நானும் அவளும்

நானும் அவளும்

உள்ளடக்கம்

இயற்கையின் மடியில் மலர் ஒரு உயிராகப் பிறந்து, மொட்டாகி, மலர்ந்து வண்ணத்துப் பூச்சிகளுடன் உறவாடி தன் வாழ்வை நிறைவு செய்து உதிரும் தருணம் வரை நிகழும் வாழ்க்கைச் சுழற்சியை இந்தக் கவிதை சித்தரிக்கிறது. உதிர்வு இங்கு இழப்பாக அல்ல: தொடர்ச்சிக்கான அமைதியான பிரியாவிடையாக வெளிப்படுகிறது

கவிதை

இலை  தாங்கிய  மொட்டுக்கள்
இரவின்  காவலில்
இதழ்  விரித்து,
பனித்துளியில்  நீராடி,
வெண்கதிரில்  இதழ்  உலர்த்தி,
வண்டிசையின்  வரவேற்பில்
தேவதைகள்  கைப்பட
ஒற்றை  நாற்காலியில்
வீற்றிருக்கின்றன.

முட்கள்  பதித்த திரைமறைவில்
தேர்ந்தெடுக்கப்பட்ட  வண்ணங்களை,
ஓவியமாய்  தீட்டப்பட்ட  இறகுகள்,
காற்றினும்  மெல்லிய  இடை  விரிந்து,
இயற்கை  பகிர்ந்த 
பருவ கால இரகசியத்தை
கொண்டு  சேர்க்கும்
வண்ணத்து  பூச்சி
மலரின்  உற்ற தோழன்.

எண்களின்  முதன்மையாய்
வரிசைகள்  பின்தொடரும்,
ஒற்றைப் பொழுதின்
விதி சுமந்து
இயற்கையுடன் ஒன்றென கலந்த
உயிரின்  இழப்பை,
மலர் பொழிந்து,
பிரியாவிடை  அளிக்கும் மலரினம்-
பின் தொடரும்  அரும்புகள் உதிக்க
மண்கலந்த  உறவுகளோடு
காத்திருக்கின்றன....

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடமை

உருவம்