிப்பிலும், சிறு செயல்களிலும் வாழ்க்கையின் உண்மைமயான அர்த்தத்தை காணும் தாயின் பயணம் இது. கவிதை மின் மினியின் மகளாய் ஒளி பகிர்ந்து தந்தாய், தேனீக்களின் அரசியாய் சுவை உணர வைத்தாய், முத்தமிழின் மூத்தவளாய் மன்றம் ஏற்க வந்தாய், குழலின் மொழியாய் செவி சுவைக்க நின்றாய், கொடியின் இடையாய் பருவம் ஏற்று மலர்ந்தாய், மீன் வடித்த விழியாய் கருணை கற்று வளர்ந்தாய், மகிழ்ச்சியின் சாமரம் வீசி அகம் குளிர்வித்தாய், உருவமாய் எனை வளர்த்த என் உயிர் துடிப்பில்  கண் அயர்ந்து, என்  மூச்சில் குளிர் காய்ந்து, உன் தவம் கலைத்து என் பார்வையின் நிழலில், நீ அறிந்ததை மழலை மொழியில் விளக்க துடித்தாய், சுவையின் இலக்கணமாய் நாவில் தவழ்ந்த  இசையயை மெய் மறந்து ஆற்றலானேன். பிறவி ஏழும் பொய்யானது உறவின் தாகம் தணியாமல்:  முடிவுரையின்  தொடக்கமாய் உதித்தாய் கடந்த காலங்களின் சுமை விலகி முழுமையடைந்தேன். ...

வாழ்த்து

படம்
நான் பதித்த தடங்களுக்கும் உணர்வுகள் உண்டு நான் நுகர்ந்த சுவாசத்திற்கும் புதுமை உண்டு நான் விழித்த உதயத்திற்கும் நன்மை உண்டு நான் சூழ்ந்த இயற்கைக்கும் நிகழ்வுகள் உண்டு நான் பழித்த சொல்லுக்கும் நாட்டம் உண்டு நான் ரசித்த மலருக்கும் கற்பனை உண்டு நான் போற்றிய நல்லிசைக்கும் ஏற்றம் உண்டு நான் வகுத்த வாழ்வியலில் இலக்கணம் உண்டு நான் பகிர்ந்த உறவுக்கும் வாசம் உண்டு நான் துறந்த வாசலுக்கும் மகிமை உண்டு. இரு விழியில் இரு பார்வையின் கட்டளைகள் மறந்து, உதிர்ந்த மலரின் நறுமணத்தில் பயணம் தொடர- நெடு வானம் மேற்கூரையாய், நட்சத்திரங்கள் ஒளி வீச, புது நிலவின் திலகம் சுமந்து, கீழ் வானின் சித்திரம் கண்டு ஒன்று கலந்த பாதங்களில் வாழ்வு நகர இரு இதயங்களின்  ஒற்றை நல்வாழ்த்துக்கள்.

பிறை

படம்
செங்கதிர் அரசாளும் நீலத் திரையில்,  மௌனத்தின் முழக்கத்தில் துளிர்விடும் வெண்பூக்கள் மலர்ந்தும், மலராமலும் கண் சிமிட்ட- பிறை மடந்தை குலம் தழைக்க  துயில் துறக்கும் இருள் காலம். விதிக்கப்பட்ட வடிவத்திற்குள் கறை குடியேறியும் வாசல் மறுத்ததில்லை. கார் முகில் கூட்டம் மறைத்த போதும் தோய்வுற்றதில்லை. இருள் விழுங்கி  செரித்தும் சலனமில்லை. உதித்த பொழுதின் துளிகளுக்கும் சான்றில்லை. கரையும் நேரம் காற்றுக்கும் தென்படவில்லை. இல்லையின் பயணத்தில் நிலையில்லா ஆற்றல் நிறைவாய் மறைந்திருப்பது- விரிந்த சுவாசத்திற்குள் அகப்பட்டிருக்கும்  இயற்கையின் எழுதப்பட்ட இரகசியம்.  இரகசியத்தில்- பதியம் வைத்த புலண்களுக்கு பிறை சேரா  நிலமென்று எதுவுமில்லை. ஒளியோடு பயணிக்கும் மனம் மறைத்த  உயிர்களுக்கு உயரிய மரபும் பயணற்று போனதில்லை, மாறாக காரியங்களின் சுமைகளால் தோய்வடைந்து, புதுப்பிக்க ஆழ்ந்த நித்திரையில் அடைப்பட்டிருக்கின்றன. நாட்குறிப்பு கண்கள் விழித்திராத காட்சிகளும், செவிகள் நெருங்கிடாத செய்திகளும், கரங்கள் வருடா உருவங்களும் மர்மமாய்  புணரப்பட்டாலும், அதனுள் மறைந்தாருக்க...

வறுமை

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை, வறுமையை ஒரு பொருளாதார நிலையாக அல்லாமல், மனித உடல், உயிர், சுவாசம், காலம் மற்றும் சமூக அடுக்குகள் அனைத்தையும் ஆக்கிரமிக்கும் முழுமையான அனுபவமாகப் பதிவு செய்கிறது. வாய்ப்புகள் இருந்தும் அனுமதி மறுக்கப்படும் சமூக வாசல்கள், அடிப்படை தேவைகளே அடைப்பாக மாறும் வாழ்வியல் சூழல், உயிர் காக்க வேண்டிய ஆதிமூல சக்திகள் உயிர் கெடுக்கும் பசியாக உருமாறும் நிலை ஆகியவை இதில் தீவிரமாக வெளிப்படுகின்றன. இறுதியில் மண்ணுக்குள் புதைந்திருக்கும் கம்பீரம் மேல்தளத்தை அசைக்க முனைவது மூலம், ஒடுக்கப்பட்ட வாழ்வின் அடக்கமில்லாத எதிர்ப்பும் மறைந்த வலிமையும் உணர்த்தப்படுகிறது. கவிதை முழுமை பெற்ற அடித்தளங்கள் காற்றில் பயணிக்க தேர்ந்தெடுக்கப்படாதவை- நிறைவாகிய வாசல் வரவேற்கவும் அனுமதி இல்லாதவை. வறுமையின் பிடியில்- செந்நீர் ஊற்று ஊடுருவ மறுக்கும், வெள்ளைக் கூட்டின் நகலாய் படர்ந்திருக்கும் மேலாடை சுருக்கமும் விரிவடைய மறுக்கும், ஆதி மனிதனின் உயிர் வளர்த்த நெருப்பு, பசியாய் உருவெடுத்து உயிர் கெடுக்க இசையும், உடல் சுமக்கும் பாதங்களும், தடம் காணும் கைகளும் பாரமென மண்ணில் இளைப்பாற நினைக்கும், விழித்தி...

இணைப்பு

படம்
மனம் அறியா மலருக்குள் கதிரவன் கண்சிமிட்டும் பந்நிற குவியல்கள். திசை   அறியா காற்றுக்கு நிலம் ஆளும் பூமியில் எதிர்வினையற்ற அதிகாரம். வரையரையில்லா கடலுக்கு வான் உதிர்த்த நன்னீரில் அலைகளின் அரங்கேற்றம். காற்றில் மிதக்கும்  பறவைக்கு நிலம் மூழ்கும் பேரலையின் இரகசிய விண்ணப்பம். மீன் வடித்த விழித்தோகைக்குள் அகன்ற பூமியின் காட்சி கூடாரம். சிதறிய வண்ணங்களின் தொகுப்பில் வானுயர மகுடம் சூடும் வானவில். உறைவிடம் இல்லா உடலுக்குள், உயிர் சாய்க்கும் சுமைகள் தாங்கும்  மெல்லிய மனது. நிலையில்லா உறவுக்குள் நிழல் தேடி, வேரூன்ற நினைக்கும் வாழ்க்கை பயணம். பயணங்கள் தொடர, முன்னுரை வரையும் காலச் சக்கரம், முடிவுரை தேடி, இரவு பகல் வட்டமிடுகின்றன.