நிறம்

உள்ளடக்கம்

இந்தக் கவிதை " நிறம்" என்பதை வெறும் கண்ணுக்குப் புலப்படும் தோற்றமாக அல்லாமல், இயற்கை, உயிர், காலம்,  இளமை, முதுமை ஆகிய அனைத்தையும் இணைக்கும் ஒரு மௌன சக்தியாகப் பார்க்கிறது. மலர்கள், பசுமை, இரத்த ஒட்டம், கூந்தல், சூரியன் போன்ற  உவமைகள் மூலம் நிறம் வாழ்க்கையின் தொடர்ச்சி, பாதுகாப்பு, உயிர்ப்பாடு மற்றும் அமைதியான பயணம் என்பவற்றிறன் அடையாளமாக வெளிப்படுகிறது.


கவிதை

நிறம் என்னும் மாயை,
காற்றில் கரைந்திருக்க,
இரகசியம் அறிந்த மலர்கள் 
காற்றோடு உறவாடி,
நிறமெனும் இயற்கை
ஆபரணம் அணிந்து,
வழிவழியாய் அழகின்
மகுடம் சாயாமல் வீற்றிருக்கின்றன.

பூமியின் கட்டுடல்
தளறாமல் இருகப்பற்றி,
சேவகனாய் கற்காலம் தொட்டு
இன்று வரை கவசமாய்,
பசுமையாய் விழித்திருக்கும்
வண்ணம் நிறத்தின்  தளபதி.

உயிரின் தாகம்  தீர்க்க
வற்றாது பாய்ந்தோடும் செந்நீர்,
செவ்வானம் நிறம் தொட்டு
உடலெனும் கூட்டுக்குள்
வளைந்து நெளிந்து வற்றாது
சப்தமின்றி பயனிக்கும்.

இளமை என்னும கருங்கூந்தல்
வெந்நிற  முதுமைக்குள்
ஒளிந்திருப்பதைப் போல,
நிறத்தின் உவமைகள்
கைக்குள் அடங்காதவை-
கதிரவனின் ஒற்றைக்
குடைக்குள் இடம் தேடி
இளைப்பாரும் நிறமிகள்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடமை

இயற்கை

நானும் அவளும்